பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கை (1909)

ஐக்கிய இராச்சியத்திற்கும் சயாம் இராச்சியத்திற்கும் கையெழுத்திடப்பட்ட ஓர் ஒப்பந்தம்

பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கை (1909) அல்லது பாங்காக் ஒப்பந்தம் (1909); (Anglo-Siamese Treaty of 1909 அல்லது Bangkok Treaty of 1909) என்பது ஐக்கிய இராச்சியத்திற்கும் சயாம் இராச்சியத்திற்கும் இடையே 1909 மார்ச் 10-ஆம் தேதி பாங்காக்கில் கையெழுத்திடப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும்.[1][2]

பிரித்தானிய - சயாமிய உடன்படிக்கை (1909)
Anglo-Siamese Treaty of (1909)
அமைப்பு
  • ஐக்கிய இராச்சியத்திடம் கிளாந்தான், திராங்கானு, கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலங்கள் ஒப்படைப்பு.
  • ஐக்கிய இராச்சியம் சயாமிய இறையாண்மையை அங்கீகரித்தது
கையெழுத்திட்டது10 மார்ச் 1909
இடம்பாங்காக்
நடைமுறைக்கு வந்தது9 சூலை 1909; 115 ஆண்டுகள் முன்னர் (1909-07-09)
கையெழுத்திட்டோர்
  • தேவவாங்சே வரபாக்கம்
    (Devawongse Varopakarn)
  • ஐக்கிய இராச்சியம் சர் ரால்ப் பெசட்
    Sir Ralph Paget
தரப்புகள்
மொழிஆங்கிலம்

1909 சூலை 9-ஆம் தேதி லண்டனில் ஒப்புதல்கள் பரிமாறப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலமாகப் புதிய மலேசியா-தாய்லாந்து எல்லை நிறுவப்பட்டது. இப்போதைய பட்டாணி, நாரதிவாட், சோங்கலா, சத்துன், யாலா, ஆகிய பகுதிகள் தாய்லாந்து கட்டுப்பாட்டிற்குள் நிலை நிறுத்தப் படுத்தப்பட்டன.[3]

பொது

தொகு

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக கெடா மாநிலம், பெர்லிஸ் மாநிலம், கிளாந்தான் மாநிலம், திராங்கானு மாநிலம் எனும் மலாய் மாநிலங்களைத் தாய்லாந்து அரசாங்கம் பிரித்தானிய மலாயா அரசாங்கத்திடம் ஒப்படைத்தது.[4]

இரகசிய இராணுவ ஒப்பந்தம்

தொகு

இரண்டாம் உலகப் போரின் போது, மலாயா மற்றும் தென்கிழக்காசியா நாடுகளைக் கைப்பற்றும் நோக்கத்தில், ஜப்பானியப் பேரரசு, தனது இராணுவப் படைகளைத் தாய்லாந்தின் வழியாக அனுப்புவதற்காக தாய்லாந்து கடற்கரைகளில் 1941 டிசம்பர் 8-ஆம் தேதி முற்றுகையிட்டது.

தாய்லாந்து இராணுவத்தினருக்கும் ஜப்பானிய இராணுவத்தினருக்கும் இடையே ஆறு முதல் எட்டு மணி நேரம் சண்டை நடந்தது. அதை அடுத்து தாய்லாந்து சமரசத்திற்கு வந்தது.[5]

அமெரிக்கா மீது போர்ப் பிரகடனம்

தொகு

தாய்லாந்து வழியாகச் செல்வதற்கு ஜப்பானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 1941 டிசம்பர் 21-ஆம் தேதி, ஜப்பானுடன் இரகசியமாக ஓர் இராணுவ ஒப்பந்தத்தை தாய்லாந்து செய்து கொண்டது. இதன் மூலம் பிரித்தானியா, பிரான்சு நாடுகளிடம் தாய்லாந்து இழந்த பகுதிகளை மீட்டுத் தரவும் ஜப்பான் உடன்பட்டது. இதனை அடுத்து தாய்லாந்து அரசாங்கம் அமெரிக்கா; ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் மீதும் 1942 சனவரி 25-ஆம் தேதி போர்ப் பிரகடனத்தை அறிவித்தது.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. U.S. Department of State, Bureau of Intelligence and Research, Office of the Geographer, "International Boundary Study: Malaysia - Thailand Boundary," No. 57 பரணிடப்பட்டது 2006-09-16 at the வந்தவழி இயந்திரம், 15 November 1965.
  2. Siam. Treaty with Great Britain பரணிடப்பட்டது 2024-04-02 at the வந்தவழி இயந்திரம் Hamilton King. 13 May 1909.
  3. Great Britain, Treaty Series, No. 19 (1909)
  4. Annexed territories
  5. 5.0 5.1 Stuart-Fox, Martin (1997). A History of Laos. Cambridge University Press. pp. 24–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-59746-3.
  6. Simms, Peter; Simms, Sanda (2001). The Kingdoms of Laos: Six Hundred Years of History. Psychology Press. pp. 206–207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0700715312. பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.

மேலும் காண்க

தொகு