பிரியங்கா பவார்

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை

பிரியங்கா பவார் (Priyanka Pawar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதியன்று இவர் பிறந்தார். தென் கொரியாவின் இஞ்சியோன் நகரில் 2014 ஆம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் தங்கம் வென்றார். டின்ட்டு லூக்கா, மந்தீப் கவுர், ம. இரா. பூவம்மா ஆகியோர் இவருடன் ஓடி பதக்கம் பெற்ற மற்ற பெண்களாவர்.[2][3] விளையாட்டு சாதனையை முறியடிக்க அணி 3:28:68 நிமிடங்களில் தொலைவை ஓடிக் கடந்தது. 2002-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் போட்டியில் இந்தியா தொடர்ந்து 4-ஆவது முறையாக தங்கம் வென்றது.

பிரியங்கா பவார்
Priyanka Pawar
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு3 ஏப்ரல் 1988 (1988-04-03) (அகவை 36)[1]
முசாபர்நகர், உத்தரப் பிரதேசம்
உயரம்168 செ.மீ
எடை64 கி.கி
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)400 மீட்டர்
பதக்கத் தகவல்கள்
பெண்கள் தடகளம்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 இஞ்சியோன் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

முரண்பாடுகள் தொகு

ஊக்கமருந்து சிக்கல் தொகு

27 ஜூன் 2011 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதியன்று பாட்டியாலாவில் மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் பிரியங்கா பவாரும் மற்ற ஐந்து விளையாட்டு வீரர்களும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியுற்றனர். இதன் விளைவாக இவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டது.[4][5][6] 2016 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் இவர் சோதனை செய்யப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.[7]

பாலியல் துன்புறுத்தல் தொகு

2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியன்று அன்று பிரியங்கா பவாரின் தந்தை சிவ் குமார் பவார், இரயில்வே குழு பொறுப்பாளர் அனு சிங் பிரியங்காவை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினார்.[8] முன்னதாக பிரியங்காவின் தம்பி அருண் பன்வாரை உத்தரபிரதேச இளையோர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அணியில் சேர்க்குமாறு அணி அதிகாரிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பவார் இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக இரயில்வே ஊழியரின் குடும்பத்தினர் இரயில்வே மற்றும் விளையாட்டு அமைச்சகங்களில் புகார் அளித்தனர்.[9][10][11]

மேற்கோள்கள் தொகு

  1. "About". sporttu. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
  2. "Indian eves clinch 4x400m relay gold at Asian Games 2014; set new Asiad record". India.Com. 2 October 2014. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
  3. "search Medals". 2014 Asian Games Official website. Archived from the original on 2 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2014.
  4. "CWG, Asiad gold medallists Ashwini Akkunji and Priyanka Panwar fail dope test". 4 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
  5. "Banned athletes cannot cry ignorance: Report". 23 December 2011. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
  6. "Ashwini, Priyanka's 'B' samples positive". Rediff.com. 4 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
  7. Flash-News des Tages – Indische Langsprinterin Priyanka Pawar für acht Jahre gesperrt 13 September 2017, Retrieved 14 September 2017
  8. "Railways athlete alleges sexual harassment". http://indiatoday.intoday.in. 17 February 2011. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014. {{cite web}}: External link in |publisher= (help)
  9. "Railway official accused of sexual harassment by CWG medallist". News One. 17 February 2011. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
  10. "Railway official accused of sexual harassment by CWG medallist". IANS India Private Limited. 17 February 2011. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
  11. "Sprinter's parent allege sexual harassment by official". 17 February 2011. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியங்கா_பவார்&oldid=3763140" இலிருந்து மீள்விக்கப்பட்டது