பிரியாத வரம் வேண்டும் (தொலைக்காட்சித் தொடர்)
பிரியாத வரம் வேண்டும் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 17 சூன் 2019 முதல் 1 ஆகத்து 2020 வரை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பான கனவுருப்புனைவு காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்தத் தொடரில் விமல் வெங்கடேசன், பிரியங்கா, மதுமிதா போன்றவர்கள் நடித்திருந்தனர்.[2] இத்தொடர் கொரோனா தொற்றுநோய் காரணமாக 1 ஆகத்து 2020 அன்று 203 அத்தியாயங்களுடன் முடிவடைந்தது. [3]
பிரியாத வரம் வேண்டும் | |
---|---|
வகை | |
எழுத்து | ராஜ் |
திரைக்கதை | நா. நமசிவாயம் |
இயக்கம் | தமிழ் அ. இராமச்சந்திரன் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 203 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | கி.பாலமுருகன் |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 17 சூன் 2019 1 ஆகத்து 2020 | –
கதைச்சுருக்கம்
தொகுமுன் ஜென்மத்தில் காதலிக்கும் ரிஷி மற்றும் துர்கா. இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துர்காவை ரிஷியின் குடும்பத்தினர் கொலை செய்கிறார். கதாநாயகனும் கொல்லப்படுகிறான். 300 வருடம் கழித்து மறுபடியும் சந்திக்கும் காதல் ஜோடிகள். இந்த ஜென்மத்திலும் இவர்களின் காதலுக்கு எதிராக இருக்கும் குடும்பம். தடைகளை தாண்டி முன் ஜென்மத்தில் கதாநாயகனை கொலை செய்தது யார்? இந்த ஜென்மத்தில் இவர்கள் எப்படி ஒன்று சேரப்போகின்றார்கள் என்பது தான் கதை.
நடிகர்கள்
தொகுமுதன்மை கதாபாத்திரம்
தொகு- விமல் வெங்கடேசன் - ரிஷி
- மதுமிதா - துர்கா / அமராவதி
- பிரியங்கா - மது / மித்ரா சேனா
- மாமில்லா ஷைலஜா பிரியா - சித்ரா
துணை கதாபாத்திரம்
தொகு- அகிலா - அபர்ணா
- காவேரி - அபர்ணாவின் நாத்தனார்
- துரைமணி - அபர்ணாவின் கணவன்
- அந்திரேயா ஜேசுதாஸ் - ருத்ரைய்யா
நடிகர்களின் தேர்வு
தொகுஇந்தத் தொடரின் நாயகியாக புதுமுக நடிகை மதுமிதா ஏழை பெண்ணாக துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரிஷி என்ற கதாபாத்திரத்தில் விமல் வெங்கடேசன் பணக்காரவீட்டு பையனாக நடித்திருந்தார். அ. இராமச்சந்திரன் என்பவர் இந்த தொடரை இயக்கியிருந்தார். இந்தத் தொடருக்காக 2 கோடி ரூபாயில் பிரமாண்டமான அரண்மனை வீடு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[4]
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
தொகுஇந்தத் தொடர் முதல் முதலில் 17 சூன் 2019 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 4, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி, பிப்ரவரி 24, 2020 முதல் மாலை 6 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு முடிவடைந்தது.
மதிப்பீடுகள்
தொகுகீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2019 | 3.58% | 4.44% |
2020 | 2.97% | 3.46% |
2.96% | 3.64% |
சர்வதேச ஒளிபரப்பு
தொகு- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "பிரியாத வரம் வேண்டும் - புதிய தொடர்". www.onenov.in. Archived from the original on 2019-06-20. பார்க்கப்பட்ட நாள் 2019-09-11.
- ↑ "Piriyadha Varam Vendum (TV Series) Serial Wiki, Cast & Crew, Story, Timing – Zee Tamil". cinemawoods.net.
- ↑ "தொலைக்காட்சித் தொடர்கள் கொரோனா தொற்றுநோய் மூலம் முடிவடைகிறது". tamil.news18.com.
- ↑ "``இதைப் பார்த்தா ஒரு சினிமா ஃபீல் வரும்! சீரியலுக்காக 17,500 சதுர அடியில் பிரமாண்ட செட்!". cinema.vikatan.com.
வெளி இணைப்புகள்
தொகுஜீ தமிழ் : திங்கள் - வெள்ளி மாலை 6 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | பிரியாத வரம் வேண்டும் | அடுத்த நிகழ்ச்சி |
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் | - |
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | பிரியாத வரம் வேண்டும் | அடுத்த நிகழ்ச்சி |
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் | பூவே பூச்சூடவா |
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி இரவு 7 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | பிரியாத வரம் வேண்டும் | அடுத்த நிகழ்ச்சி |
அழகிய தமிழ் மகள் | நாச்சியார்புரம் |