பிரியா ஆபிரகாம்

இந்திய மருத்துவர்

பிரியா ஆபிரகாம் (Priya Abraham) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஆவார். விஞ்ஞானியாகவும் நாட்டின் முன்னணி நச்சுயிரியல் வல்லுநராகவும் செயல்படுகிறார். கோவிட்-2019 நச்சுயிரி, கடுமையான தீவிர சுவாசத் தொகுதி கொரோனா வைரசு 2 நச்சுயிரிகளின் சோதனை நுட்பங்கள் மற்றும் மரபணு ஆய்வுகள் துறையில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக பெரிதும் அறியப்படுகிறார். [1] புனேவில் உள்ள தேசிய வைரசு நச்சுயிரி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவரது குழு இந்தியாவில் கோவிட்-19 வைரசின் முதல் மாதிரியைக் கண்டறிந்து அதை தனிமைப்படுத்தியது. [2]

பிரியா அப்ரகாம்
Priya Abraham
பிறப்புகோட்டயம் மாவட்டம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
துறைநச்சுயிரியல், மருத்துவம்
கல்விமுதுநிலை மருத்துவம் மற்றும் முனைவர்
கல்வி கற்ற இடங்கள்கிருத்தவ மருத்துவக் கல்லூரி

சுயசரிதை

தொகு

பிரியா. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1981 ஆம் ஆண்டில் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் உயிரியலில் முதுநிலை பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் வைரசு மருத்துவப் பிரிவின் தலைவராக இருந்தார். கல்லீரல் அழற்சி ஹெபடைடிஸ் மற்றும் மனித பாப்பிலோமா வைரசு பிரிவுகளில் முதலில் ஆர்வம் காட்டினார். மருத்துவமனையில் பணியாற்றும் போது பல வைரசு தொற்றுகளுக்கான குழுக்களிலும், பல வைரசு தொற்றுகள் குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றியுள்ளார். தேசிய வைரசு தொற்று கண்காணிப்பு ஆராய்ச்சியிலும் பிரியா ஆபிரகாம் பங்கேற்றுள்ளார். [3]

இந்தியாவில் கோவிட்-19 பரவுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, புனேவில் உள்ள ஐசிஎம்ஆர் - தேசிய வைரசு நிறுவனத்தின் இயக்குநராக பிரியா பொறுப்பேற்றார். பிரியா மற்றும் குழுவினரின் செயல்பாடுகளான, பல்வேறு சோதனைக் கூடங்களுக்கு சோதனைக் கருவிகளைக் கொண்டு சென்றதன் மூலமும், புதிதாக உருவாகி வரும் மாறுபாடுகளைக் கண்காணிப்பதன் மூலமும், வைரசின் பரவலைக் கட்டுப்படுத்தும் திசையில் இந்தியாவை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையச் செய்தது. செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இவர் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Meet Priya Abraham, director of National Institute of Virology in Pune". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
  2. "Dr Priya Abraham: For The Love Of Virology". Forbes India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
  3. "Interview: Dr. Priya Abraham, Clinical Virology". Vellore Christian Medical College Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-04. பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
  4. "രണ്ട് മലയാളി ഗവേഷകർക്ക് ഇന്ത്യൻ നാഷണൽ സയൻസ് അക്കാദമി ഫെലോഷിപ്പ്". Mathrubhumi (in ஆங்கிலம்). 2023-09-14. பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_ஆபிரகாம்&oldid=3896997" இலிருந்து மீள்விக்கப்பட்டது