பிரிஸ்பேன் வரலாறு
ஆத்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரின் எழுதப்பட்ட வரலாறு 1799ஆம் ஆண்டு ஆரம்பிக்கிறது. இப்பகுதியில் பலகாலமாக ஜாகிரா மற்றும் டுர்ருபல் இனத்தைச் சார்ந்த பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். ஆனால் மேத்தியூ பிலிண்டர்சு என்பவர் போர்ட் ஜாக்சனிலிருந்து மொராட்டன் வளைகுடாப் பகுதியை ஆய்வு செய்ய வந்தது 1799 ஆம் ஆண்டு. முதன்முதலில் சிட்னியிலிருந்து கொண்டுவரப்பட்ட பிரித்தானியக் கைதிகளுக்கான சிறைக் குடியேற்றமாகவே பிரிஸ்பேன் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தப் பகுதி வேளாண்மைக்கு உகந்ததாகவும், மரங்கள், மீன் மற்றும் பலதரப்பட்ட வளங்களையுடையதாகவும் இருந்ததால், 1838 ஆம் ஆண்டு முதல் இந்தப் பகுதி கைதிகள் அல்லாத ஏனையோரும் குடியேற அனுமதிக்கப்பட்டனர். 1859ல் பிரிஸ்பேன் நகராட்சியாக மாறியது. 1924ல் பெருநகரப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.
பெயர் வரலாறு
தொகுடுரூபல் மக்கள் பிரிஸ்பேன் பகுதியை மீயான்சின் (Meeaan-jin)[1] என்ற பெயரில் அழைத்தனர். தற்போதைய பிரிஸ்பேன் நகரத்திற்கு சர் தாமஸ் பிரிஸ்பேன் (1773-1860) என்பவரின் பெயர் சூட்டப்பட்டது. சர் தாமஸ் பிரிஸ்பேன் ஸ்காட்லாந்து நாட்டின் ஐயர்சைர் என்ற ஊரில் பிறந்தவர். பிரித்தானியப் படைவீரராகவும், காலனி நிர்வாகியாவும் பணியாற்றியவர். பிரிஸ்பேன் நகரத்திற்குப் பெயர் சூட்டப்பட்டபோது அவர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஆளுனராக இருந்தார்.
சான்றுகள்
தொகு- ↑ "Turrubal history". dakibudcha.com. Archived from the original (Website) on 2018-10-02. பார்க்கப்பட்ட நாள் 2008-02-13.