பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ

பால்டிக் செருமானிய வானியலாளர்

பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம் வான் சுத்ரூவ (Friedrich Georg Wilhelm von Struve, உருசியம்: Васи́лий Я́ковлевич Стру́ве, வசீலி யாக்கொவ்லேவிச் ஸ்த்ருவே; 15 ஏப்பிரல் 1793 – 23 நவம்பர் 1864 (யூலியன்: நவம்பர் 11)) ஒரு செருமானிய-உருசிய வானியலாளர் ஆவார்.

பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம் வான் சுத்ரூவ
Friedrich Georg Wilhelm von Struve
பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம் வான் சுத்ரூவ (1793-1864)
பிறப்பு(1793-04-15)15 ஏப்ரல் 1793
அல்டோனா (இன்று அம்பர்கின் ஒரு பகுதி), கோல்சுடீனின் டச்சி
இறப்பு23 நவம்பர் 1864(1864-11-23) (அகவை 71)
புனித பீட்டர்சுபர்கு
குடியுரிமைடென்மார்க்கியர், உருசியர்[1]
தேசியம்பால்டிக் செருமானியர்[2]
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்தோர்பத் பேரரசு பல்கலைக்கழகம்
விருதுகள்அரசு பதக்கம் (1827)

வாழ்க்கை தொகு

இவர் கோல்சுடீன் டச்சியைச் சார்ந்த அம்பர்கில் உள்ள அல்டோனாவில் பிறந்தார். கோல்சுடீன் டச்சி அப்போதைய டென்மார்க்-நார்வே அரசுகளின் பகுதியாக இருந்தது. இவரது தந்தையார் [[யாகோபு சுத்ரூவ (1755–1841) ஆவார். இவரது தந்தையார் படைத்துறைப்பணியைத் தவிர்க்க தன் குடும்பத்துடன் பிரெஞ்சு பேரரசில் இருந்து உருசியப் பேரரசில் இருந்த தோர்பாத்துக்கு டென்மர்க் கடவுச் சீட்டுவழி இடமாறினார்.[1][3][4][5]

இவர் 1808 இல் தோர்பாத் இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இங்கு இவர் மொழியியல் பயின்றார். அனாலும் விரைவில் வானியலுக்குத் திரும்பினார். இவர் 1813 முதல் 1820வரை பல்கலைக்கழகத்தில் பாடம் எடுத்தவாறே தோர்பாத் வான்காணகத்தில் வானியல் தரவுகளைத் திரட்டினார். 1820 இல் அதன் பேராசிரியராகவும் இயக்குநராகவும் ஆனார். இவரது பயிற்றுவிப்பு இன்றுவரை பல்கலைக்கழகத்தில் நினைவுகூரும் அளவுக்குத் தரமாக அமைந்திருந்தது.[3][4][5]

இவர் இரட்டை விண்மீன்களைப் பற்றியும் புவிப்புற அளப்பிலும் தோர்பாத்தில் 1839 வரை ஆய்வு மேற்கொண்டார். இவர் 1839 இல் புனித பீட்டர்சுபர்கு அருகில் புல்கோவோ வான்காணகத்தை நிறுவி அதன் இயக்குநராக இருந்தார். இவர் 1826 இல் அரசு வானியல் கழகப் பொற்பதக்கத்தைப் பெற்றார். இவர் 1827 மார்ச்சில் அரசு கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு அரசு பதக்கத்தையும் அதே ஆண்டில் பெற்றுள்ளார்.[6]> இவர் 1833 இல் சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழக உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1834 இல் இவர் அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழக அயல்நாட்டு உறுப்பினரானார்.[7] இவர் 1843 இல் உருசியக் குடிமகன் ஆனார்.[8] இவர் உடல்நலக் குறைவால் 1862 இல் பனியில் இருந்து ஓய்வு பெற்றார்.[3][4][5]

குறுங்கோள் 768 சுத்ரூவீனா இவரது நினைவாகவும் ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ, எர்மேன் சுத்ரூவ அகியோரது நினைவாகவும் பெயர் இடப்பட்டுள்ளது. நிலாவின் சுத்ரூவ குழிப்பள்ளம் சுத்ரூவ குடும்பம் சார்ந்த மூன்று பின்வரும் வானியலாளர்களின் நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது: பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம், ஆட்டோ வில்கெல்ம், ஆட்டோ சுத்ரூவ.[9]

பணிகள் தொகு

இவர் பல ஆண்டுகள் தொடர்ந்து செய்த இரட்டை விண்மீன்களின் நோக்கிடுகளுக்காகப் பெயர்பெற்றவர். இரட்டை விண்மீன்கள் முன்பே வில்லியம் எர்செல், ஜான் எர்ழ்செல், ஜேம்சு சவுத் ஆகியோரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இவை அம்முயற்சிகள் அனைத்தையும் விஞ்சி வென்றார். இவர் மிகப் பேரளவு இரட்டை விண்மீன்களைக் கண்டுபிடித்து 1827 இல் இரட்டை விண்மீன்களுக்கான அட்டவணையை இரட்டை விண்மீன்களின் புதிய அட்டவணை (Catalogus novus stellarum duplicium) எனும் பெயரில் வெளியிட்டார்.[5]

இவர், உடுக்கணவெளி இடையிலான பொலிவுப் பருமை ஆய்வு ( Etudes d'Astronomie Stellaire: Sur la voie lactee et sur la distance des etoiles fixes) எனும் 1847 ஆம் ஆண்டுப் பணியில் இவர் தான் முதலில் உடுக்கணத்திடையிலான பொலிவுப் பருமை குறைந்து அழிதலின் விளைவுகளை இனங்கண்டார். ஆனால் இந்நிகழ்வுக்கான விளக்கத்தையோ இயங்குமுறையையோ இவர் கூறவில்லை.இவர் பொலிவு ஒரு கிலோபார்செக்குக்கு ஒரு பொலிவுப் பருமை குறைதலை மதிப்பிட்டார். இம்மதிப்பு இக்கால மதிப்பீடாகிய ஒரு கிலோபார்செக்குக்கு 0.7-1.0 பொலிவுப் பருமை குறைவு நெடுக்க மதிப்பீட்டிற்கு மிக நெருக்கமாக அமைதலைக் காணலாம்.[5]

பெரும்பாலான இரட்டை விண்மீன்கள் ஒளியியல் இரட்டைகளாக அல்லாமல் (முதன்முதலில் வில்லியம் எர்செல் கண்டுபிடித்த்தைப் போல) உண்மையில் இரும விண்மீன்களாகவே அமைவதால், இவை ஒன்று மற்றொன்றின் பொருண்மை மையத்தைச் சுற்றி வரும்போது மெதுவாகத் தம் இருப்பில் ஆண்டுகள் செல்ல செல்ல இடம்பெயர்கின்றன. எனவே இவர் 2714 இரட்டை விண்மீன்களின் நுண்னாளவைகளை 1824 முதல் 1837வரை அளந்தார். இந்நுண்ணளவுகளைத் தன் இரட்டை, பன்மை விண்மீன்களின் நுண்ணளவுகள் ( Stellarum duplicium et multiplicium mensurae micrometricae) எனும் ஆய்வில் வெளியிட்டார்.[5]

இவர் 1843 இல் ஒளிப்பிறழ்வு மாறிலியைத் துல்லியமாக கவனமாக அளந்தார். இவர்தான் முதன்முதலில் வேகாவின் இடமாறு தோற்றப்பிழையை அளந்தவர். இதற்கு முன்பே பிரீட்ரிக் பெசல் 61 சிகுனி விண்மீனின் இடமாறு தோற்றப்பிழையை அளந்துள்ளார்.[5]

இவர் புவிப்புற அளக்கையியலிலும் ஆர்வமுடன் இருந்தார். இவர் 1831 இல் Beschreibung der Breitengradmessung in den Ostseeprovinzen Russlands எனும் நூலை வெளியிட்டார். இவர் சுத்ரூவ புவிப்புற அளக்கை வில்லைத் தொடங்கி வைத்தார். இது நார்வே சேர்ந்த காம்மர்பெசுட்டில் இருந்து கருங்கடல் வரையிலான பத்து நாடுகள் ஊடாகச் செல்லும் முக்கோணமுறை அளக்கைக்கான 2,820கி.மீ நீளத்தினும் விஞ்சிய தொலைவுள்ள தொடராகும். இது புவியின் துல்லியமான வடிவத்தையும் உருவளவையும் நிறுவும் மேற்கோள் நீள்வட்டகம் ஆகும். இத்தொடரை யுனெசுகோ ஐரோப்பிய நினைவுச் சின்ன இடமாக 2005 இல் அறிவித்துள்ளது.[10]

குடும்பம் தொகு

இவர் சுத்ரூவக் குடும்ப ஐந்து தலைமுறை வானியலாளர்களில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர். இவர் ஆட்டோ சுத்ரூவவின் கொள்ளுப் பாட்டனாரும் ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவவின் தந்தையாரும் எர்மேன் சுத்ரூவ அவர்களின் தாத்தாவும் ஆவார். எர்மேன் சுத்ரூவ ஆட்டோ சுத்ரூவ அவர்களின் மாமனாவார்.

இவர் 1815 இல் எமில் வாலின் அல்டோனாவை (1796–1834) மணந்தார். இவர் 12 குழந்தைகளைப் பெற்றார். இவர்களில் 8 பேர் மட்டுமே சிறுபருவத்தைத் தாண்டினர். இவர்களில் ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ, என்றிச் வாசில்யேவிச் சுத்ரூவ (1822–1908) எனும்வேதியியலாளர், பெர்னார்டு வாசில்யேவிச் சுத்ரூவ (1827–1889) எனும் சைபீரிய அரசுப் பணியாளர்ஆகியோர் அடங்குவர். இவர் பீன்னர் அசுத்ரகான், பெர்ம் ஆகிய பகுதிகளின் ஆளுநர் ஆனார்.[3][5]

தன் முதல் மனைவி இறந்ததும் இவர் யோகன்னா என்றியேட்டா பிரான்சிசுகா பார்தெல்சு (1807–1867)அவர்களை மணந்தார். பிரான்சிசுகா பார்தெல்சு கணிதவியலாளர் மார்ட்டின் பார்தெல்சு அவர்களின் மகளாவார்,[3] இவரும் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இவர்களில் குறிப்பிட்த் தகுந்த செல்வாக்குள்ளவர் [[கார்ல் தெ சுத்ரூவ (1835–1907) ஆவார். இவர்ந்து தொடர்ந்து யப்பான், அமெரிக்கா, நதர்லாந்து ஆகிய நாடுகளில் தூதுவராகப் பணியாற்றினார்.[3][5]

பெர்னார்டின் மகன் பீட்டர் பெர்ன்கார்தோவிச் சுத்ரூவ (1870–1944) இக்குடும்பத்திலேயே உருசியாவில் பரவலாக அறியப்பட்டவர். இவர் உருசிய சனநாயகத் தொழிலாளர்க் கட்சி 1898 இல் தொடங்கியதும் அதற்கான கட்சிக் கொள்கை அறிக்கையை வரைந்த உருசிய மார்க்சியர்களுள் ஒருவராவார். கட்சி போல்செவிக், மென்செவிக் என பிரியும் முன்பே இவர் அரசியலமைப்பு சனநாயக்க் கடியில் சேர்ந்துவிட்டார். இக்கட்சி தாராளவியப் போக்கைப் பின்பற்றியது. அனைத்துப் புரட்சிக்கு முந்திய தூமாக்களிலும் இவர் இக்கட்சிப் பேராளராக விளங்கினார். இவர் 1917 சோவியத் புரட்சிக்குப் பிறகு புரட்சியின் காரணங்களைக் கண்டிது எழுதி வெள்ளை இயக்கத்தில் சேர்ந்து செயல்படலானார். பியோத்தர் விராங்கிலர், தெனிகின் ஆகியோர் அரசுகளில் இவர் அமைச்சர்களில் ஒருவராக விளங்கினார். அதற்குப் பிந்தைய முப்பது ஆண்டுகள் இவர் பாரீசில் வாழ்ந்தார். இவரது பிள்ளைகள் உருசியாவுக்கு வெளியே உருசியப் பழமரபு பேராயத்தில் புகழோடு விளங்கினர்.[3]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Batten, Alan Henry (1988). Resolute and undertaking characters: the lives of Wilhelm and Otto Struve. Dordrecht, Holland: Springer. பக். 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-277-2652-0. https://books.google.com/books?id=kXSjxkg0rRgC&pg=PA9. 
  2. Erki Tammiksaar. "Baltic German natural scientists in the science system of the Russian empire". Estonian Institute. Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 2017-03-25.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 V. K. Abalkin et al. Struve dynasty பரணிடப்பட்டது 2011-07-23 at the வந்தவழி இயந்திரம் (in Russian), St. Petersburg University
  4. 4.0 4.1 4.2 "Friedrich Georg Wilhelm Struve". Archived from the original on 2010-05-03. பார்க்கப்பட்ட நாள் 2017-03-26.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 Batten, A. H.. "The Struves of Pulkovo - A Family of Astronomers". Journal of the Royal Astronomical Society of Canada 71: 345. Bibcode: 1977JRASC..71..345B. 
  6. "Library and Archive Catalogue". Royal Society. பார்க்கப்பட்ட நாள் 22 October 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Book of Members, 1780–2010: Chapter S" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 15 September 2016.
  8. Batten, Alan Henry (1988). Resolute and undertaking characters: the lives of Wilhelm and Otto Struve. Dordrecht, Holland: Springer. பக். 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-277-2652-0. https://books.google.com/books?id=kXSjxkg0rRgC&pg=PA135. 
  9. Lutz D. Schmadel (2003). Dictionary of minor planet names. Springer. பக். 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-540-00238-3. https://books.google.com/books?id=KWrB1jPCa8AC&pg=PA73. 
  10. Struve Geodetic Arc, UNESCO

வெளி இணைப்புகள் தொகு