பிரீத்தி சரண்

பிரீத்தி சரண் (Preeti Saran)(பிறப்பு 5 செப்டம்பர் 1958[10]) என்பவர் இந்திய வெளியுறவுப் பணி 1982 தொகுதி ஊழியர் ஆவார்.[10] இவர் திசம்பர் 2018-ல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழுவிற்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சரண், 1 சனவரி 2019 முதல் 31 திசம்பர் 2022 வரையிலான ஒரு காலத்திற்கு இப்பதவியிலிருந்தார்.[11]

பிரீத்தி சரண்
செயலர் (கிழக்கு), வெளியுறவுத் துறை
பதவியில்
மார்ச் 2016[1] – 30 செப்டம்பர் 2018[2]
முன்னையவர்அணில் வாதாவா[3]
பின்னவர்விஜய் தக்கூர் சிங்[2]
இந்திய தூதர் வியட்நாம்[4][5]
பதவியில்
செப்டம்பர் 2013 – மார்ச் 2016[6]
பின்னவர்பி. ஆரிசு[7]
இந்தியத் தூதர், டொராண்டோ[9]
பதவியில்
நவம்பர் 2008[8] – ஆக்த்து 2013[8]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 செப்டம்பர் 1958 (1958-09-05) (அகவை 66)[10]
தேசியம்இந்தியர்
துணைவர்பங்கஞ் சரண்
பிள்ளைகள்2 மகன்கள்
முன்னாள் கல்லூரிசீமாட்டி சிறி இராம் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம்[1]
வேலைஇந்திய வெளியுறவுப் பணி
தொழில்குடிமைப் பணி

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பிரீத்தி சரண் தில்லி பல்கலைக்கழகத்தின் சீமாட்டி சிறீராம் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பங்கஜ் சரண் என்பவரை மணந்தார். இவர் இந்தியாவின் தற்போதைய துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக உள்ளார்.[12] இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[13]

தொழில்

தொகு

ஆகத்து 1982-ல் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்த சரண் மாஸ்கோ, டாக்கா, கெய்ரோ, ஜெனிவா, டொராண்டோ மற்றும் வியட்நாம் ஆகிய இடங்களில் இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.[14] சரண் தொராண்டோவில் இந்தியத் தூதராகவும் வியட்நாமுக்கான இந்தியத் தூதராகவும் இருந்தார்.[14] இவர் மார்ச் 2016 முதல் 30 செப்டம்பர் 2018 வரை இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தில் செயலாளராக (கிழக்கு) பணியாற்றினார்.[15]

சனவரி 1, 2019 முதல் 31 திசம்பர் 2022 வரை பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[11] விசன் இந்தியா அறக்கட்டளையில் மூலோபாய மற்றும் வெளிநாட்டு உறவுகளுக்கான மையத்தின் வழிகாட்டியாகவும் இவர் செயல்படுகிறார்.[16]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "MEA | About MEA : Profiles : Secretary (East)". 2017-10-31. Archived from the original on 2013-09-24. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
  2. 2.0 2.1 "Vijay Thakur made MEA Secretary - the Hindu". www.thehindu.com. Archived from the original on 29 August 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
  3. "Anil Wadhwa is India's next envoy to Italy". Uniindia.com. 2015-11-26. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
  4. "Preeti Saran". AIYD. 2014-06-20. Archived from the original on 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
  5. "Smt. Preeti Saran appointed as the next Ambassador of India to the Socialist Republic of Vietnam". Mea.gov.in. 2013-05-20. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
  6. "Ambassadors to Afghanistan, Vietnam appointed secretaries in MEA – The Sen Times". Tkbsen.in. 2015-11-23. Archived from the original on 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
  7. "Sorry for the inconvenience". Mea.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
  8. 8.0 8.1 "MEA | About MEA : Profiles : Secretary (East)". www.mea.gov.in. Archived from the original on 3 September 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
  9. Canadian Parvasi (2017-07-17). "Reception for former Indian Consul General Preeti Saran". Canadianparvasi.com. Archived from the original on 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
  10. 10.0 10.1 10.2 "Archived copy" (PDF). mea.gov.in. Archived from the original (PDF) on 22 April 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  11. 11.0 11.1 "Former Indian Diplomat Preeti Saran Elected to UN's Socio-Economic, Cultural Panel - News18". www.news18.com. Archived from the original on 9 December 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
  12. "Centre's Naga talks interlocutor RN Ravi becomes Deputy National Security Advisor | india news | Hindustan Times". www.hindustantimes.com. Archived from the original on 6 October 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
  13. "Ambassador". Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
  14. 14.0 14.1 "MEA | About MEA : Profiles : Secretary (East)". Archived from the original on 2018-01-31. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  15. "Vijay Thakur made MEA Secretary - NATIONAL - the Hindu". www.thehindu.com. Archived from the original on 6 October 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
  16. "Team | Vision India Foundation". 19 December 2014. Archived from the original on 22 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தி_சரண்&oldid=4110259" இலிருந்து மீள்விக்கப்பட்டது