பிருட்டே கால்டிகாசு

பிருட்டே கால்டிகாசு (ஆங்கிலம்:Biruté Marija Filomena Galdikas) (பிறப்பு:மே 10, 1946 செர்மனி) முதனியியல் பற்றி ஆய்வு செய்யும் பெண் ஆய்வாளர் ஆவார். நவீன முதனியியல் துறையில் நன்கு அறியப்பட்டவரான இவர், ஒராங்குட்டான் பற்றிய ஆய்வில் முதன்மையானவர் ஆவார். மேலும் இவர் ஒராங்குட்டான்களைப் பற்றி பல நூல்களும் எழுதியுள்ளார்.

பிருட்டே மரியா பிலோமெனா கால்டிகாசு
பிறப்பு10 மே 1946 (1946-05-10) (அகவை 77)
Wiesbaden, செருமனி
அறியப்படுவதுஒராங்குட்டான் ஆய்வும் பாதுகாப்பும்
விருதுகள்சுற்றுச்சூழல் சாதனைக்கான டைலர் பரிசு

இளவயது முதலே இயற்கை, மனிதத் தோற்றம் பற்றி ஆர்வம் கொண்டிருந்த கால்டிகாசு, உயிரியல், உளவியல் ஆகியவற்றில் பட்டப்படிப்பு படித்தார். பின்னர் மாந்தவியல் பற்றிய முதுகலைப்படிப்பின் போது புகழ்பெற்ற தொல்லுயிர் ஆய்வாளரான முனைவர். லூயிசு லீக்கியைச் சந்தித்தார். பின்னர் லீக்கி நேசனல் சியாகிரபிக் சொசைட்டி என்ற அமைப்பின் உதவியுடன் ஒராங்குட்டான்களைப் பற்றி ஆராய போர்னியோவில் ஒரு ஆய்வுக்கூடத்தை நிறுவ கால்டிகாசுக்கு உதவினார். இவர் 34 ஆண்டுகள் காடுகளில் ஒராங்குட்டான்களைப் பற்றி கூர்ந்து ஆராய்ந்திருக்கிறார்[1]. கால்டிகாசு தற்போது பிரிட்டிசு கொலம்பியாவில் உள்ள சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணிபுரிகிறார்.

கால்டிகாசும் முதனியியல் துறையில் லீக்கி அவர்களின் கீழ் ஆய்வு செய்த மற்ற இரு பெண்களான சேன் குட்டால், மற்றும் டயான் வாசி ஆகியோரும் தற்காலத்தில் லீக்கியின் தேவதைகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Biruté Galdikas" (in ஆங்கிலம்). GCS Research Society. http://www.science.ca/scientists/scientistprofile.php?pID=7. பார்த்த நாள்: 2 சனவரி 2008. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருட்டே_கால்டிகாசு&oldid=3577824" இருந்து மீள்விக்கப்பட்டது