பிருத்வி நாத் தார்

பிருத்வி நாத் தார் (Prithvi Nath Dhar)(1 மார்ச் 1919 - 19 ஜூலை 2012) என்பவர் பொருளாதார நிபுணர் மற்றும் இந்திரா காந்தியின் தனிச் செயலாளராகவும் அவரது நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்தார்.[2]

பிருத்வி நாத் தார்
பதவியில்
1970–2012
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1919-03-01)1 மார்ச்சு 1919 [1]
சம்மு காசுமீர்
இறப்பு19 சூலை 2012(2012-07-19) (அகவை 93)
புது தில்லி
துணைவர்ஷீலா தர்
முன்னாள் கல்லூரிஇந்துக் கல்லூரி, புது தில்லி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

பி. நா. தார் காசுமீரில் மருத்துவர் விசுணு அக்கீம் மற்றும் இராதா அக்கீம் ஆகியோருக்கு மகனாக 1919-ல் பிறந்தார். இவர் இந்தியாவின் சிறிநகரில் உள்ள திண்டேல் பிசுகோ பள்ளியில் பயின்றார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார். இவரது மனைவி பாடகி-எழுத்தாளர் ஷீலா தர் ஆவார்.

அரசுப் பணி

தொகு

1973-1977ஆம் ஆண்டு நெருக்கடியான நாட்களில் பிரதமர் இந்திரா காந்தியின் முதன்மை செயலாளராக தர் பணியாற்றினார். இவர் இந்திராகாந்தியின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராக இருந்தார். இவர்கள் கூட்டாக "காசுமீர் மாபியா" என்று அழைக்கப்பட்டனர்.[3]

இவர் பொருளியல் துறை பேராசிரியராகத் தில்லி பல்கலைக்கழகத்தின் பல ஆண்டுகளாக பணிபுரிந்தார். புது தில்லி பொருளாதார வளர்ச்சி நிறுவனம் இயக்குநராகவும் தகைசால் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

தில்லி பொருளாதாரப் பள்ளியினை நிறுவிய நிறுவனர்களில் ஒருவராகவும் உள்ளார். இவர் 1978 முதல் 1986 வரை நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் அவையின் உதவி பொதுச் செயலாளராக, ஆராய்ச்சி மற்றும் கொள்கை பகுப்பாய்வு துறையில் பணியாற்றினார்.

விருது

தொகு

2008-ல் இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

வெளியீடு

தொகு

இவரது நினைவுக் குறிப்பு, இந்திரா காந்தி, அவசரநிலை மற்றும் இந்திய ஜனநாயகம் 2000-ல் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Who's who in India. Guide Publications. 1986. பார்க்கப்பட்ட நாள் 2014-10-05.
  2. "PN Dhar, a close advisor of Indira Gandhi, passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2012-07-19 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103130100/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-19/india/32746172_1_pn-dhar-eminent-economist-shimla-accord. 
  3. Rukun Advani (2 February 2002). "A Little Outside the Ring". Archived from the original on 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-03-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருத்வி_நாத்_தார்&oldid=3317352" இலிருந்து மீள்விக்கப்பட்டது