பிருந்தா காரத்
இந்திய அரசியல்வாதி
பிருந்தா காரத் (பிறப்பு: அக்டோபர் 17, 1947) ஒரு இந்தியப் பொதுவுடமை அரசியல்வாதி. பிருந்தா காரத் இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 2004இல் இக்கட்சியின் போலிட்பூரோவில் சேர்ந்தார். பிருந்தா காரத் அனைத்திந்திய சனநாயகப் பெண்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் பல ஆண்டுகள் செயல்பட்டு வருகிறார். இவர் 2005 முதல் 2011 முடிய உள்ள காலத்தில் இந்தியப் பாராளுமன்றத்தின் மாநிலங்களவையின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பிரகாஷ் காரத்தின் மனைவி ஆவார்.
பிருந்தா காரத் | |
---|---|
தொகுதி | மேற்கு வங்காளம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 17 அக்டோபர் 1947 கல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) |
வாழ்க்கை துணைவர்(கள்) | பிரகாஷ் காரத் |
கையொப்பம் | ![]() |
