பிரேமலு
பிரேமலு ( Premalu ) என்பது இயக்குநர் கிரிஷ் ஏ. டி. இணைந்து எழுதி இயக்கி மலையாள மொழியில் 2024 இல் வெளியான காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்த படத்தில் நஸ்லன் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[3] சங்கீத் பிரதாப், சியாம் மோகன் எம். மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம் மற்றும் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட நடிகர்களும் இதில் நடித்துள்ள்னர். விஷ்ணு விஜய் இசையமைத்த இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவையும் மற்றும் ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
பிரேமலு | |
---|---|
இயக்கம் | கிரிஷ் ஏ. டி. |
தயாரிப்பு |
|
கதை | கிரிஷ் ஏ. டி. கிரன் ஜோஷி |
இசை | விஷ்ணு விஜய் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | அஜ்மல் சாபு |
படத்தொகுப்பு | ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் |
கலையகம் | பாவனா ஸ்டுடியோஸ் பகத் பாசில் மற்றும் அவரது நண்பர்கள் வொர்க்கிங்க் கிளாஸ் ஹீரோ |
விநியோகம் | பாவனா ரிலீஸ் (கேரளம்) பார்ஸ் பிலிம் நிறுவனம் ( வெளிநாடுகள்) சிறீ வெங்கடேசுவரா கிரியேசன் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் ஷோயின் பிசினஸ் (ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா) ரெட் ஜெயன்ட் மூவீசு (தமிழ்நாடு) |
வெளியீடு | 9 பெப்ரவரி 2024 |
ஓட்டம் | 156 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ஆக்கச்செலவு | ₹3 கோடிகள்[1] |
மொத்த வருவாய் | ₹115 கோடிகள்[2] |
திரைப்படம் 9 பிப்ரவரி 2024 அன்று வெளியிடப்பட்டது. இதன் கதை, இசை, நகைச்சுவை மற்றும் நடிகர்களின் நடிப்பிற்காக விமர்சகர்களிடமிருந்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.[4] ₹100 கோடி (US$13 மில்லியன்) ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம், திரையரங்கில் ஒரு நல்ல வசூலைக் கொண்டிருந்தது. மேலும் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் (13 அமெரிக்க டாலர்) வசூலித்த ஐந்தாவது மலையாள படமாக மாறியது. இது தற்போது அனைத்து காலத்திலும் அதிக வசூல் செய்த ஐந்தாவது மலையாள படமாகும்.[5]தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்ட பதிப்பு 8 மார்ச் 2024 அன்று வெளியிடப்பட்டது.[6] தமிழில் பெயர்க்கப்பட்டு 15 மார்ச் 2024 அன்று வெளியானது.[7]
தயாரிப்பு
தொகுபகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் சியாம் புஷ்கரன் ஆகியோர் தங்கள் தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸின் கீழ் இப்படத்தைத் தயாரித்திருந்தனர். படம் ஐதராபாத்தின் கலாச்சாரம் மற்றும் அழகிய இடங்களை படம் பிடித்துள்ளது.[8]
இசை
தொகுஇப்படத்தின் இசை மற்றும் பாடல்களுக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். அகாதமி விருது பெற்ற கீரவாணி இசையில் சித்ரா மற்றும் பி. உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பாடியிருந்த 1996 ஆம் ஆண்டு வெளியான தேவராகம் திரைப்படத்தின் 'யா யா யாதவா' பாடல் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் படம் வெளியானபோது இது விமர்சனத்திற்கு ஆளானது.[9] நடிகர் கே. ஜி. மார்கோஸ் திரைப்படங்களிலிருந்து ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு "தெலங்காணா பொம்மலு" என்ற தலைப்பில் ஒரு பாடலை பாடியுள்ளார்.[10]
வெளியீடு
தொகுதிரையரங்குகளில் பிப்ரவரி 9,2024 அன்று வெளியிடப்பட்டது.[11] இந்த படம் 29 மார்ச் 2024 மாதம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Premalu might hit a ton soon at the box office - Moneycontrol" (in மலையாளம்).
- ↑ "ആറാമാഴ്ചയിലും ഞെട്ടിച്ച് പ്രേമലു, കേരളത്തില് ഞായാറാഴ്ച നേടിയത് വൻ തുക". AsianetNews (in மலையாளம்). 2024-03-18.
- ↑ "EXCLUSIVE! Mamitha Baiju on 'Premalu': It's an adipoli padam; the character I play is similar to me in more ways than one". The Times of India. 2024-02-08 இம் மூலத்தில் இருந்து 9 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240209070846/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/exclusive-interview-with-mamitha-baiju-on-premalu-a-relatable-character-in-an-adipoli-padam/articleshow/107529798.cms?from=mdr.
- ↑ "Telugu Audience Embraces Malayalam Cinema As Premalu And Bramayugam Score Big Numbers" (in en-IN). News 18. 21 February 2024 இம் மூலத்தில் இருந்து 21 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240221140253/https://www.news18.com/movies/telugu-audience-embraces-malayalam-cinema-as-premalu-and-bramayugam-score-big-numbers-8787565.html.
- ↑ "S.S. Karthikeya To Distribute Telugu Version Of Premalu In Theatres; Know Release Date". News18 (in ஆங்கிலம்). 2024-03-01. பார்க்கப்பட்ட நாள் 2024-03-07.
- ↑ Chimuturi, PR (2024-03-07). "'Premalu' Review: Hilarious ROM-COM Entertainer". LOKACHITRA.com. பார்க்கப்பட்ட நாள் 2024-03-07.
- ↑ "S.S. Karthikeya To Distribute Telugu Version Of Premalu In Theatres; Know Release Date". News18 (in ஆங்கிலம்). 2024-03-01. பார்க்கப்பட்ட நாள் 2024-03-07.
- ↑ "Second Poster Of Girish AD's Premalu Promises A Laughter-filled Rom-com". News18 (in ஆங்கிலம்). 2023-12-26. Archived from the original on 25 February 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-02-09.
- ↑ "KG Markose lends his voice to the 'Telangana Bommalu' song from 'Premalu'". 2024-02-08. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/kg-markose-lends-his-voice-to-telangana-bommalu-song-in-premalu/articleshow/107529355.cms?from=mdr.
- ↑ "KG Markose lends his voice to the 'Telangana Bommalu' song from 'Premalu'". The Times of India. 2024-02-08 இம் மூலத்தில் இருந்து 27 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240227210923/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/kg-markose-lends-his-voice-to-telangana-bommalu-song-in-premalu/articleshow/107529355.cms?from=mdr.
- ↑ Service, Express News (2024-02-02). "Girish AD's 'Premalu' confirms Feb 9 release". The New Indian Express (in ஆங்கிலம்). Archived from the original on 5 February 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-02-09.