பிரேம் வத்சா

பிரேம் வத்சா (பிறப்பு: 1950) கனடாவில் உள்ள தொராண்டோ மாநகரத்தில் உள்ள ஃபேர்ஃபாக்சு (Fairfax) என்னும் வணிகநிதி நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைப் பொறுப்பாட்சியரும் ஆவார்[3][4][5][6] இவர் கனடாவின் வாரன் பபெட் என்று சிலபொழுது அழைக்கப்படுகின்றார்.[7] இவருக்கு 2020 ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கிச் சிறப்பு செய்தது.[8][9][10]

பிரேம் வத்சா
Prem Watsa
பிறப்புஆகத்து 5, 1950 (1950-08-05) (அகவை 73)
ஐதராபாது, இந்தியா
தேசியம்கனடியர்[1]
படித்த கல்வி நிறுவனங்கள்மேற்கு ஒண்டாரியோ பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
பணிதொழில்முனைவோர்
சொத்து மதிப்புஅமெரிக்க டாலர்1.1 பில். (செப்டம்பர் 2016)[2]
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
பெயர்பாக்சு நிதி வைப்பு நிறுவனத் தலைவர்
விருதுகள்பத்மசிறீ விருது (2020)

பிரேம் வத்சா ஐதராபாதில் உள்ள பேகம்பட்டுப் பகுதி பொதுப்பள்ளியில் பயின்று, பின்னர் சென்னையில் உள்ள |இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தில் வேதிப் பொறியியல் கல்விப் பட்டம் பெற்றார். பின்னர் கனடாவில் உள்ள மேற்கு ஒண்டாரியோ பல்கலைக்கழகத்தில் இரிச்சர்டு ஐவி தொழில்வணிகக் கழகத்தில் நிருவாக மேலாளர் மேற்பட்டம் (MBA) பெற்றார். கனடாவில் நிதி அலசலாளர் ("Chartered Financial Analyst (CFA)" சான்றிதழும் பெற்றார்.[11]. இவர் 1999 இல் இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தின் முன்னாள் மாணவர்களில் சிறப்பாளர் விருது பெற்றார். சூன் 7, 2014 இல் தொராண்டோவில் நடந்த அனைத்து இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தினர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் முன்னாள் இ.தொ.க மாணவர் சிறப்பாளர் விருதை வென்றார். கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் (Chancellor) சூன் 2009 முதல் உள்ளார். தொராண்டோ நோயாளிக்குழந்தைகள் மருத்துவமனையின் பொறுப்பாளுநர் மன்ற உறுப்பினராகவும், மேற்கு ஒண்டாரியோ பல்கலைக்கழகத்தில் இரிச்சர்டு ஐவி தொழிவணிகக் கழகத்தின் அறிவுரையாளர் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார். ஒண்டாரியோ வேந்திய காட்சியகத்தின் இயக்குநர் ஆயத்தில் உறுப்பினராகவும், பிளாக்குபெரி வணிக நிறுவனத்தின் இயக்குநர் ஆயத்தின் உறுப்பினராகவும் உள்ளார். கனடாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராகத் திகழ்கின்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Prem Watsa".
  2. "#1741 V. Prem Watsa". Forbes. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
  3. (BusinessWeek.com - Executive Profile - Prem Watsa/FFH) http://investing.businessweek.com/research/stocks/people/person.asp?personId=1136292&symbol=FFH.TO "
  4. (Forbes.com - Executive Profile - Prem Watsa/FFH) http://www.forbes.com/finance/mktguideapps/personinfo/FromPersonIdPersonTearsheet.jhtml?passedPersonId=890456[தொடர்பிழந்த இணைப்பு] "
  5. (Yahoo! Finance - Company Profile of Fairfax Financial) http://biz.yahoo.com/ic/56/56469.html "
  6. (Fool.com - 2007-12-05 - How to Dodge the Debt: BRK.A & FFH) http://www.fool.com/investing/general/2007/12/05/how-to-dodge-the-debt.aspx "
  7. "reportonbusiness.com: Short shrift". Archived from the original on 2006-04-20. பார்க்கப்பட்ட நாள் 2006-04-20.
  8. "Anand Mahindra, Venu Srinivasan to be honoured with Padma Bhushan; Naukri.com founder to get Padma Shri". தி எகனாமிக் டைம்ஸ். 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  9. "MINISTRY OF HOME AFFAIRS" (PDF). padmaawards.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 January 2020.
  10. "IIT Madras congratulates its professors, alumnus on being conferred with Padma awards". Hindustan Times. 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  11. http://www.grahamanddoddsville.net/wordpress/Files/Gurus/Prem%20Watsa/Prem%20Watsa%20-%20The%202%20Billion%20Dollar%20Man%20-%20Toronto%20Live%20-%2004-2009.pdf

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்_வத்சா&oldid=3575607" இலிருந்து மீள்விக்கப்பட்டது