பிரொக்டர் அன்ட் கேம்பிள்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ப்ராக்டர் & கேம்பிள் கம்பெனி., இது பி & ஜி(P&G) எனப் பரவலாக அறியப்படும், ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் ஆகும். இது பல தேசங்களில் நுகர்வோர் பொருட்களைவிற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தின் தலைமையிடம் டவுன்டவுன் சின்சினாட்டியில் உள்ளது, இது ஒகையோ மாநிலத்தில் 1837ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அமெரிக்க பிரஜையான வில்லியம் ப்ராக்டர் மற்றும் ஐரிஷ் அமெரிக்கரான ஜேம்ஸ் கேம்பிள் ஆகிய இரண்டு நபர்களால் சேர்ந்து நிறுவப்பட்டது.[3] இது முதன்மையாக துப்புரவு பொருட்கள், தனிநபர் பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பொருட்கள் விற்பனையில் கவனம் செலுத்துகிறது. பிரிங்கில்ஸ் தயாரிப்பினை கெல்லாக் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு முன்பு, இதன் போர்ட்ஃபோலியோவில் உணவுகள், தின்பண்டங்கள் மற்றும் பானங்களின் விற்பனையும் இருந்தது.[4]
![]() | |
வகை | பொது |
---|---|
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவது (கியூபா மற்றும் வடகொரியா தவிர்த்து) |
முக்கிய நபர்கள் | டேவிட் எஸ். டெய்லர், சேர்மன், தலைமை செயல் அதிகாரி[1] |
தொழில்துறை | நுகர்வோர் தயாரிப்புகள் |
உற்பத்திகள் | சுத்தப்படுத்தும் பொருட்கள் தனிநபர் பராமரிப்பு பொருட்கள் அழகுப் பராமரிப்பு பொருட்கள் தனிநபர் சுகாதார பராமரிப்பு பொருட்கள் நோய் நாடல் இயல் (எஸ்பிடியுடன் கூட்டாக) |
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
நிகர வருமானம் | ![]() |
மொத்தச் சொத்துகள் | ![]() |
மொத்த பங்குத்தொகை | ![]() |
பணியாளர் | 95,000[2] |
இணையத்தளம் | www |
2014 ஆம் ஆண்டில், பி & ஜியின் விற்பனை 83.1 பில்லியன் டாலர் ஆகும். ஆகஸ்ட் 1, 2014 அன்று, பி & ஜி நிறுவனமானது நிறுவனத்தின் மொத்த இலாபத்தில் 95% லாபம் அளிக்கும் 65 பிராண்டுகள்[5] மீது கவனத்தை செலுத்துவதற்காக, மற்ற 100 பிராண்டுகளை அதன் தயாரிப்புக் குழுவிடம் இருந்து கைவிடுவதாக அறிவித்தது. அக்டோபர் 31, 2015 வரை நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஏ.ஜி. லாஃப்லே, எதிர்காலத்தில் பி & ஜி ஆனது "முன்னணி பிராண்டுகளை நிர்வகிக்க மிகவும் எளிமையான, மிகவும் சிக்கலற்ற நிறுவனமாக இருக்கும்" என்றார்.[6]
வரலாறு தொகு
ஐக்கிய இராச்சியத்தில் பிறந்த மெழுகுவர்த்தி உற்பத்தியாளர் வில்லியம் ப்ராக்டர், மற்றும் அயர்லாந்தில் பிறந்த சோப் உற்பத்தியாளர் ஜேம்ஸ் கேம்பிள், இருவரும் தத்தம் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறினர். அவர்கள் முதலில் சின்சினாட்டியில் வசித்தனர். பின்னர் அவர்கள் ஒரே குடும்பத்திலிருந்து சகோதரிகள் ஒலிவியா மற்றும் எலிசபெத் நோரிஸ் ஆகியோரை திருமணம் செய்தபொழுது சந்தித்தனர்.[7] திருமணத்திற்கு பிறகு, அவர்களது மனைவியின் தந்தை அலெக்சாண்டர் நோரிஸ், ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்து இவர்கள் இருவரும் இணைந்து தொழில் நடத்த வற்புறுத்தினார். இதன் விளைவாக, 1837 அக்டோபர் 31 ம் தேதி, ப்ராக்டர் & கேம்பிள் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
1858-1859 ஆம் ஆண்டில், விற்பனை $1மில்லியனாக உயர்ந்தது. அந்த கட்டத்தில், சுமார் 80 ஊழியர்கள் பி & ஜீக்காக வேலை செய்தார்கள். அமெரிக்க உள்நாட்டுப் போர் காலத்தில், அமெரிக்க இராணுவத்திற்காக சோப்பு மற்றும் மெழுகுவர்த்தி வழங்குவதற்கான ஒப்பந்தங்களை நிறுவனம் பெற்றது. யுத்தகால விற்பனையின் மூலம் அதிகரித்த இலாபத்துடன் கூடுதலாக, நாடு மூழுவதுமுள்ள வீரர்களுக்கு பி & ஜீயின் தயாரிப்புகள் அறிமுகம் ஆனது.
1880 களில், ப்ரொக்டர் & கேம்பிள் ஒரு புதிய தயாரிப்பை விற்பனை செய்யத் தொடங்கியது, அது ஐவரி என்றழைக்கப்பட்ட தண்ணீரில் மிதக்கும் ஒரு மலிவான சோப்பு ஆகும். 1887 ஆம் ஆண்டில் வில்லியம் ப்ரெக்டரின் பேரனான வில்லியம் ஆர்க்கெட் ப்ரோட்சர், நிறுவன ஊழியர்களுக்கான லாபம்-பகிர்வு திட்டத்தைத் துவங்கினார். தொழிலாளர்களுக்கு ஒரு நிறுவனத்தின் பங்குகளைக் கொடுப்பதன் மூலம் வேலை நிறுத்தத்தினை தவிர்க்கலாம் என்று அவர் கருதினார்.
இயக்கம் தொகு
2016 ஜீலை 1ன் படி, இந்த நிறுவனத்தின் கட்டமைப்புகளை பத்து பிரிவுகள் மற்றும் ஆறு விற்பனை மற்றும் சந்தை நிறுவனங்களாக வகைப்படுத்தலாம்.
- பிரிவுகள்
- குழந்தை பராமரிப்பு
- துணி பராமரிப்பு
- குடும்ப பராமரிப்பு
- பெண்மைப் பராமரிப்பு
- சீர்ப்படுத்தல் மற்றும் அழகுபடுத்துதல்
- முடி பராமரிப்பு
- வீடு பராமரிப்பு
- வாய் பராமரிப்பு
- தனிப்பட்ட சுகாதாரம்
- தோல் & தனிப்பட்ட பாதுகாப்பு
- விற்பனை மற்றும் சந்தை நிறுவனங்கள்
- ஆசியா பசிபிக்
- ஐரோப்பா
- கிரேட்டர் சீனா
- இந்தியா, மத்திய கிழக்கு, மற்றும் ஆப்பிரிக்கா (IMEA)
- வட அமெரிக்கா
- தென் அமெரிக்கா
இந்த நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலைகள் பின்வரும் நாடுகளில் இயங்குகிறது:
குறிப்புகள் தொகு
- ↑ "Leadership Team". Procter & Gamble. https://us.pg.com/who-we-are/leadership-team. பார்த்த நாள்: February 12, 2018.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "2016 Earnings Report, The Procter & Gamble Company". The Procter & Gamble Company. https://www.google.com/finance?q=NYSE%3APG&fstype=ii&ei=FFgDUeDOBcjFkgX6wAE. பார்த்த நாள்: August 14, 2016.
- ↑ "history_of_innovation". http://us.pg.com/who_we_are/heritage/history_of_innovation. பார்த்த நாள்: February 15, 2016.
- ↑ "Procter & Gamble board meets amid CEO reports". Boston Herald. Associated Press. June 9, 2009. http://news.bostonherald.com/business/general/view.bg?articleid=1177884&srvc=next_article. பார்த்த நாள்: May 5, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Coolidge, Alexander (July 10, 2015). "P&G brand sales, restructuring will cut jobs up to 19%". Cincinnati Enquirer. http://www.cincinnati.com/story/money/2015/07/09/pg-spins-off-covergirl-wella-and-fragrance/29903547/. பார்த்த நாள்: March 3, 2016.
- ↑ "Around 100 brands to be dropped by Procter and Gamble to boost sales". Cincinnati News.Net இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 8, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140808055326/http://www.cincinnatinews.net/index.php/sid/224358103/scat/3a8a80d6f705f8cc/ht/Around-100-brands-to-be-dropped-by-Procter-and-Gamble-to-boost-sales. பார்த்த நாள்: August 2, 2014.
- ↑ Dyer, Davis; Dalzell, Frederick; Olegario, Rowena (2004). Rising Tide: Lessons from 165 Years of Brand Building at Procter & Gamble. Harvard Business School Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59139-147-4. https://archive.org/details/risingtide00davi.
- ↑ "Procter & Gamble – Plants in Poland/Fabryki W Polsce". http://ce.pgcareers.com/pg-in-central-europe/plants-in-polandfabryki-w-polsce/. பார்த்த நாள்: October 13, 2017.
- ↑ "P&G в России - Компания - P&G". http://www.pg.com/ru_RU/company/pg_russia/index.shtml. பார்த்த நாள்: October 13, 2017.
- ↑ "Our New Hyderabad Plant Is Off to a Remarkable Start". pg.com. http://news.pg.com/blog/hyderabad.
- ↑ "P&G celebrates 25 years of successful operations in Pakistan". https://www.pg.com/en_PK/news/pr_pg_Pakistan25years.shtml.
- ↑ "New P&G Plant Opens in Nigeria". http://news.pg.com/blog/company-strategy/nigeria-plant.
மேலும் படிக்க தொகு
- McGuigan, Lee, "Procter & Gamble, Mass Media, and the Making of American Life," Media, Culture, and Society 37 (Sept. 2015), 887–903.
- John Kominicki, "James Gamble's Candles And Soap Lit Up Profit: Do It Right: He helped put P&G on an ethical path to top", Los Angeles: Investor's Business Daily, March 6, 2015, p. A3.