பிர்சா வேளாண் பல்கலைக்கழகம்
பிர்சா வேளாண் பல்கலைக்கழகம் (Birsa Agricultural University) என்பது இந்தியாவின் சார்கண்டு மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கான்கேயில் உள்ள ஒரு விவசாய பல்கலைக்கழகம் ஆகும். இது 26 சூன் 1981-ல், பிரதமர் இந்திரா காந்தியால் முறையான தொடக்கத்திற்குப் பிறகு நிறுவப்பட்டது.
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1981 |
வேந்தர் | ஜார்க்கண்ட் ஆளுநர்களின் பட்டியல் |
துணை வேந்தர் | ஆன்கார் நாத் சிங் |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www |
கண்ணோட்டம்
தொகுபீகார் மற்றும் ஜார்கண்டு பீடபூமி பகுதியின் வளர்ச்சிக்காக விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் வனவியல் துறைகளில் குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் மனிதவளத்தை உருவாக்குவதே இந்தப் பல்கலைக்கழகத்தின் முதன்மை நோக்கமாகும். மேலும், இப்பகுதியின் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள், பல்வேறு பீடங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
கல்விப்புலங்கள்
தொகு- விவசாயம்
- கால்நடை அறிவியல் & கால்நடை பராமரிப்பு
- வனவியல்
- பால் தொழில்நுட்பம்
- மீன்வள அறிவியல்
- தோட்டக்கலை
- உயிர்தொழில்நுட்பவியல்
- வேளாண் வணிக மேலாண்மை
கல்லூரிகள்
தொகு- ராஞ்சி விவசாயக் கல்லூரி, ராஞ்சி (1955)
- ராஞ்சி கால்நடை மருத்துவக் கல்லூரி (1961)
- வனவியல் கல்லூரி, ராஞ்சி (1981)
- உயிர்தொழில்நுட்பவியல் கல்லூரி, ராஞ்சி
- மீன்வள அறிவியல் கல்லூரி, கும்லா
- ரவீந்திர நாத் தாகூர் விவசாயக் கல்லூரி, தியோகர்
- வேளாண் கல்லூரி, கர்வா
- தில்கா மஞ்சி விவசாயக் கல்லூரி, கோடா
- தோட்டக்கலை கல்லூரி, சாய்பாசா
- வேளாண் பொறியியல் கல்லூரி, ராஞ்சி
- புலோ ஜானோ முர்மு பால் தொழில்நுட்பக் கல்லூரி, ஆன்சுதிகா, தும்கா (2017)
துறைகள்- • பால் தொழில்நுட்பம் • பால் பொறியியல் • பால் நுண்ணுயிரியல் • பால் வேதியியல் • பால் வணிக மேலாண்மை
- வேளாண் வணிக மேலாண்மை மையம், ராஞ்சி
ராஞ்சி விவசாயக் கல்லூரி 1955-ல் நிறுவப்பட்டது. பிரிக்கப்படாத பீகாரின் போது சர்பூரில் உள்ள பீகார் விவசாயக் கல்லூரிக்குப் பிறகு இது இரண்டாவது பழமையான விவசாயக் கல்லூரியாகும். 1971ஆம் ஆண்டு புசாவில் இராஞ்சேந்திர பிரசாத் வேளாண் பல்கலைக்கழகம் உருவாகும் வரை இந்தக் கல்லூரி ராஞ்சி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. 26 சூன் 1981ல், இது காங்கேவில் உள்ள பிர்சா வேளாண் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டது.
ஜார்க்கண்ட் ஒருங்கிணைந்த நுழைவுப் போட்டித் தேர்வு வாரியம் இப்பல்கலைக்கழகத்திற்கான இளம் அறிவியல் (வேளாண்மை), கால்நடை அறிவியல் & கால்நடை வளர்ப்பு, வனவியல்), இளம் தொழில்நுட்பவியல் (விவசாயம் பொறியியல்), இளம் தொழில்நுட்பவியல் (பால் தொழில்நுட்பம்) சேர்க்கைக்கான தேர்வை நடத்துகிறது. ராஞ்சி வேளாண்மைக் கல்லூரியில், 105 இடங்கள் உள்ளன, இதில் 90 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கும், 15 இடங்கள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழும இட ஒதுக்கீட்டின்படி நிரப்பப்படும்.
மேலும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புகள்
தொகு