பிலவ ஆண்டு

60 தமிழ் ஆண்டுகளில் ஒன்று

பிலவ ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பத்தைந்தாம் ஆண்டாகும்.[1] இந்த ஆண்டை செந்தமிழில் கீழறை என்றும் குறிப்பர்

பிலவ ஆண்டு வெண்பா தொகு

பிலவ ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் வெண்பா

 
பிலவத்தின்மாரி கொஞ்சம் பீடைமிகும் ராசர்
சலமிகுதிதுன்பந் தருக்கும் நலமில்லை
நாலுகாற்சீவனெல்லாம் நாசமாம் வெள்ளாண்மை
பாலுமின்றிச் செய்புவனம் பாழ்

இந்தப் பாடலின்படி இந்த ஆண்டு பிறப்பின்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் சுக்கிரன் இருப்பதால் மழைவளம் இருக்கும். இதனால் நல்ல விளைச்சல் இருக்கும். அரசனாக செவ்வாய் வருவதால் உலகெங்கும் நிம்மதியற்ற நிலை நீடிக்கும். மக்கள் ஒருவித அச்சத்துடன் வாழ்வர். ஒரு பக்கம் மழையும் மறுபக்கம் வறட்சியும், தீயினால் அழிவுகளும், நிலச்சரிவுகளும் ஏற்படும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "பிலவரி". பொருள். விக்சனரி. 16 ஏப்ரல் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. வேங்கடசுப்பிரமணியன் (2021 ஏப்ரல் 12). "தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: மேஷ ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)". கட்டுரை. இந்து தமிழ். 18 ஏப்ரல் 2020 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலவ_ஆண்டு&oldid=3134311" இருந்து மீள்விக்கப்பட்டது