சூரிய தேவன் (இந்து சமயம்)

(சூரியன் (நவக்கிரகம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சூரியன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் நவகிரகங்களில் முதன்மையானவர் ஆவார்.இவர் பிறந்த நட்சத்திரம் அஸ்தம் (கன்னி இராசி) ஆகும்.[1][2][3]

சூரியன்
அதிபதிஒளி, வெப்பம், பகல் மற்றும் சூரிய கிரகத்தின் கடவுள்
சமசுகிருதம்सूर्यदेव
தமிழ் எழுத்து முறைசூரியன்
வகைநவக்கிரகங்கள், தேவர்
இடம்சூர்ய லோகம்
ஆயுதம்சக்கரம்,சங்கு
துணைபுராணங்களில்

சந்தியா, சாயா வேதங்களில்

உஷா, ராத்திரி
பெற்றோர்கள்காசியபர்,அதிதி
குழந்தைகள்வைவஸ்வத மனு, யமன், சனீஸ்வரன், அஸ்வினிகள், தபதி, சாவர்ணி மனு, யமுனா, ரேவந்தன், பத்ரா கர்ணன்

தட்சனின் மகள் அதிதிக்கும் காசியப முனிவருக்கும் சூரியன் பிறந்தார். சூரியனுக்கு சாயா என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு சாவர்ணி மனு, சனீஸ்வரன், தபதி என குழந்தைகளும் உள்ளதாக பாவிஷ்ய புராணம் கூறுகிறது. சூரியனின் மற்றொரு மனைவியின் பெயர் சந்தியா. இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் யமன்.

சூரியனின் முதல்-மனைவிக்கு பிறந்தவர்கள் யமன் மற்றும் யமுனை (நதி) எனவும், சூரியனின் முதல்-மனைவி சூரியனின் வெப்பம் தங்க முடியாமல் சிறிதுகாலம் அவரைப் பிரிந்திருக்க எண்ணி, தன்னைப்போலவே ஒரு நிழலை உருவாக்கிவிட்டு சென்றாள் எனவும், அந்த நிழல் உருவம் தான் சாயா எனப்படும் சூரியனின் இரண்டாவது மனைவி எனவும், சாயாவுக்கும் சூரியனுக்கும் பிறந்தவர் தான் நவக்கிரகங்களில் ஒருவராகிய சனி எனவும் கூறப்படுகின்றது.

மகாபாரதத்தில் பாண்டவர்களின் தாயான குந்தி தனது சிறுவயதில் துர்வாச முனிவருக்கு ஆற்றிய சேவையினால் மனம் மகிழ்ந்த துருவாசர் குந்திக்கு ஒரு மந்திரம் உபதேசம் வழங்கினார் இம்மந்திரத்தை கொண்டு எந்த தேவரிடம் வேண்டுமானாலும் குழந்தை வரம் பெறலாம். விளையாட்டுப் பருவத்தில் இருக்கும் குந்தி இதை சோதித்துப் பார்ப்போம் என சூரிய தேவரிடம் மந்திரத்தை உச்சரித்தால் மனம் குளிர்ந்த சூரியதேவன் குந்திக்கு குழந்தையை வழங்கினார் அக்குழந்தை கர்ணன் ஆவார் மகாபாரதத்தில் இவர் தாராள கொடைவள்ளல் மாபெரும் வீரனும் ஆவார்.

உதயகிரிநாதர் சூரியனார் கோவில்

தொகு

மதுரை கிழக்கே பொ.ஊ. 8 நுாற்றாண்டில் மன்னர்களால் உருவாக்கப்பட்ட குடைவரை கோவிலில் சூரியனுக்கு தனி சன்னதியாக உதயகிரிநாதர் எனும் திருமேனியில் லிங்க சொருபமாக அருள்பாலிக்கிறார். சூரியன் உதயமாகும் போது இவர் மீது பட்டே திரும்பும் இவ்விடம் யாருக்கு தெரியாத இடமே. இவை மதுரை கிழக்கே வரிச்சியுரிலிருந்து அருகில் திருக்குன்றத்துார் எனும் இடத்தில் அமைந்துள்ளது. காலை 8.00 முதல் 10.00 மணி வரை திறந்து இருக்கும். பௌர்ணமி மற்றும் பிரதோச நாளில் காலையிருந்து மாலை வரை திறந்து இருக்கும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Encyclopaedia of Hinduism. Sarup & Sons. 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176250641.
  2. Pande, Govind Chandra (2007). A golden chain of civilizations: Indic, Iranic, Semitic, and Hellenic up to c. 600 BC (1st ed.). New Delhi, India: Project of History of Indian Science, Philosophy, and Culture. p. 572. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-818758628-9.
  3. Pāṇḍeya, Lālatā Prasāda (1971). "Sun-worship in Ancient India".
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சூரிய தேவன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_தேவன்_(இந்து_சமயம்)&oldid=4126553" இலிருந்து மீள்விக்கப்பட்டது