பிளாட்டினம்(IV) அயோடைடு
பிளாட்டினம்(IV) அயோடைடு (Platinum(IV) iodide) என்பது PtI4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] பிளாட்டினமும் அயோடினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. அடர் பழுப்பு நிறத்தில் எதிர்காந்தப் பண்புடன் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. பிளாட்டினத்தின் அறியப்பட்டுள்ள பல இரும அயோடைடுகளில் இதுவும் ஒன்றாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெட்ரா அயோடோபிளாட்டினம்
| |
வேறு பெயர்கள்
பிளாட்டினம் டெட்ரா அயோடைடு, பிளாட்டினிக் அயோடைடு, பிளாட்டினம்(4+) டெட்ரா அயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
7790-46-7 | |
EC number | 232-207-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12978853 |
| |
பண்புகள் | |
I4Pt | |
வாய்ப்பாட்டு எடை | 702.70 g·mol−1 |
தோற்றம் | பழுப்பு நிற படிகங்கள் |
அடர்த்தி | 6.06 கி/செ.மீ3 |
உருகுநிலை | 130 °C (266 °F; 403 K) |
தண்ணீரில் சிதைவடையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபிளாட்டினத்துடன் அயோடினைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பிளாட்டினம்(IV) அயோடைடு உருவாகிறது:[2]
- Pt + 2I2 -> PtI4
ஐதரசன் ஆறயோடோபிளாட்டினேட்டு(IV) சேர்மத்தை 80 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் சிதைவு ஏற்பட்டு பிளாட்டினம்(IV) அயோடைடு உருவாகும்:
- H2[PtI6] -> PtI4 + 2HI
இயற்பியல் பண்புகள்
தொகுஅடர் பழுப்பு நிற படிகங்களாக பல்வேறு வடிவங்களில் பிளாட்டினம்(IV) அயோடைடு படிகமாகிறது:[3]
α-PtI4, சாய்சதுர படிகத் திட்டம், இடக்குழு P bca,[4] cell parameters a = 1.290 nm, b = 1.564 nm, c = 0.690 nm, Z = 8;
β-PtI4, கனசதுரம், இடக்குழு P m3m, செல் அளவுருக்கள் a = 0.56 நானோமீட்டர், Z = 1;
γ-PtI4, நாற்கோணகப் படிகத் திட்டம், இடக்குழு I 41/a, செல் அளவுருக்கள் a = 0.677 நானோமீட்டர், c = 3.110 நானோமீட்டர், Z = 8.
PtI4 தண்ணிரில் சிதைவடையும். ஆல்ககால், அசிட்டோன், நீர்க்காரம், ஐதரசன் அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு, நீர்ம [[அமோனியா| முதலிய கரைப்பான்களில் கரையும்.[5]
வேதிப் பண்புகள்
தொகுபிளாட்டினம்(IV) அயோடைடை சூடுபடுத்தினால் சிதைவடையும்:
- PtI4 -> Pt + 2I2
பிளாட்டினம்(IV) அயோடைடை ஐதரோ அயோடிக் அமிலத்தில் கரைத்தால் ஐதரசன் ஆறயோடோபிளாட்டினேட்டு(IV) உருவாகும்:
- PtI4 + 2HI -> H2[PtI6
மேற்கோள்கள்
தொகு- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Wicks, Charles E.; Block, Frank E. (1963). Thermodynamic Properties of 65 Elements: Their Oxides, Halides, Carbides and Nitrides (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. p. 92. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3510. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1978). Crystal Data: Inorganic compounds 1967-1969 (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 153. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
- ↑ "Platinum(IV) iodide, 99.95% (Metals basis), Pt 27.3% min., Thermo Scientific Chemicals, Premion | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.