பிளேவியா ஆக்னசு

பிளேவியா ஆக்னசு (Flavia Agnes) ஓர் இந்தியப் பெண்கள் உரிமை வழக்கறிஞர் ஆவார் [1] . இவர் திருமண, விவாகரத்து மற்றும் சொத்து சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.[2] இவர் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார், இவற்றில் சில சபால்டர்ன் சுடடீசு, எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி மற்றும் மனுசி ஆகியவற்றில் வெளிவந்துள்ளன . இவர் சிறுபான்மையினர் மற்றும் சட்டம், பாலினம் மற்றும் சட்டம், பெண்கள் இயக்கங்களின் பின்னணியில் சட்டம், [3] மற்றும் குடும்ப வன்முறை, பெண்ணிய நீதித்துறை மற்றும் சிறுபான்மை உரிமைகள் பற்றிய செய்திகளைப் பற்றி எழுதுகிறார். [1]பிளேவியா ஆக்னசு 1980 களில் பெண்கள் சட்டத் துறையில் பணியாற்றத் தொடங்கினார், இது பெண்கள் இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தின் தொடக்கத்தில் இருந்தது, [4] 1988 முதல், ஆக்னசு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். குடும்ப வன்முறையில் அனுபவம் காரணமாக இவர் ஒரு பெண் உரிமை வழக்கறிஞராக ஆனார். [5] சட்டத்தை அமல்படுத்துவது குறித்தும் இவர் அரசுக்கு அறிவுறுத்துகிறார் மற்றும் தற்போது மகாராட்டிராவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்குகிறார்.[6] மதுசிரீ தத்தாவுடன் இணைந்து ஆக்னசு மசிலிசுவினை இணைந்து நிறுவினார். இதற்கு அரபு மொழியில் "சங்கம்" என்று பொருளாகும். இது பெண்களுக்கு திருமண உரிமைகள், குழந்தை காப்பகம் போன்ற பிரச்சனைகளுக்காக பிரச்சாரம் மேற்கொள்கிறது . 1990 இல் தொடங்கியதிலிருந்து, மசிலிசு 50,000 பெண்களுக்கு சட்ட சேவைகளை வழங்கியுள்ளது.[7]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

பிளேவியா ஆக்னசு மும்பையில் ஆறு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். இவர் கருநாடகாவின் மங்களூரில் கத்ரி என்ற சிறிய நகரத்தில் வளர்ந்தார், அங்கு இவர் தனது அத்தையுடன் வசித்து வந்தார். [1]இவரது இரண்டாம்நிலை பள்ளி சான்றிதழ் (எசு. எசு. சி.) தேர்வுகளுக்கு முன்னதாக, இவரது அத்தை இறந்தார், மற்றும் ஆக்னசு ஏமனின் ஏடனுக்குச் சென்று தட்டச்சராக வேலை செய்தார். ஆக்னசின் தந்தையின் மரணத்திற்கு பிறகு இவரது குடும்பம் மங்களூருக்கு திரும்பியது.[8] இளம் வயதிலேயே ஆக்னசின் தந்தையின் மரணத்திற்குப் பிறகு, இவளுடைய குடும்பத்தில் உள்ள பெண்கள், குறிப்பாக இவளுடைய அம்மா மற்றும் இவளுடைய அத்தை, இளம் வயதில் இவருக்குத் தாக்கத்தினை ஏற்படுத்தினர்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

ஆக்னசு என்ற கிறித்தவர் இந்தியாவில் மத சிறுபான்மையினராக கருதப்பட்டார். இவளது மத சார்பு இவளது திருமணம் மற்றும் இவளது அரசியல் உள்நோக்கம் போன்ற பலவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்தியது பாதித்தது. [1] இவளுடைய அம்மா இவளை ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு வலியுறுத்தினார். [1] இவளது திருமண பிரச்சனைகள் பற்றிய விவரங்களை இவள் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், [1] விரும்பாதவரை திருமணம் செய்ததாகவும், திருமண முறிவிற்கு முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. விவாகரத்து நடவடிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிக காலம் சென்றது.

ஆக்னசு அரசியல் ரீதியாக செயல்பட தேவாலயம் வாய்ப்பு வழங்கியது. தேவாலய விரிவுரையாளராக ஈடுபடுவதன் மூலமும், வெளிப்புற பேச்சாளர்களைக் கேட்பதன் மூலமும் இவர் ஈர்க்கப்பட்டார். [1] குறிப்பாக கற்பழிப்பு எதிர்ப்பு இயக்கத்தை உள்ளடக்கிய "கிறித்து தி ராடிகல்" என்ற தலைப்பில் உரையாற்றினார். [1] இந்த நிகழ்வில் கலந்து கொள்வது ஆக்னசை பின்னர் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான மன்றத்தில் சேர தூண்டியது. [1]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 McGuire, Kristin (2010). "Becoming Feminist Activists: Comparing Narratives". Feminist Narratives 36: 99–125. 
  2. "I think I have done pretty well as Flavia Agnes". 5 March 2012 இம் மூலத்தில் இருந்து 6 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140906172108/http://www.afternoondc.in/interview/i-think-i-have-done-pretty-well-as-flavia-agnes/article_49420. 
  3. "Dr. Flavia Agnes to Speak on "Women's Rights and Legal Advocacy in India"". University of Wisconsin-Madison. 3 November 2009 இம் மூலத்தில் இருந்து 10 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150910073151/http://international.wisc.edu/blog/index.php/2009/11/03/dr-flavia-agnes-to-speak-on-womens-rights-and-legal-advocacy-in-india-event-november-10/. 
  4. Shodhan, Amrita (2000). Agnes, Flavia. ed. "Women, Personal Laws and the Changing Juridical Practice". Economic and Political Weekly 35 (15): 1259–1261. 
  5. Agnes, Flavia; Douglas, Carol Anne; Henry, Alice (May 1988). "Interview: Feminism in India: Violence, Trades". Off Our Backs 18 (5): 4–5. 
  6. Chowdhary, Seema. "Indian Lawyer Overcomes Domestic Abuse to Defend Women's Rights". Global Press Journal. India News Desk (24 May 2013) இம் மூலத்தில் இருந்து 18 மார்ச் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150318234319/http://globalpressjournal.com/asia/india/indian-lawyer-overcomes-domestic-abuse-defend-women/page/0/1. 
  7. Jaisingani, Bella (20 June 2011). "Once victim overcomes fear, half the battle's won". Times News Network. Bennet, Coleman & Co. Ltd.. http://timesofindia.indiatimes.com/city/mumbai/Once-victim-overcomes-fear-half-the-battles-won/articleshow/8920548.cms. 
  8. Khan, Parizaad (14 August 2009). "Freedom from abuse". http://www.livemint.com/Leisure/qsv7oc2UcMNGyZYgz4tKLI/Freedom-from-abuse--Flavia-Agnes.html. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேவியா_ஆக்னசு&oldid=3715009" இலிருந்து மீள்விக்கப்பட்டது