பிளிமத், மொன்செராட்

(பிளைமவுத், மொன்செராட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிளிமத் (Plymouth) மேற்கிந்திய தீவுகளிலுள்ள சிறிய அண்டிலிசு தொடரின் லீவர்டு தீவுகளில் அமைந்துள்ள பிரித்தானிய கடல் கடந்த மண்டலமான மொன்செராட்டின் தலைநகரமாக விளங்கிய நகரமாகும். 1995 இல், இங்கு ஏற்பட்ட அதிகளவான எரிமலைச் சீற்றங்களால் இந்நகரம் கைவிடப்பட்டது. பல நூற்றாண்டுகளாக, தீவின் ஒரே நுழைவிடமாக இவ்விடம் இருந்தது. தற்போதும் மொன்செராட்டின் சட்டப்படியான தலைநகரமாக பிளிமத் உள்ளது.

பிளிமத்
எரிமலை சீற்றங்களால் கைவிடப்பட்ட பிளிமத்.
எரிமலை சீற்றங்களால் கைவிடப்பட்ட பிளிமத்.
மொன்செராட்டில் பிளிமத்தின் அமைவிடம்
மொன்செராட்டில் பிளிமத்தின் அமைவிடம்
நாடுஐக்கிய இராச்சியம்
கடல் கடந்த மண்டலம்மொன்செராட்
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்0 (4,000 inhabitants before evacuation as a result of volcanic eruption)
நேர வலயம்ஒசநே-4 (அட்லாண்டிக்)

வரலாறு

தொகு

எரிமலைத் தாக்கம்

தொகு
 
சாம்பலால் மூடப்பட்டிருந்த பிளிமத் நகரம் ஜூலை 12, 1997 இல், சாம்பல் பொழிவால் மேலும் பாதிப்புக்குள்ளான நிலை
 
பிளிமத்தின் தெருக்களில் தெருவிளக்குக் கம்ப உயரத்திற்குக் காணப்படும் சாம்பல் குவியல் (1999)

1995 ஆம் ஆண்டு ஜூலை மாதத் துவக்கத்தில், மொன்செராட்டின் சொஃபிரியர் எரிமலைச் சீற்றம் பெரியளவில் பலமுறை தொடர்ந்து நிகழ்ந்தது. தலைநகரம் பிளிமத் உட்பட்ட தெற்கு மொன்செராட்டின் பல பகுதிகள் சாம்பற் பொழிவுக்குகாளானது. இதனால் பிளிமத் நகரம் ஆபத்தான நிலையில் இருந்தது. ஆகஸ்டு 21, 1995 இல் சாம்பற்பொழிவு தொடர்ந்தது. அதே ஆண்டு திசம்பரில் பாதுகாப்பிற்காக, பிளிமத் நகர மக்கள் பாதுகாப்பிற்காக அந்நகரிலிருந்து அகற்றப்பட்டனர். சில மாதங்கள் கழித்து மீண்டும் மக்கள் அந்நகருக்குத் திரும்பிவர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ஜூன் 25, 1997 இல் பேரளவில் நிகழ்ந்த எரிமலைப்பாறை எழுச்சியால் மக்கள் மீண்டும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பலமுறைத் தொடர்ந்த சீற்றங்களால் 1.4 மீட்டர்கள் (4.6 அடி) ஆழத்திற்குப் புதைந்து நகரின் 80% பகுதி அழிந்து போனது. எரிமலைச் சீற்றத்தின் பாதிப்பிலிருந்து நகரத்தை மீட்டெடுக்க இயலாத நிலையில் அங்கு மக்கள் வாழ முடியவில்லை[1] பிளிமத் நகரம் கைவிடப்பட்டு, தொடர் எரிமலை வெடிப்புகளின் காரத்தால், தீவின் தெற்குப்பகுதியின் பாதியளவு நீக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டது. சட்டபூர்வமான தலைநகரமாக பிளிமத் நகரம் இருந்தபோதும், தீவின் அரசாங்கம் பிராதெக்கு மாற்றப்பட்டது.

காலநிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், பிளிமத்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32
(90)
33
(91)
34
(93)
34
(93)
36
(97)
37
(99)
37
(99)
37
(99)
36
(97)
34
(93)
37
(99)
33
(91)
37
(99)
உயர் சராசரி °C (°F) 29
(84)
30
(86)
31
(88)
31
(88)
32
(90)
32
(90)
33
(91)
33
(91)
32
(90)
31
(88)
30
(86)
29
(84)
31.1
(88)
தாழ் சராசரி °C (°F) 23
(73)
23
(73)
24
(75)
24
(75)
24
(75)
25
(77)
25
(77)
25
(77)
24
(75)
24
(75)
24
(75)
23
(73)
24
(75.2)
பதியப்பட்ட தாழ் °C (°F) 17
(63)
18
(64)
18
(64)
18
(64)
19
(66)
21
(70)
22
(72)
22
(72)
21
(70)
19
(66)
19
(66)
18
(64)
17
(63)
பொழிவு mm (inches) 122
(4.8)
86
(3.39)
112
(4.41)
89
(3.5)
97
(3.82)
112
(4.41)
155
(6.1)
183
(7.2)
168
(6.61)
196
(7.72)
180
(7.09)
140
(5.51)
1,640
(64.57)
ஆதாரம்: BBC Weather [2]

மேற்கோள்கள்

தொகு
  1. The difficulty of exhuming a smothered urban centre is illustrated by the history of the extinct towns of பொம்பெயி and ஹெர்குலியம், which were buried by pyroclastic flows and volcanic ash under circumstances similar to those that pertained at Plymouth. Archeological excavation at the Roman sites continues after centuries and may never be completed.
  2. "Average Conditions Plymouth, Montserrat". BBC காலநிலை. Archived from the original on 30 November 2010. பார்க்கப்பட்ட நாள் 14 July 2010.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிளிமத்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளிமத்,_மொன்செராட்&oldid=3587612" இலிருந்து மீள்விக்கப்பட்டது