பிஹைண்ட் ஹேர் ஐஸ்

பிஹைண்ட் ஹேர் ஐஸ் என்பது சாரா பின்பரோவால் எழுதப்பட்டு ஜனவரி 23, 2017 இல் வெளியான ஒரு ஆங்கில திகில் நாவல் தொடராகும்.[1] இந்த நாவலை தொலைக்காட்சி தொடராக படமாக்கி பிப்ரவரி 17, 2021 அன்று இயங்கலையில் வெளியிட்டது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்[2]

பிஹைண்ட் ஹேர் ஐஸ் (நாவல்)
அட்டைப்படம்
நூலாசிரியர்சாரா பின்பரோ
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம்
வகைதிகில்
வெளியிடப்பட்டது23 ஜனவரி 2017
வெளியீட்டாளர்ஹேப்பர்காலின்ஸ்
மேக்மில்லர்ஸ்
ஊடக வகைஅச்சு நூல்
மின்னூல்
ஒலிநூல்
பக்கங்கள்320 (அச்சு)
ISBN978-1250111173
பிஹைண்ட் ஹேர் ஐஸ் (தொடர்)
வகைதிகில்
உருவாக்கம்ஸ்ட்டீவ் லைட்ஃபூட்
இயக்கம்எரிக் ரிட்ச்சர்
நடிப்புசிமோனா ப்ரௌன்
ஈவ் ஹெவ்ஸன்
டாம் பேட்மேன்
ராபர்ட் அரமயோ
பின்னணி இசைரூப்பேர்ட் வில்லியம்ஸ்
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
அத்தியாயங்கள்6
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புஸ்ட்டீவ் லைட்ஃபூட்
எலிஃஜா மெல்லர்
சுஃஜேன் மேக்கி
ஒளிப்பதிவுஃபெலிக்ஸ் வீட்மேன்
தொகுப்புஏமி ஹௌன்ஸெல்
ப்ரென்னா ரேங்காட்
ஓட்டம்47–53 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சோனி பிக்ச்சர்ஸ் டெலிவிஷன்
விநியோகம்நெட்ஃப்ளிக்ஸ்
ஒளிபரப்பு
படவடிவம்4கே (மீமிகைத் துல்லியம்)
ஒலிவடிவம்டால்பி டிஜிட்டல்
ஒளிபரப்பான காலம்பிப்ரவரி 17, 2021
வெளியிணைப்புகள்
இணையதளம்

கதைக்கரு

தொகு

தன் மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் லூயிஸ், ஒரு மருத்துவ மையத்தில் செயலாளராக பணிபுரிந்து வருகிறாள். ஓரிரவு குடித்து விட்டு தெரியாத ஒரு நபரை முத்தமிட்டு விடும் லூயிஸ், அடுத்த நாள், அது அவள் பணிபுரியும் மையத்துக்கு புதிதாக வந்திருக்கும் மருத்துவர் என்று தெரிந்து கொள்கிறாள்.

அவர் பெயர் டேவிட் எனவும் அவர் திருமணமானவர் எனவும் அறியும் லூயிஸ் தான் செய்த காரியத்தை எண்ணி குற்றவுணர்வுடன் இருக்கிறார். அதே நேரத்தில், டேவிட்டின் மனைவி அடேலை தற்செயலாக பார்த்து விடும் லூயிஸ் அவரிடமும் நண்பராகி விடுகிறார்.

நட்புக்கும் காதலுக்கும் காமத்திற்கும் இடையே சிக்குண்டு கிடக்கும் லூயிஸ், விரைவில், இது அவற்றை எல்லாம் தாண்டி, அவளையும் அவள் மகனின் உயிரையுமே அச்சுறுத்தும் வகையில் மிகவும் திகிலான சங்கதி என்று தெரிந்து கொள்வார்.[3]

பாத்திரங்களும் நடிகர்களும்

தொகு
  • அடேல் கேம்ப்பெல்
என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்தார் ஈவ் ஹெவ்ஸன்.
டேவிட்டின் மனைவியான அடேல் லூயிசின் தோழியும் கூட.
  • டேவிட் ஃபெர்கூசன்
என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்தார் டாம் பேட்மேன்.
மருத்துவரான டேவிட் அடேலிடமும் லூயிசுடனும் இருமுனை உறவு கொண்டிருக்கிறார்.
  • லூயிஸ் பார்ட்ஸ்லே
என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்தார் சிமோனா ப்ரௌன்.
தன் மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் லூயிசின் வாழ்வு டேவிட் அடேலின் வருகையால் மாறுகிறது.
  • ராப் ஹாய்ல்
என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்தார் ராபர்ட் அரமயோ.
அடேலின் ஒரே நண்பனான ராபுக்கு என்ன ஆனது என்பது மர்மமாகவே இருக்கிறது.

வெளியீடு மற்றும் விமர்சனம்

தொகு

பிஹைண்ட் ஹேர் ஐஸ் நாவல் ஜனவரி 23, 2017 அன்றும் தொடர் பிப்ரவரி 17, 2021 அன்றும் வெளியானது.

நாவலை விமர்சனம் செய்த தி கார்டியன் பத்திரிக்கையைச் சேர்ந்த அலிசன் ஃப்ளட் “பிஹைண்ட் ஹேர் ஐஸ் சாரா பின்பரோவிடம் இருந்து வந்த ஒரு புத்திசாலித்தனமான நகர்வு" இறுதியில் திருப்பங்கள் நேரிடும் போது "அவை எதிர்ப்பார்த்தவை தான் என்று கருதிக் கொள்ளுகிற போதிலும் மிகவும் திகிலூட்டக்கூடியது" என்று கூறினார்.[4]

தொடருக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ரோட்டன் டொமேட்டோஸ் திரைப்பட வலைத்தளத்தில் இந்த தொடருக்கு 61 சதவீதம் ஒப்புதல் கிடைத்தது.[5] மெட்டாக் கிரிட்டிக்கில் 100 க்கு 51 மதிப்பெண்கள் கிடைத்தன[6]. தி கார்டியன் பத்திரிக்கை தொடருக்கு 2 மதிப்பெண்கள் மட்டுமே அளித்து, "முக்கோணங்கள் இவ்வளவு சலிப்பூட்டும் என்று யார் கண்டது?" என்று விமர்சித்தது.[7]

ரோலிங் ஸ்ட்டோன் வலைத்தளம் "நெட்ஃப்ளிக்ஸின் கவர்ச்சியான திகில் தொடர் அடுத்தடுத்து நிகழும் தேவையில்லாத கிறுக்குத்தனமான திருப்பங்களால் தன்னைத் தானே அழித்து கொள்கிறது" என்றும் தி இண்டிப்பெண்டண்ட் "ஒரு விசித்திரமான திருப்பம் அலுப்பு கொட்டாவிகளை ஈடு செய்யாது" என்றும் தி ஐரிஷ் டைம்ஸ் "நீங்கள் கவரப்பட்டிருக்கலாம் அல்லது உங்கள் வாழ்க்கையில் ஆறு மணி நேரம் வீணானதை எண்ணி கவலைக் கொண்டிருக்கலாம்" என்றும் விமர்சித்தன.[8][9][10]

மேற்கோள்கள்

தொகு
  1. "காங்கிரஸ் லைப்ரரி நூலகத்தில் பிஹைண்ட் ஹேர் ஐஸ் பற்றிய தரவு (ஆங்கிலம்)".
  2. "நெட்ஃப்ளிக்ஸ் தொடரைப் பற்றி பிலிம் அண்ட் டிவி நௌ வலைத்தளத்தில் வெளியான செய்தி (ஆங்கிலம்)".
  3. "ஹாலிவுட் ரிப்போர்ட்டர் வலைத்தளத்தில் பிஹைண்ட் ஹேர் ஐஸ் கதையை பற்றிய தகவல் (ஆங்கிலம்)".
  4. "பிஹைண்ட் ஹேர் ஐஸ் தி கார்டியன் விமர்சனம் (ஆங்கிலம்)".
  5. "பிஹைண்ட் ஹேர் ஐஸ் ரோட்டன் டொமேட்டோஸ் விமர்சனம் (ஆங்கிலம்)".
  6. "பிஹைண்ட் ஹேர் ஐஸ் மெட்டாக் கிரிட்டிக் விமர்சனம் (ஆங்கிலம்)".
  7. "பிஹைண்ட் ஹேர் ஐஸ் தி கார்டியன் விமர்சனம் (ஆங்கிலம்)".
  8. "பிஹைண்ட் ஹேர் ஐஸ் தி ஐரிஷ் டைம்ஸ் விமர்சனம் (ஆங்கிலம்)".
  9. "பிஹைண்ட் ஹேர் ஐஸ் தி இண்டிப்பெண்டண்ட் விமர்சனம் (ஆங்கிலம்)".
  10. "பிஹைண்ட் ஹேர் ஐஸ் ரோலிங் ஸ்ட்டோன் விமர்சனம் (ஆங்கிலம்)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஹைண்ட்_ஹேர்_ஐஸ்&oldid=3718164" இலிருந்து மீள்விக்கப்பட்டது