பி. என். சந்திரப்பா
பி. என். சந்திரப்பா (B. N. Chandrappa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 16ஆவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் [1]
பி. என். சந்திரப்பா B.N. Chandrappa | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர், இந்திய நாடாளுமன்றம் சித்ரதுர்கா மக்களவைத் தொகுதி | |
பதவியில் 17 மே 2014 – 23 மே 2019 | |
முன்னையவர் | சனார்தன சுவாமி |
பின்னவர் | ஏ நாராயணசுவாமி |
தொகுதி | சித்ரதுர்கா மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 அக்டோபர் 1955 இலக்கவல்லி, மைசூர் மாநிலம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சி.டி.காவ்யா (01 மார்ச்சு 1992) |
பிள்ளைகள் | 1 மகன் மற்றும் 1 மகள் |
வாழிடம்(s) | சித்ரதுர்கா, கருநாடகம், இந்தியா |
வேலை | விவசாயி, அரசியல்வாதி |
As of 15 திசம்பர், 2016 மூலம்: [1] |
ஏப்ரல் 9, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று பி. என். சந்திரப்பா கேரளப் பிரதேச காங்கிரசு குழுவின் செயல் தலைவராக காங்கிரசு கட்சியால் நியமிக்கப்பட்டார். [2] [3] கர்நாடகா பிரிவுக்கு டி.கே.சிவகுமார் தலைமை தாங்கினார். [4]
வாழ்க்கை குறிப்பு
தொகு1955 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள இலக்கவல்லி நகரில் நாகப்பா மற்றும் இலக்சுமம்மா ஆகியோருக்கு சந்திரப்பா மகனாகப் பிறந்தார்.
1986 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை சில்லா பரிசத்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் 1991 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை துணைத் தலைவர் பதவியை வகித்தார், மாநில அமைச்சர் தகுதியைப் பெற்ற சந்திரப்பா 2001 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை எசு.எம்.கிருசுணா ஆட்சியில் இலித்கர் தலைவராகவும் பணியாற்றினார். [5]
பி.என்.சந்திரப்பா, கர்நாடகாவில் உள்ள சி.வி.ராமன் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார், அங்குதான் இவர் தனது கல்வியைத் தொடர்ந்தார்.. [6]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசந்திரப்பா எசு.டி.காவ்யா என்ற பெண்ணைத் 1992 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 1 ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். [7]
பதவிகள்
தொகு# | தொடக்கம் | முடிவு | பதவி |
---|---|---|---|
1. | 1986 | 1991 | சில்லா பரிசத்து உறுப்பினர், சிக்கமங்களூர் |
2. | 1991 | 1992 | துணைத் தலைவர், (துணை அமைச்சர் பதவி), சில்லா பரிசத்துசிக்கமங்களூர் |
3. | 2001 | 2003 | தலைவர், கர்நாடக மாநில இலித்கர் வாரியம் [8] |
4. | 2014 | சித்ரதுர்கா மக்களவை தொகுதி 16ஆவது மக்களவை எம்.பி.
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
- ↑ "B.N. Chandrappa, ex-MP, appointed KPCC working president" (in en-IN). 2023-04-09. https://www.thehindu.com/news/national/karnataka/bn-chandrappa-ex-mp-appointed-kpcc-working-president/article66717325.ece.
- ↑ "Ahead of Assembly polls, Karnataka Congress appoints BN Chandrappa as working president of state unit" (in ஆங்கிலம்). 2023-04-09. பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.
- ↑ "Karnataka Assembly Election 2023: Congress appoints BN Chandrappa as fifth working president" (in ஆங்கிலம்). 2023-04-09. பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.
- ↑ "Congress reaches out to SCs, appoints Chandrappa KPCC working president". பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.
- ↑ "B.N.CHANDRAPPA : Bio, Political life, Family & Top stories". The Times of India. https://timesofindia.indiatimes.com/elections/candidates/b-n-chandrappa.
- ↑ "Members : Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
- ↑ "B N Chandrappa: Age, Biography, Education, Wife, Caste, Net Worth & More - Oneindia". பார்க்கப்பட்ட நாள் 2019-02-17.