பி. சி. சர்க்கார்
புரோதுல் சந்திர சர்க்கார் (Protul Chandra Sorcar; 23 பிப்ரவரி 1913 – 6 ஜனவரி 1971) ஒரு இந்திய மாய வித்தையாளர் ஆவார். [1] இவர் 1950கள் மற்றும் 1960கள் முழுவதும் சர்வதேச அளவில் செயல்பட்ட மாய வித்தைக்காராக இருந்தார், நேரடி பார்வையாளர்கள் மற்றும் தொலைக்காட்சியில் இவர் இந்திரஜால் என்ற நிகழ்ச்சியை நிகழ்த்தினார். 1971 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி, யப்பானின் ஹொக்கைடோவில் உள்ள அசஹிகாவாவில், தனது 57 வயதில் மாரடைப்பால் இறந்தார். [2]
புரோதுல் சந்திர சர்க்கார் | |
---|---|
பிறப்பு | தங்காயில், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது டாக்கா கோட்டம், வங்காளதேசம்) | 23 பெப்ரவரி 1913
இறப்பு | 6 சனவரி 1971 அசஹிகாவா, ஹொக்கைடோ, யப்பான் | (அகவை 57)
தேசியம் | இந்தியா |
பணி | மாய வித்தையாளர் |
வாழ்க்கைத் துணை | வசந்தி தேவி |
பிள்ளைகள் | 3 மகன்கள், மாணிக் சர்க்கார், இளைய பி. சி. சர்க்கார், மிக இளைய பி. சி. சர்க்கார் |
தொழில்
தொகு21 வயதில், சர்க்கார் முறையான கல்வியை கைவிட முடிவு செய்தார் (ஒரு பொறியியலாளராக படிக்க வாய்ப்பிருந்தது). மேலும் இந்தியாவில் தொழில் நடத்த குறைந்த அளவே வாய்ப்பிருந்தாலும், மாய வித்தை செய்பவபராக மாற முடிவு செய்தார். [3] :151
1930களின் நடுப்பகுதியில் கொல்கத்தாவிலும் யப்பான் போன்ற பல நாடுகளிலும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியபோது சர்க்கார் பிரபலமானார். தனது பிற நிகழ்ச்சிகளிடையே 1964இல் பூமிக்கு மேலே மிதக்கும் ஒரு பெண்ணின் சாகசத்தை நிகழ்த்தினார். [4] கணபதி சக்கரவர்த்தி இவருக்கு வழிகாட்டியாக இருந்தார். [5]
1956 இல், பிபிசியின் பனோரமா நிகழ்ச்சியில் மாயைவித்தையில் ஒரு பெண்ணை இரண்டாக அறுக்கும் நிகழ்ச்சியை இவர் நிகழ்த்தினார். [6] அதை நேரடியாக தொலைக்காட்சி நிகழ்ச்சியாக நிகழ்த்தியபோது, ஐக்கிய ராச்சியத்தில் அது பெரும் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் முடிவில் பெண்கள் உண்மையில் பாதியாக வெட்டப்பட்டு இறந்தது போல் தோன்றியது, இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. [7]
இவர் "உலகின் சிறந்த மந்திரவாதி" என தனக்குத்தானே பெயரிட்டுக் கொண்டார். [8] :152
சர்க்கார் 1971 இல் யப்பானில் இறந்தார். [9] :153
சொந்த வாழ்க்கை
தொகுசர்க்கார், வசந்தி தேவி என்பவரை மணந்தார். இவர்களுக்கு மாணிக் சர்க்கார் மற்றும் இளைய பி. சி. சர்க்கார் உட்பட மூன்ரு மகன்கள் இருந்தனர்.
விருதுகள்
தொகு- இந்திய அரசு கொல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய தெருவுக்கு ஜாதுசாம்ராட் பிசி சர்கார் சரணி என இவரது பெயரை சூட்டியுள்ளது
- 26 ஜனவரி 1964 அன்று இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது
அஞ்சல் முத்திரை
தொகுபிப்ரவரி 23, 2010 அன்று, இந்திய அஞ்சல் துறை இவரை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவு முத்திரையை வெளியிட்டது. [10] [11]
சான்றுகள்
தொகு- ↑ Banglapedia: National Encyclopedia of Bangladesh.
- ↑ "PC Sorcar: India's 'maharajah of magic' who terrified the UK". BBC.
- ↑ Randi, James (1992). Conjuring. New York: St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-08634-2. இணையக் கணினி நூலக மைய எண் 26162991.
- ↑ "Magic of PC Sorcar Senior". Archived from the original on 27 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2 January 2014.
- ↑ "P. C. Sorcar | The Asian Age Online, Bangladesh". The Asian Age (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-15.
- ↑ "PC Sorcar: India's 'maharajah of magic' who terrified the UK" (in en-GB). BBC News. 2018-06-02. https://www.bbc.com/news/world-asia-india-44316854.
- ↑ "PC Sorcar: India's 'maharajah of magic' who terrified the UK" (in en-GB). BBC News. 2018-06-02. https://www.bbc.com/news/world-asia-india-44316854.
- ↑ Randi, James (1992). Conjuring. New York: St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-08634-2. இணையக் கணினி நூலக மைய எண் 26162991.Randi, James (1992). Conjuring. New York: St. Martin's Press. ISBN 0-312-08634-2. OCLC 26162991.
- ↑ Randi, James (1992). Conjuring. New York: St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-08634-2. இணையக் கணினி நூலக மைய எண் 26162991.Randi, James (1992). Conjuring. New York: St. Martin's Press. ISBN 0-312-08634-2. OCLC 26162991.
- ↑ "Postage Stamps". India Post.
- ↑ "Postage stamp on P.C. Sorcar issued". The Hindu. 24 February 2010. http://www.thehindu.com/news/national/article112380.ece.