பி. ஜே. தாமஸ், பராகுன்னெல்

இந்திய பொருளாத அறிஞர்

பி. ஜே. தாமஸ், பரேகுனெல் (P. J. Thomas, Parakunnel, 1895 - 1965) என்பவர் சுதந்திர இந்தியாவின் முதல் பொருளாதார ஆலோசகர் ஆவார். இவர் மதராஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் பின்னர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை) உறுப்பினராகவும் இருந்தார். [1]

பி. இயே. தாமசு
P. J. Thomas
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
22 ஏப்ரல் 1957 – 2 ஏப்ரல் 1962
தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில்
1937–1942
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1895-02-25)பெப்ரவரி 25, 1895
குறுவிலங்காடு, கோட்டயம் மாவட்டம், திருவிதாங்கூர்
இறப்புஆகத்து 16, 1965(1965-08-16) (அகவை 70)
தேசியம்இந்தியர்
பெற்றோர்பாரேகுனல் இயோசப்பு
அன்னம்மா தாமசு
வேலைஎழுத்தாளர், வரலாற்றாசிரியர், பொருளாதார நிபுணர்

வாழ்க்கைவரலாறு

தொகு

இவர் 1895 ஆம் ஆண்டில் கேரளத்தின், கோட்டயம் மாவட்டம், மீனாசில் தாலுகாவில் உள்ள பாலைக்கு அருகிலுள்ள குறுவிலங்காட்டில், தக்கமன் உசெப் மற்றும் பக்கலோமட்டம்-பரேகுனெல் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமா தாமஸ் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். மன்னம் புனித எபிரைம் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், சி. எம். எஸ். கோட்டயம் கல்லூரியில் இடைநிலை படிப்பையும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையும் முடித்தார்.

துவக்கத்தில் திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். 1920 இல் இவர் இங்கிலாந்து சென்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பல்லியோல் கல்லூரியில் பி. லிட் (1920-1922) பயின்றார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் டி. பில்., (1922-1924) பயின்றார். இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு இவர் இலங்கைப் பல்கலைக்கழகம் (1924-1927) மற்றும் மதராஸ் பல்கலைக்கழகத்தில் (1927-1942) பேராசிரியராக பணியாற்றினார். [2]

இவர் மதராஸ் சட்டமன்ற உறுப்பினராக 1937 முதல் 1942 வரை இருந்ததைத் தொடர்ந்தது இவரது பொது வாழ்க்கை தொடங்கியது. 1942 ஆம் ஆண்டில் இவர் இந்திய அரசாங்கத்தின் நிதித் துறையின் ஆலோசகரானார். இந்தியாவின் விடுதலைக்குப் பிறகும் அப் பதவியில் தொடர்ந்தார். அப்பதவியில் 1948 வரை 6 ஆண்டுகள் இருந்தார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியை நிறுவிய பிரெட்டன் வட்சு ஒப்பந்தத்தில் டாக்டர் தாமஸ் கையெழுத்திட்டார். இவர் 1945 இல் ஐக்கிய நாடுகளின் பட்டையத்தில் கையெழுத்திட்ட இந்திய தூதுக்குழுவில் உறுப்பினராக இருந்தார்.

அரசு பணியிலிருந்து விலகிய பின்னர், பாலாய் செயின்ட் தாமஸ் கல்லூரியின் நிறுவனர்-துணைவேந்தராக (1950–1952) பணியாற்றினார். பின்னர் இவர் மாநிலங்களவையின் உறுப்பினரானார் (1957-1962).

இவர் 1965, சூலை, 26 அன்று இறந்தார். இவரது உடலானது இந்தியாவின் கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவாவில் உள்ள எர்ணாகுளம்-அங்கமாலி பேராயரின் கிழகம்பலம் ஃபோரானின் கீழ் வரும் இன்பன்ட் ஜீசஸ் தேவாலயத்தின் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

பிரபலமான படைப்புகள்

தொகு
  • 'The Indian calico trade and its influence on English history', B. Litt. thesis, Oxford, 1922.'
  • Mercantilism and the East India trade', P. S. King and Son Ltd., London, 1926[3]
  • 'The South Indian tradition of the Apostle Thomas', Journal of the Royal Asiatic Society, London, England, 1924, Centenary supplement, pp. 213–223
  • 'The beginnings of calico-printing in England', English historical review, XXXIX(154), April 1924, pp. 206–216.'
  • 'Was the Apostle St. Thomas in South India?', Madras, 1929
  • 'An ancient monastery of St. Thomas in Mylapore', Madras, 1934.
  • 'The problem of rural indebtedness', Madras, 1934.
  • 'India in the world depression', The Economic Journal, Vol. 45, No. 179, Sep. 1935, pp. 469–483.
  • 'Malayalam literature and Christians' SPCS, Kottayam, 1961. First Edition: St. Mary's Press, Athirampuzha, 1935
  • 'Economic depression in the Madras presidency (1825–54)', with B. Natarajan, The Economic History Review, VII(1), Nov. 1936, pp. 67–75
  • 'The marriage customs of the St. Thomas Christians of Malabar', Madras, 1936.
  • 'Indian currency in the depression', The Economic Journal, Vol. 48, No. 190, Jun. 1938, pp. 237–248.'The growth of federal finance in India: being a survey of India's public finances from 1833 to 1939', Humphrey Milford, Oxford University Press, Madras, 1939. Partly composed as D. Phil. thesis, Oxford, 1924.
  • 'Indian agricultural statistics: an introductory study', with N. Sundararama Sastry, University of Madras, Madras, 1939. Review.
  • 'Economic results of prohibition in the Salem District (Oct. 1937-Sept. 1938)', University of Madras economics series, no. 2, Madras, 1940.
  • 'Commodity prices in South India, 1918-1938', with N. Sundararama Sastry, University of Madras economics series, no. 3, Madras, 1940.
  • 'Some South Indian villages: a resurvey', with R. C. Ramakrishnan, University of Madras economics series, no. 4, Madras, 1940. Review.
  • 'Studies in the price of rice in South India', Sankhya: the Indian journal of statistics, V(3), 1940, pp. 195–200.
  • 'The census as an agency for economic planning', Sankhya: the Indian journal of statistics, V(3), 1940, pp. 247–248.
  • 'Report on the regulation of the stock market in India', Department of Finance, Government of India, 1948
  • 'India's basic industries', Orient Longman, Calcutta, 1948.'Kerala's trading class', Journal of the Rama Varma Archaeological Society, XIV (1948), Trichur.
  • 'St. Thomas the Apostle: A souvenir of the 19th century of his arrival in India', Ernakulam, 1952.

மேற்கோள்கள்

தொகு
  1. http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/t.pdf
  2. "Archived copy". Archived from the original on 2010-08-15. பார்க்கப்பட்ட நாள் 2010-05-11.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. Mercantilism and the East India Trade: Joseph Thomas Parkakunnel: 9780714613611: Amazon.com: Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0714613614.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜே._தாமஸ்,_பராகுன்னெல்&oldid=4053358" இலிருந்து மீள்விக்கப்பட்டது