பி. நர்சிங் ராவ்

தெலுங்குத் திரைப்பட இயக்குநர்

போங்கு நர்சிங் ராவ் (Bongu Narsing Rao) (பிறப்பு 1946) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை ஆசிரியரும் எழுத்தாளரும் இசையமைப்பாளரும் கவிஞரும் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகரும் மற்றும் ஓவியரும் ஆவார். இவர் முக்கியமாகத் தெலுங்குத் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் பணியாற்றுகிறார்.[1][2] ராவ் ஐந்து தேசிய திரைப்பட விருதுகள், மூன்று நந்தி விருதுகள், பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், பல்வேறு ஆசிய திரைப்பட விழாக்களில் நடுவர் குழுவில் பணியாற்றியுள்ளார்.[3][4][5] 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் முறையே 16 மற்றும் 17 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற தாசி மற்றும் மட்டி மனுசுலு ஆகிய படங்களை இவர் இயக்கினார்.[6]

பி. நர்சிங் ராவ்
2015இல் ராவ்
பிறப்புபோங்கு நர்சிங் ராவ்
26 திசம்பர் 1946 (1946-12-26) (அகவை 77)
பிரக்னாப்பூர், ஐதராபாத் இராச்சியம் (நவீன தெலங்காணா, இந்தியா)
படித்த கல்வி நிறுவனங்கள்உசுமானியா பல்கலைக்கழகம்
பணிஇயக்குநர், நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
விருதுகள்சர்வதேச விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள்
நந்தி விருது

சொந்த வாழ்க்கை. தொகு

இவர் ஐதராபாத் இராச்சியத்திலிருந்த மேதக் மாவட்டத்தின் பிரக்னாபூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.[7] நரசிங்க ராவ் திருமணமானவர். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் மற்றும் ஏழு பேரக்குழந்தைகள் உள்ளனர்.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Passion For Possession". Channel6 Magazine. Archived from the original on 15 October 2014. பார்க்கப்பட்ட நாள் 31 May 2013.
  2. "Meet the cultural icons of Telangana, India's newest state - Mission Telangana". 16 June 2014.
  3. "39th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 27 February 2012.
  4. "B.Narsing Rao - "The classic director"". reachouthyderabad.com. பார்க்கப்பட்ட நாள் 10 April 2010.
  5. "News Archives". தி இந்து. 2011-05-15. Archived from the original on 2011-08-19.
  6. "100 Years of Indian Cinema: The 100 greatest Indian films of all time". IBNLive. Archived from the original on 2013-04-24.
  7. Metro India (2016-09-28). "Censorship curbing freedom of speech". Metroindia.com. Archived from the original on 7 September 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-09-07.
  8. ABN Telugu (7 January 2018). "Director B Narsing Rao About his Films - Open Heart With RK - ABN Telugu". Archived from the original on 2021-12-15 – via YouTube.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._நர்சிங்_ராவ்&oldid=3933464" இலிருந்து மீள்விக்கப்பட்டது