பி. நாகராசன்
பி. நாகராசன் (பிறப்பு: அக்டோபர்31 1961) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர். கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகிலுள்ள கொழுமம் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது தேனியிலுள்ள உணவகம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழ்நாட்டில் வெளியாகும் அச்சிதழ்களில் துணுக்குகள் (குறுந்தகவல்கள்) மற்றும் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியிருக்கிறார். மேடை நாடகங்களில் பல வேடங்களில் நடித்திருக்கிறார். தபால்தலைகள், நாணயங்கள், சாவிக்கொத்துகள் போன்றவைகளை சேகரிக்கும் வழக்கமுடையவர்.
பி. நாகராசன் | |
---|---|
பிறப்பு | பி. நாகராசன் அக்டோபர் 31, 1961 கொழுமம், உடுமலைப்பேட்டை, தமிழ்நாடு, இந்தியா. |
இருப்பிடம் | தேனி |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | தேனி ராஜதாசன், எஸ். பி. நாகராசன் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | வெ. பிச்சமுத்து (தந்தை), மீனாட்சியம்மாள் (தாய்) |
வாழ்க்கைத் துணை | கிருஷ்ணவேணி |
பிள்ளைகள் | விவேகானந்தா (மகன்), பிரியதர்சன் (மகன்) |
உறவினர்கள் | சகோதரி - 2 |
விருதுகள் | கலைச்சுடர் மணி விருது, தமிழ்ச்செம்மல் விருது |
எம்.ஜி.ஆர் ரசிகர்
தொகுஇவர் எம்ஜிஆர் நடிப்பில் தீவிரமான பற்றுதலுடையவர். பத்திரிகைகளில் வெளியான எம்.ஜி.ஆர். படங்கள், செய்திகள் போன்றவற்றைச் சேகரித்துத் தனியாகப் புத்தகக் கட்டுகளாக்கித் தொகுத்து வைத்துள்ளார். எம்.ஜி.ஆர் படத்துடன் வெளியான பல பொருட்களையும் இவர் சேகரித்து வைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர் குறித்த நினைவுகளைச் சேகரிப்பதற்காகத் தனியாக “எம்.ஜி.ஆர் நினைவுக் களஞ்சியம்” எனும் ஒரு அமைப்பையும் இவர் நிறுவியிருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் இவர் தொகுத்துள்ள, சேகரித்துள்ள எம்ஜிஆர் நினைவுகளைக் கண்காட்சி அமைத்துக் காட்சிப்படுத்தியும் வருகிறார்.
கலைப் பொருட்கள் சேகரிப்பாளர்
தொகுஇவர் பன்னாட்டுத் தபால்தலைகள், பன்னாட்டு நாணயங்கள், சாவிக் கொத்துகள், பேனா போன்றவைகளை அதிக அளவில் சேகரித்து வைத்திருக்கிறார். தன்னுடைய சேகரிப்புகளைக் கொண்டு பள்ளி, கல்லூரி மற்றும் பல பொது இடங்களில் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடத்தில் தபால்தலை, நாணயம் மற்றும் அரிய பொருட்களைச் சேகரிக்கும் வழக்கத்தை ஊக்கப்படுத்தி வருகிறார்.
வெளியான நூல்கள்
தொகு- அற்புதங்கள் நிறைந்த அபூர்வக் கோயில்கள்
- காலத்தை வென்ற காவிய நாயகன் எம்ஜிஆர் [1]
விருது
தொகு- தமிழ்நாடு அரசின் தேனி மாவட்டக் கலை - பண்பாட்டுத் துறையின் மூலம் இவருக்கு, 2010 ஆம் ஆண்டு சிறந்த மேடை நாடக நடிகருக்கான “கலைச்சுடர் மணி விருது” வழங்கப்பட்டது.
- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் இவருக்கு, 2019 ஆம் ஆண்டுக்கான “தமிழ்ச்செம்மல் விருது” வழங்கப்பட்டது. [2]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- எம்ஜிஆர் பரிசளித்த வெளிநாட்டு கேமரா: தனி அறையில் வைத்து பாதுகாக்கும் எழுத்தாளர் - தி இந்து தமிழ்திசை செய்தி
- எம்ஜிஆரின் அதி தீவிர ரசிகக் கண்மணிகளில் சிலர் - தினமணி கட்டுரை
- எம்ஜிஆர் கொடுத்த ஜப்பான் கேமரா.. தீவிர ரசிகர் சொன்ன நெகிழ்ச்சிக் கதை! - நியூஸ் 18 தமிழ் செய்தி
- MGR: 1000 புகைப்படத் தொகுப்புகள்; எம்.ஜி.ஆர் கொடுத்த கேமரா; நினைவுகளைப் பகிரும் ரசிகர் ராஜதாசன் - விகடன்.காம் தளச் செய்திக்கட்டுரை