பி. பி. உம்மர் கோயா
பி. பி. உம்மர் கோயா (P. P. Ummer Koya ) என்பவர் அரசியல்வாதி, காந்தியவாதி, சுதந்திர போராட்ட வீரர் மற்றும் கல்வியாளர் என்ற பண்முகங்கொண்ட ஓர் இந்தியர் ஆவார். [1] கேரள அரசின் இரண்டாவது கல்வி அமைச்சராக பட்டம் தாணு பிள்ளை தலைமையின் கீழ் இவர் செயல்பட்டார். [2] பின் ஆர்.சங்கர் அரசின் கீழ் பொதுத்துறை அமைச்சராக இருந்தார்.[3]
பொது வாழ்க்கை
தொகுகோழிக்கோடு என்னும் ஊரில் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூலம் பொது வாழ்க்கையில் ஈடுபட்டார். மலபார் பிரதேச காங்கிரசு கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். எனவே 1952 ஆம் ஆண்டில் உமர் மலபார் இளைஞர் காங்கிரசு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். [4] பின் இரண்டு ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு சட்ட மேலவை பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். [5] 1960 ஆண்டு தேர்தலில் மஞ்சேரி தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டு கேரள சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [6][7]
கோயா கல்வித் துறை அமைச்சராக பட்டம் தாணு பிள்ளை அரசின் கீழ் 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 1962 ஆண்டு வரை செயல்பட்டார். ஆர். சங்கர் தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சராக 1962 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 1964 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை செயல்பட்டார். [8] மேலும் இவர் கேரள பிரதேச காங்கிரசு குழுவின் துணைத்தலைவராக பணிபுரிந்தார். கோயா கேரள பொதுத் துறை குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[5]
கே. கேளப்பன் மத்திய அமைச்சர் மற்றும் எம்.கே. குமரன் அவர்களுடன் இணைந்து கோலா மதுவிலக்கு போராட்டத்தில் கலந்து கொண்டார்.[9]
பி.பி. உமர் கோயா விருதுகள்
தொகுபி.பி. உமர் கோயா அறக்கட்டளை , கோழிக்கோடு நிறுவனம் அவர் பெயரில் உமர் கோயா விருதுகள் வழ்ங்கியது. இவ் விருது பெற்ற முக்கியமானவர்கள் நீதிபதி.பி.கே. சாம்சுத்தின் 2007 ஆம் ஆண்டும்[10], சுதந்திரப் போராட்ட வீரர் கே. இ. மாமென் 2008 ஆம் ஆண்டும் [11] , மற்றும் சமூக சேவகரும் சுற்றுச்சூழல் ஆய்வாளரான எ. அச்சுதன் 2009 ஆம் ஆண்டு பெற்றனர்.[12]
கோயா 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் காலமானார். அவருக்கு கேரள சட்டமன்றம் சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ex-Education Minister dead". The Tribune. 2000-09-02. http://www.tribuneindia.com/2000/20000902/nation.htm. பார்த்த நாள்: 2009-08-23.
- ↑ "SECOND KERALA LEGISLATIVE ASSEMBLY". Information and Public Relation Department of Kerala. Archived from the original on 2010-01-08. பார்க்கப்பட்ட நாள் 2009-08-24.
- ↑ "COUNCIL OF MINISTERS SINCE 1957 - SECOND KLA". Kerala Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 2009-08-23.
- ↑ "Former Kerala minister P.P. Ummer Koya dies". Indiainfo.com. 2000-09-01 இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063430/http://news.indiainfo.com/2000/09/01/01omer.html. பார்த்த நாள்: 2009-08-23.
- ↑ 5.0 5.1 "P.P. UMMER KOYA". stateofkerala.in. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-08-24.
- ↑ "MEMBERS OF PREVIOUS ASSEMBLY - SECOND KLA (1960 - 1964)". Kerala Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 2009-08-23.
- ↑ "Statistical Report on General Election, 1960 to the Legislative Assembly of Kerala" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-08-23.
- ↑ "The official web site of the Department of General Education, Government of Kerala". Department of General Education, Govt. of Kerala. Archived from the original on 2009-07-27. பார்க்கப்பட்ட நாள் 2009-08-23.
- ↑ "Special issue of 'Prohibition' released". The Hindu. 2008-07-08 இம் மூலத்தில் இருந்து 2007-03-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070310191438/http://www.hindu.com/2006/07/08/stories/2006070804570200.htm. பார்த்த நாள்: 2009-08-24.
- ↑ "Death anniversary". The Hindu. 2007-09-01 இம் மூலத்தில் இருந்து 2007-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071210114004/http://www.hindu.com/2007/09/01/stories/2007090151320300.htm. பார்த்த நாள்: 2009-08-24.
- ↑ "Kozhikode Today". The Hindu. 2008-08-30 இம் மூலத்தில் இருந்து 2008-09-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080914200736/http://www.hindu.com/2008/08/30/stories/2008083052510300.htm. பார்த்த நாள்: 2009-08-24.
- ↑ "Award for Achyuthan". The Hindu. 2009-08-20 இம் மூலத்தில் இருந்து 2012-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107021053/http://www.hindu.com/2009/08/20/stories/2009082053920300.htm. பார்த்த நாள்: 2009-08-24.