பி. வி. எஸ். வெங்கடேசன்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர்
பி. வி. எஸ். வெங்கடேசன் (P. V. S. Venkatesan, சூலை 10, 1947 - செப்டம்பர் 25, 2018) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் 1996 சட்டமன்றத் தேர்தலில், காவேரிப்பட்டிணம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து, தமிழக சட்டமன்றத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் காவேரிப்பட்டிணத்தில் 1947, சூலை 10 அன்று ஸ்ரீராமுலு நாயுடு, தேவகியம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஸ்ரீராமுலு நாயுடு கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் ஆவார். பி. வி. எஸ். வெங்கடேசன் உடல்நலக்குறைவால் 2018, செப்டம்பர் 25 அன்று இறந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 7. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ "திமுக முன்னாள் எம்எல்ஏ பி.வி.எஸ். வெங்கடேசன் காலமானார்". செய்தி. தினகரன். 25 செப்டம்பர் 2018. Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help)