பீகல் (Beagle) ஒரு சிறிய, ஆனால் தோற்றத்தில் மிகப்பெரியதான நரிவேட்டைநாயைப் (ஃபாக்ஸ்ஹவுண்ட்) போன்ற முயல்வேட்டை நாயினம். இந்த பீகல் ஒரு மோப்ப நாய். தேடுவதற்காகவும் , வேட்டையாடவும் ஏற்பட்ட இனப்பெருக்க நாய் ஆகும். மோப்ப சக்தியாலும் உள்ளுணர்வு சக்தியாலும் தேடிக்கண்டுபிடிக்கும் மோப்ப நாயாக, தடை செய்யப்பட்ட இறக்குமதி பொருட்கள், உணவுப்பொருட்கள் இவற்றைத் தேடும் பணியில் விடப்படுகிறது. பீகல் புத்திசாலியான நாய்; ஆனால் ஒற்றை மனநிலை கொண்டது. அதன் அளவினாலும் மனோனிலையாலும் பரம்பரை நோயின்மையாலும் அது ஒரு பிரபல நாயாக உள்ளது.

பீகல்
Beagle image
மூநிற பீகல்
பிற பெயர்கள் ஆங்கில பீகல்
தோன்றிய நாடு இங்கிலாந்து
தனிக்கூறுகள்
எடை ஆண் 22–25 lb (10.0–11.3 kg)
பெண் 20–23 lb (9.1–10.4 kg)
உயரம் 13–16 அங் (33–41 cm)
நிறம் மூநிறம் அல்லது கறுப்பும் பழுப்புடன் வெள்ளை
வாழ்நாள் 12–15 வருடங்கள்
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

பீகல் வகை நாய்கள் 2500 ஆண்டுகளாக உள்ளன என்றாலும், பெரிய பிரித்தானியாவில் 1830 இற்குப் பின்னரே டால்பட், வடகவுன்டி பீகல், தெற்கத்திய வகை வேட்டை நாய், ஹேரியர் முதலிய பற்பல இனப்பெருக்க நாய்கள் மூலமாக நவீன வகை பீகில் நாய்கள் உருவாக்கப்பட்டன.

பீகல், எலிசபெத் காலத்திலிருந்து இலக்கியம், ஓவியம், திரைப்படம், தொலைக்காட்சி, காமிக் புத்தகங்கள் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது. ஸ்னூபி எனப்படும் "காமிக் ஸ்ட்ரிப் பீனட்சின்" கதாபாத்திரமான "ஸ்னூபி" உலகிலேயே பிரபலமான பீகல் நாயாகும்.[1]

நவீன பீகல் போன்ற அளவும் குணாதிசயங்களும் உடைய நாய்களின் தடயங்களைத் தேடினால் பண்டைய கிரீஸ் [2] மற்றும் கி மு 5வது நூற்றாண்டை ச் சேர்ந்தவை என்று அறியலாம். கி மு 430 ல் பிறந்த க்ஸெனொபோன் என்ற நாயின் மீது வேட்டை மற்றும் ஸைனஜெடிச்ஸ் பற்றிய ஆய்வுக்கட்டுரையைப் பார்த்தால் இவை முயல்களை மோப்பசக்தியாலும் பின்னால் தொடர்ந்து சென்றும் வேட்டியாடும் வேட்டை நாயெனத் தெரிகிறது. ஸில்வியா வெப் என்பவர் பீகல் நாய்களை வைத்திருந்த முதல் அமெரிக்கர்களில் ஒருவர் ஆவார். கான்யுட் அரசரின் காட்டு சட்டத்தில் சிறிய வேட்டை நாய்களைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அந்த சட்டத்தின் படி மானைத் துரத்தும் எல்லா சிறு வேட்டை நாய்களுக்கும் ஒரு கால் உடைக்கப்பட வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இது உண்மையானால் பீகல் வகை நாய்கள் இங்கிலாந்தில் 1016க்கு முன் இருந்தது உறுதி செய்யப்படும். ஆனால் காட்டு சட்டத்தின் பாரம்பரியத்தில் பழமையை தோற்றுவிப்பதற்காக இந்த சட்டங்கள் இடைக்காலத்திலேயே எழுதப்பட்டிருக்கக்கூடும்.

தெற்கத்திய வேட்டை நாய் , பீகல் நாயின் மூதாதையராகக்கருதப்படுகிறது. 11வது நூற்றாண்டு வில்லியம் தி கான்குவெரர் டால்போட் என்ற வேட்டை நாயை பிரிட்டனுக்குக் கொண்டுவந்தார். டால்பொட் முக்கியமாக வெண்மையானதும், ஆழமான தொண்டையும் , மெதுவானதுமான மோப்ப நாயாகும். அது செயின்ட் ஹுபெர்ட் வேட்டை நாயிருந்து 8 வது நூற்றாண்டில் இனப்பெருக்கம் செய்யப்பட்டது. ஒரு சமயத்தில் இங்கிலீஷ் டால்போட் நாய் , கிரே ஹவுண்ட் வகை நாயுடன் அதிக வேகம் பெறும் பொருட்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது[3]. அழிந்து நெடுங்காலம் ஆகிய டால்போட்,நவீன பீகலுக்கு மூதாதையராகக் கருதப்படும் தெற்கத்திய வேட்டை நாய் உருவாகக்காரணமாயிருந்தது[b].

இடைக்காலத்திலிருந்து சிறு வேட்டை நாய்கள் நவீன இனத்திலிருந்து மாறுபட்டபோதிலும் இவற்றிற்கு பொது விளக்கமாக பீகல் பயன் படுத்தப்பட்டது. சிறியதாக்கப்பட்ட பீகல் இன நாய்கள் எட்வர்ட் II மற்றும் எட்வர்ட் VII காலத்திலிருந்தே அறியப்பட்டிருந்தன. இருவரிடமும் கிளோவ் பீகல் கட்டுகட்டாக இருந்தன. அப்படி பெயரிடப்பட்டதற்குக் காரணம் என்னவென்றால் , அவை கையுறை அதாவது கிளோவிற்குள் அடங்குமாறு மிக மிக சிறியதாக விருந்தன. குவீன் எலிஜபெத் I இடம் ஒரு பாக்கெட் பீகல் இனம் ஒன்று இருந்தது.அது 8 அல்லது 9 அங்குலம் உயரம் தோள்பட்டை வரையில் இருந்தது. வேட்டையின் போது கூடவே வரும் ஒரு பாக்கெட் அல்லது சேணப்பையில் வைக்கும் அளவிற்கு சிறியதாக் இருந்தது.பெரிய வேட்டை நாய்கள் இரையை நிலத்தில் துரத்தும், பிறகு வேட்டைக்காரர்கள் சிறு நாய்களை வெளியிட்டு புதரின் கீழ் தேடும்படி செய்வார்கள்.எலிஜபெத் I நாய்களைப்பாடும் நாயென அழைப்பார். அடிக்கடி அவர் பாக்கட் பீகல் நாய்களை அரச மேசை மீது தட்டுகளுக்கும் கோப்பைகளுக்கும் இடையில் ஆடிப்பாட விட்டு விருந்தினர்களை மகிழ்வித்தார்.[4] 19-ஆம் நூற்றாண்டு ஆதாரங்கள் இந்த இனங்களை மாறி மாறி குறிப்பிடுவர் மேலும் இரண்டு பெயர்களும் ஒரே சிறு நாய் வகையினை குறிக்க வாய்ப்புண்டு. ஜியார்ஜ் ஜெஸ்ஸெவின் 1866 லிருந்து பிரித்தானிய நாய்கள் வரலாறு பற்றிய ஆராய்ச்சியில் , 17 ஆம் நூற்றாண்டு கவிஞர் மர்ற்றும் எழுத்தாளரான கெர்வசெ மர்க்ஹம், பீகல் மனிதனின் கையில் அமரும் அளவுக்கு மிகச்சிறியது, என்று மேற்கோள் காட்டுகிறார்.[5] [6]

இந்தப்படம் 19th நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து பிற்பட்ட திரிபுகளிருந்து சிறப்பம்சங்கள் இல்லாத குறையுடைய பளுவான உடலுடன் கூடிய ஒரு நாயைக் காட்டுகிறது

சிறிய மிட்டன் பீகல் கிர்டில் பெண்களுக்குத் துணையானவை வயல் வெளிகளில் தந்திரமாக மற்ற வாடெர் வேட்டை நாய்களைப்போல் ஓடும் ,அவற்றின் முசிக் மட்டும் நாணலைப்போல் சிறியதாயும் இருக்கிறது.[5]

ஒரு பாக்கட் பீகல் எப்படி இருக்கவேண்டும் என்ற வரை முறை அதாவது ஸ்டான்டர்டு 1901-ல் தான் எழுதப்பட்டது. நவீன இனப்பெருக்கவாளர்கள் பல்வகையான பீகல் நாய்களை மறு முறை படைத்தாலும் இந்த மரபு வழி ப்பாதைகள் இப்போது அழிந்து போயின.[6]

உசாத்துணை

தொகு
  1. "உலகத்திலேயே பிரபலமான பீகல்", தி விக்டோரியா அட்வோகேட், விக்டோரியா, டெக்சாஸ், p. 54, 15 டிசம்பர் 1974, பார்க்கப்பட்ட நாள் 31 மே 2013 {{citation}}: Check date values in: |date= (help)
  2. "பிரீட் இன்பர்மேசன்". தி பீகல் கிளப் ஆப் ஆஸ்ட்ரேலியா. Archived from the original on 2010-06-15. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. ஸ்மித் p.209
  4. ஜெஸ்ஸெ (1858) pp.438–9
  5. 5.0 5.1 ஜி. ஜெஸ்ஸே வால் II, pp.223–232
  6. 6.0 6.1 "பாக்கெட் பீகல் என்றால் என்ன?". அமெரிக்கன் கென்னல் கிளப். Archived from the original on 9 ஜூன் 2007. பார்க்கப்பட்ட நாள் 9 ஜுலை 2007. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Beagle
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீகல்&oldid=3925416" இலிருந்து மீள்விக்கப்பட்டது