பீனா காக்
பீனா காக் (Beena Kak) (பிறப்பு 15 பிப்ரவரி 1954) ஓர் இந்திய அரசியல்வாதியும், பாலிவுட் நடிகையுமாவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர், அரசு மருத்துவரான எம்.ஆர். பாசின் ஆறு குழந்தைகளில் ஒருவரான பீனா பாசினாக பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இவரது சகோதரர்கள் இங்கிலாந்தில் வசிக்கும் மருத்துவர் பி. பி. பாசின், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி. பி. பாசின், மறைந்த கர்னல். இந்திரபூஷன் (2004 இல் இறந்தார்) ஆகியோர். இவரது சகோதரிகள் அமெரிக்காவில் வசிக்கும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் குசும் சூரி, எழுத்தாளரும் பெண்ணிய ஆர்வலருமான கமலா பாசின்.[1]
இவர் 1978இல் உதய்பூர் மனையியல் அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் பரோடாவின் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இவர் ஜோத்பூரில் வசிக்கும் ஒரு காஷ்மீர் குடும்பத்தைச் சேர்ந்தவரான பாரத் காக் என்பவரை மணந்தார். (இவர்கள் பின்னர் விவாகர்த்துப் பெற்று பிரிந்தனர்) ஜோத்பூர் மற்றும் உதய்பூர் அரச குடும்பங்களிலிருந்து நிலங்களை சாகிராகப் பெற்றார். இந்த குடும்பம் 300 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் இருந்து குடியேறியது. இது பீனாவின் சகோதரரால் தொடங்கப்பட்ட ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம்.
அரசியல் வாழ்க்கை
தொகுபீனாவின் முன்னாள் கணவர் பாரத் காக், ராஜஸ்தானில் குடியேறிய காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர். காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட அவரது குடும்பம், ராஜஸ்தானின் ராணி ( பாலி மாவட்டத்தில் ) இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறது. நேரு குடும்பத்துடன் நீண்டகால தொடர்புகளையும் கொண்டுள்ளது.
பாரத் காக்கை மணந்த பிறகு, பீனா 1980களின் தொடக்கத்தில் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார். 1985ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தியுடன் இணைந்து பணியாற்றினார். கோட்டா மாவட்டத்தில் தனது குழந்தைப் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் இவர் மாவட்டக் காங்கிரசின் தலைவரானார்.
1985 ஆம் ஆண்டில், பினா காக் சுமேர்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ராஜஸ்தான் சட்டமன்றதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1990 வரை சட்ட மன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1990இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட இவர் வெறும் 274 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். பினா காக் 1993இல் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998இல் சுமேர்பூர் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2003ல் தேர்தலில் தோல்வியடைந்தார். 2008இல் மீண்டும் வெற்றி பெற்றார். 2013 ஆம் ஆண்டில், இவர் தனது இருக்கையை பாரதிய ஜனதா கட்சியிடம் இழந்தார்.
பீனா காக் ராஜஸ்தான் அரசாங்கத்தில் அமைச்சராக நீண்ட காலம் பணியாற்றினார். பல்வேறு சமயங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரம், தொல்பொருள் மற்றும் அச்சிடுதல் மற்றும் எழுதுபொருட்கள் போன்ற துறைகளை வகித்துள்ளார். 1998 முதல் 2003 வரை ராஜஸ்தானின் சுற்றுலா மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சராகவும் இருந்தார்.[2] கடந்த 2013 ஆம் ஆண்டு காங்கிரசு அரசாங்கத்தில் இவர் வனத் துறை அமைச்சராக இருந்தார்.
திரைப்பட வாழ்க்கை
தொகுஇவரது குடும்பத்திற்கு நெருக்கமானவான நடிகர் சல்மான் கான் தனது 2005இல் வெளியான மைனே பியார் கியூன் கியா என்ற பாலிவுட் படத்தில் இவருக்கு ஒரு பாத்திரத்தை வழங்கினார். இதில் இவர் நாயகனுக்கு தாயகா நடித்தார். 2008 ஆம் ஆண்டில், இவர் மீண்டும் சோஹைல் கான் தயாரித்த காட் துஸி கிரேட் ஹோவில் சல்மான் கானின் தாயாக தோன்றினார். நான்ஹே ஜெய்சல்மர், துல்ஹா மில் கயா, சலாம்-இ-இஷ்க், ஜானிசார் போன்ற வேறு சில படங்களில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kamla Bhasin
- ↑ "Council of Ministers". Rajasthan Assembly website. Archived from the original on 26 July 2013.