பீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

பீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Phoenix Sky Harbor International Airport, மாற்று ஒலிபெயர்ப்பு: ஃபீனிக்ஸ் ஹார்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம், (ஐஏடிஏ: PHXஐசிஏஓ: KPHXஎப்ஏஏ LID: PHX) ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் மரிகொப்பா கவுன்ட்டியில் பீனிக்சு நகரத்தின் மைய வணிகப் பகுதியிலிருந்து தென்கிழக்கே 3 மைல்கள் (4.8 km) தொலைவில் அமைந்துள்ள பொதுத்துறை குடிசார்-படைத்துறை கூட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது அரிசோனாவிலுள்ள மிகப்பெரியதும் போக்குவரத்து மிக்கதுமான வானூர்தி நிலையமாகும்.

பீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்பீனிக்ஸ் நகரம்
இயக்குனர்பீனிக்ஸ் வானூர்திநிலைய அமைப்பு
சேவை புரிவதுபீனிக்ஸ் பெருநகரப் பகுதி
அமைவிடம்பீனிக்ஸ், அரிசோனா
மையம்
  • அமெரிபிளைட்டு
  • கிரேட் லேக்ஸ் ஏர்லைன்ஸ்
  • யுஎஸ் ஏர்வேஸ்
கவனம் செலுத்தும் நகரம்சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்
உயரம் AMSL1,135 ft / 346 m
இணையத்தளம்www.skyharbor.com
நிலப்படங்கள்
எப்ஏஏ வானூர்தி நிலைய வரைபடம்
எப்ஏஏ வானூர்தி நிலைய வரைபடம்
PHX is located in Arizona
PHX
PHX
அரிடோனாவில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
8/26 11,489 3,502 பைஞ்சுதை
7L/25R 10,300 3,139 பைஞ்சுதை
7R/25L 7,800 2,377 பைஞ்சுதை
உலங்கூர்தித் தளங்கள்
எண்ணிக்கை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
H1 60 18 பைஞ்சுதை
H2 60 18 பைஞ்சுதை
புள்ளிவிவரங்கள் (2011)
வானூர்தி இயக்கங்கள்461989
பயணியர் ஏற்றம்20213897
பயணியர் போக்குவரத்து40591948
சரக்கு டன்கள்302146
பீனிக்சில் கட்டார் எயர்வேய்ஸ் ஏர்பஸ் ஏ340

2011இல் இந்த நிலையத்தை 40,591,948 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்; ஐக்கிய அமெரிக்காவில் ஒன்பதாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. வானூர்தி இயக்கங்களில் உலகளவில் 15வது இடத்தில் உள்ளது.நாளும் 90 மில்லியன் பெறுமான பொருளியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாளிலும் 1,266 வானூர்திகள் வந்து செல்கின்றன; 111,210 பயணிகளையும் 828 டன்கள் சரக்குகளையும் கையாள்கிறது. கூட்டரசு வான்போக்குவரத்து நிர்வாகம் (FAA) பதிவுகளின்படி 2010இல் 19,225,050 வணிகப் பயணிகளும் 2011இல் 20,213,897 பயணிகளும் வானேற்றம் செய்துள்ளனர்.

இந்த வானூர்தி நிலையம் மெக்சிகன் மற்றும் அவாய் வானூர்தி நிலையங்களுக்கு மண்டல நடுவமாக விளங்குகிறது. யுஎஸ் ஏர்வேஸ் இந்த நிலையத்தின் பெரும் பயனாளர் ஆகும்.

மேற்சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு