பீனீத்தைல் ஆல்ககால்

கரிம வேதியியல் சேர்மம்

பீனீத்தைல் ஆல்ககால் (Phenethyl alcohol ) என்பது C8H10O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2-பீனைல்யெத்தனால் என்ற பெயராலும் இதை அழைப்பர். பீனீத்தைல் குழுவுடன் (C6H5CH2CH2) ஓர் ஐதராக்சில் குழு (OH) இச்சேர்மத்தில் இணைந்திருக்கிறது. நிறமற்ற நீர்மமான இது தண்ணீரில் சிறிதளவு கரைகிறது. (2 மி.லி/100 மி.லி H2O). ஆனால் பெரும்பாலான கரிமக் கரைப்பான்களுடன் இது கலக்கிறது. இயற்கையில் பரவலாகத் தோன்றும் இச்சேர்மம் பல அத்தியாவசிய எண்ணெய்களில் காணப்படுகிறது. ஓர் இனிய மலரின் வாசனையைக் கொண்டதாகவும் பீனீத்தைல் ஆல்ககால் உள்ளது.

பீனீத்தைல் ஆல்ககால்
Phenethyl alcohol[1]
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-பீனைல் ஈத்தேன்-1-ஆல்
வேறு பெயர்கள்
2-பீனைல்யெத்தனால்
பீனீத்தைல் ஆல்ககால்
பென்சைல் கார்பினால்
β-ஐதராக்சியெத்தில்பென்சீன்
பென்சீ எத்தனால்
இனங்காட்டிகள்
60-12-8 Y
ChEBI CHEBI:49000 Y
ChEMBL ChEMBL448500 Y
ChemSpider 5830 Y
DrugBank DB02192 Y
InChI
  • InChI=1S/C8H10O/c9-7-6-8-4-2-1-3-5-8/h1-5,9H,6-7H2 Y
    Key: WRMNZCZEMHIOCP-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/C8H10O/c9-7-6-8-4-2-1-3-5-8/h1-5,9H,6-7H2
  • InChI=1S/C8H10O/c9-7-6-8-4-2-1-3-5-8/h1-5,9H,6-7H2
    Key: WRMNZCZEMHIOCP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6054
SMILES
  • c1ccc(cc1)CCO
UNII ML9LGA7468 Y
பண்புகள்
C8H10O
வாய்ப்பாட்டு எடை 122.16 கி/மோல்
மணம் மென்மையான ரோசாவின் மணம்
அடர்த்தி 1.017 கி/செ.மீ3
உருகுநிலை −27 °C (−17 °F; 246 K)
கொதிநிலை 219 முதல் 221 °C (426 முதல் 430 °F; 492 முதல் 494 K)
மட. P 1.36 [2]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் JT Baker MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

வர்த்தக முறையிலான பீனீத்தைல் ஆல்ககாலை இரண்டு வழிகளில் தயாரிக்கிறார்கள். அலுமினியம் டிரைகுளோரைடு முன்னிலையில் பென்சீன் மற்றும் எத்திலீன் ஆக்சைடு ஈடுபடும் பீரிடல் கிராப்ட்சு முறை பொதுவான தயாரிப்பு முறையாகும்.

C6H6 + CH2CH2O + AlCl3 → C6H5CH2CH2OAlCl2 + HCl

வினையில் உருவாகும் அலுமினியம் அல்காக்சைடு அடுத்ததாக நீராற்பகுக்கப்பட்டு பீனீத்தைல் ஆல்ககால் உருவாகிறது. டைபீனைல்யீத்தேன் முக்கியமான உடன் விளைபொருளாகக் கிடைக்கிறது. அதிக அளவு பென்சீனை வினையில் பயன்படுத்தினால் டைபீனைல்யீத்தேன் உருவாதலை தவிர்க்க இயலும். சிடைரீன் ஆக்சைடை ஐதரசனேற்றம் செய்தும் பீனீத்தைல் ஆல்ககாலைத் தயாரிக்க முடியும்[3].

ஆய்வகத் தயாரிப்பு தொகு

பீனைல்மக்னீசியம் புரோமைடுடன் எத்திலீன் ஆக்சைடை வினைபுரியச் செய்து ஆய்வகங்களில் பீனீத்தைல் ஆல்ககால் தயாரிக்கப்படுகிறது.

C6H5MgBr + CH2CH2O → C6H5CH2CH2OMgBr
C6H5CH2CH2OMgBr + H+ → C6H5CH2CH2OH

சாக்ரோமைசெசு செரிவிசியே என்ற ஈசுட்டைப் பயன்படுத்தி பீனைலலானினை உயிரிய மாற்றம் செய்து பீனீத்தைல் ஆல்ககால் தயாரிக்கப்படுகிறது. [4]

பயன்கள் தொகு

ரோசா போன்ற நறுமண மலர் கொண்ட செடிவகைகளில் பீனீத்தைல் ஆல்ககால் தோன்றுகிறது. எனவே ரோசாவின் நறுமணம் தேவைப்படும் நறுமணப்பொருட்கள், வாசனைத் திரவியங்களில் பகுதிப்பொருளாக இது பயன்படுகிறது[3]. சிகரெட்டு, சோப்பு போன்றவற்றிலும் இது பயன்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Merck Index (11th ). பக். 7185. 
  2. "Phenylethyl alcohol_msds".
  3. 3.0 3.1 Fahlbusch, Karl-Georg; Hammerschmidt, Franz-Josef; Panten, Johannes; Pickenhagen, Wilhelm; Schatkowski, Dietmar; Bauer, Kurt; Garbe, Dorothea; Surburg, Horst (2003). "Flavors and Fragrances". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a11_141. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-527-30673-2. 
  4. "Production of 2-phenylethanol from L-phenylalanine by a stress tolerant Saccharomyces cerevisiae strain". Journal of Applied Microbiology 106 (2): 534–542. 2009. doi:10.1111/j.1365-2672.2008.04023.x. பப்மெட்:19200319. http://afish.technion.ac.il/PDF/Eshkol_et_al_2009.pdf. பார்த்த நாள்: 29 April 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனீத்தைல்_ஆல்ககால்&oldid=3221579" இலிருந்து மீள்விக்கப்பட்டது