புகழூர் (Pugalur) தமிழ்நாட்டின், கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். நன்செய்ப் புகழூர், புன்செய்ப் புகழூர் என்னும் இரு ஊர்கள் இதனுள் அடங்கும். காவிரி ஆற்றின் தென்கரையில் இந்த ஊர்கள் உள்ளன. காவிரியாற்று வெள்ளம் இவ்வூரில் புகுந்துவிடுவதால், இதனை மக்கள் புகலூர் என வழங்கப்பட்டு வந்தது.[சான்று தேவை] புன்செய்ப்புகழூரில் உள்ள பழங்காலச் சிவன் கோயில் கல்வெட்டு ஒன்று இவ்வூரைப் புகலூர் என்றே குறிப்பிடுகிறது. இவ்வூரை அடுத்துள்ள ஆண்கள், மகளிர் அரசு மேனிலைப் பள்ளிகள் இவ்வூரின் பெயரைப் புகழூர் என எழுதி வருகின்றன.

ஆலைகள்

தொகு

இவ்வூரை அடுத்து சர்க்கரை ஆலை ஒன்றும் காகித ஆலை ஒன்றும் உள்ளன.

முருகன் கோயில்

தொகு

இவ்வூரை அடுத்துள்ள வேலாயுதம்பாளையம் என்னும் ஊரில் ஆறுநாட்டான் மலை என்னும் பாறைக் குன்று ஒன்று உள்ளது. இக்குன்றின் உச்சியில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. ஆறுநாட்டான் உலா என்னும் நூல் இந்த முருகனின் பெருமையைப் புதிய கோணத்தில் பாட்டுகிறது.[1]

இந்த மலையின் இரு மருங்கிலும் உள்ள அகன்ற பாறைக் குகைகளில் சங்க காலத்தில் வாழ்ந்த சமண முனிவர்களுக்குச் சேர அரசன் இளங்கடுங்கோ படுக்கை அமைத்துக் கொடுத்த செய்தி அக்காலத் தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

அடிக்குறிப்பு

தொகு
  1. செங்கைப்பொதுவன், ஆறுநாட்டான் உலா 1979
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகளூர்&oldid=4023460" இலிருந்து மீள்விக்கப்பட்டது