புக்கபட்னா இந்தியச் சிறுமான் காப்பகம்
புக்கபட்னா இந்தியச் சிறுமான் காப்பகம் (Bukkapatna Chinkara Wildlife Sanctuary) என்பது இந்தியாவில் கருநாடகம் மாநிலத்தில் உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயமாகும். இது இந்தியச் சிறுமான்களை பாதுகாக்க நிறுவப்பட்டது. 2019-ல் நிறுவப்பட்டது. இது யாதகள்ளி இந்தியச் சிறுமான் காப்பகத்திற்கு பிறகு கர்நாடகாவின் இரண்டாவது சிறுமான் சரணாலயமாகும்.
புக்கபட்னா இந்தியச் சிறுமான் காப்பகம் | |
---|---|
இந்தியச் சிறுமான் | |
அமைவிடம் | கருநாடகம் |
பரப்பளவு | 148 km2 (57.1 sq mi) |
நிறுவப்பட்டது | 2019 |
நிருவாக அமைப்பு | வனத்துறை, கருநாடக அரசு |
வரலாறு
தொகு2019-ல் நிறுவப்பட்ட இது கர்நாடகாவின் இரண்டாவது சிறுமான்கள் சரணாலயம் ஆகும்.[1]
விளக்கம்
தொகுஇந்த சரணாலயம் இந்தியாவின் கர்நாடகாவில் தும்கூர் மாவட்டத்தில் சிரா வட்டத்தில் அமைந்துள்ளது. இச்சரணாலயம் 148 km2 (57 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. சிரா வட்டத்திலுள்ள புக்கபட்னா என்ற கிராமத்தில் அமைந்துள்ளதால் இந்த சரணாலயம் இந்த ஊரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
தாவரங்களும் விலங்குகளும்
தொகுகர்நாடக மாநிலத்தில், புக்கபட்னா சரணாலயத்தைத் தவிர, யாதகள்ளி வனவிலங்கு சரணாலயத்தில் மட்டுமே இந்தியச் சிறுமான்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[2] 2019ஆம் ஆண்டில், புக்கபட்னா பகுதியில் சுமார் 80 சிறுமான்கள் இருந்தன.[3] சிறுமான்கள் தவிர, நாற்கொம்பு மான் மற்றும் புல்வாய்களும் இங்கு காணப்படுகின்றன.[4] மான்களைத் தவிர, சிறுத்தை, கழுதைப்புலி மற்றும் தேன் கரடி உட்பட 20க்கும் மேற்பட்ட பாலூட்டி சிற்றினங்கள், 12 நீர்நில வாழ்வன, 20 ஊர்வன சிற்றினங்கள் மற்றும் 160க்கும் மேற்பட்ட பறவை சிற்றினங்களும் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன.[4] வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்திய அரசால் அட்டவணை-1 பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்ட இந்திய துணைக் கண்டத்தில் உள்ள இந்திய முட்டை தின்னிப் பாம்பும் இங்குக் காணப்படுகிறது.[5]
அச்சுறுத்தல்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்
தொகுவேட்டையாடுபவர்களின் அச்சுறுத்தல் இங்குள்ள காடுகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. காடுகளுக்கு வழங்கப்பட்ட வனவிலங்கு சரணாலயத்தின் அந்தஸ்து, வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு மற்றும் காடுகளுக்கு ஏற்படும் பிற அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ B. R., Rohith (17 May 2019). "chinkara sanctuary: Karnataka: Chinkara sanctuary at Tumakuru notified | Bengaluru News - Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/karnataka-chinkara-sanctuary-at-tumakuru-notified/articleshow/69379884.cms.
- ↑ "Small leap for chinkaras at Bagalkot sanctuary" (in en). Deccan Herald. 13 February 2022. https://www.deccanherald.com/state/top-karnataka-stories/small-leap-for-chinkaras-at-bagalkot-sanctuary-1081180.html.
- ↑ "Bukkapatna Chinkara Wildlife Sanctuary in Tumakuru gets notified by Karnataka government" (in en). Asianet News Network Pvt Ltd. https://newsable.asianetnews.com/news/bukkapatna-chinkara-wildlife-sanctuary-in-tumakuru-gets-notified-by-karnataka-government-prp3bb.
- ↑ 4.0 4.1 "Bukkapatna Declared as Chinkara sanctuary". தி இந்து. 18 May 2019.
- ↑ "A VERY RARE SNAKE SPECIES DISCOVERED IN KARNATAKA". Green Minute. 4 August 2019.
- ↑ "Chinkara sanctuary notified in Tumakuru district" (in en). Deccan Herald. 17 May 2019. https://www.deccanherald.com/state/chinkara-sanctuary-notified-in-tumakuru-district-734454.html.