புக்கிட் கந்தாங்
புக்கிட் கந்தாங் (மலாய்: Bukit Gantang) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய சுண்ணாம்புக் குன்றுகளும் சுண்ணாம்பு மலைகளும் உள்ளன.
புக்கிட் கந்தாங் Bukit Gantang | |
---|---|
ஆள்கூறுகள்: | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | கி.பி. 1800 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.mptaiping.gov.my/ |
ஈப்போ மாநகரில் இருந்து 69 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. மலேசியாவின் மிக நீளமான இரயில் சுரங்கங்களில் ஒன்றான புக்கிட் பெராப்பிட் இரயில் சுரங்கம் இங்குதான் உள்ளது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைக்கு அருகில் புக்கிட் காந்தாங் உள்ளது.
பொது
தொகுபுக்கிட் காந்தாங் நகரத்திற்கு அருகில் உள்ள நகரங்கள்: சங்காட் ஜெரிங்; கம்போங் செ; மாத்தாங்; பாடாங் ரெங்காஸ்; கோலா சபெத்தாங்.[1] இந்தப் பகுதி ஒரு வேளாண் பகுதியாகும். குறிப்பாக நெல், ரப்பர், செம்பனை மற்றும் பழ மரங்கள் விவசாயம் செய்யப் படுகின்றன.
புக்கிட் கந்தாங்கிற்கு 'வெப்பமண்டலப் பழக் கிராமம்' (Tropical Fruit Village) எனும் புனைப்பெயரும் கிடைத்து உள்ளது.[2] இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலோர்ர் மலாய்க்காரர்கள்.
2007 புக்கிட் கந்தாங் பேருந்து விபத்து
தொகு2007 ஆகஸ்டு 13-ஆம் தேதி புக்கிட் கந்தாங்கில் நடந்த பேருந்து விபத்து மலேசிய வரலாற்றில் மிக மோசமான வாகன விபத்துகளில் ஒன்றாக அறியப்படுகிறது. வடக்கு-தெற்கு விரைவுசாலையின் 229-ஆவது கிலோமீட்டரில் அந்த விபத்து நடந்தது.
2010-ஆம் ஆண்டு கேமரன் மலையில் நடந்த பேருந்து விபத்தில் 27 பேர் பலியானார்கள். மற்றும் 2013-ஆம் ஆண்டு கெந்திங் மலையில் நடந்த பேருந்து விபத்தில் 37 பேர் பலியானார்கள்.
பேராக் புக்கிட் பெராப்பிட், புக்கிட் கந்தாங் - சங்காட் ஜெரிங் அருகே நடந்த இந்த விபத்தில் விரைவுப் பேருந்தின் 20 பயணிகள் கொல்லப் பட்டனர். அதிகாலை 4.40 மணியளவில் அந்த விபத்து நிகழ்ந்தது. பேருந்து ஓட்டுநர் ரோகிசான் அபுபக்கர் என்பவர் பேருந்துக் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்தது.[3]
புக்கிட் கந்தாங் வாக்காளர்கள்
தொகு1984-ஆம் ஆண்டில் புக்கிட் கந்தாங் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதி லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் ஒரு தொகுதி ஆகும். 1986-ஆம் ஆண்டில் இருந்து நாடாளுமன்ற மக்களவையில் இந்தத் தொகுதி பிரதிநிதிக்கப் படுகிறது.
2018 மார்ச் 30-இல் வெளியிடப்பட்ட கூட்டரசு அரசிதழின் படி, (Federal Government Gazette: Notice of Polling Districts) புக்கிட் கந்தாங் தொகுதி 37 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bukit Gantang merupakan Mukim dalam Daerah Taiping Negeri Perak Darul Ridzuan. Mukim Bukit Gantang terletak di bawah pentadbiran Larut Matang dan Selama.
- ↑ Kawasan ini merupakan kawasan pertanian khususnya padi sawah, getah, kelapa sawit dan buah-buahan. Bukit Gantang mendapat julukan 'Tropical Fruit Village'.
- ↑ One of the country's worst road accidents, which occurred in the wee hours of yesterday on the North-South Expressway near here, was a disaster waiting to happen.
- ↑ மலேசியா 2018 மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்