புதிய அமரம்பலம் வனவிலங்குக் காப்பகம்
புதிய அமரம்பலம் வனவிலங்கு சரணாலயம் எனப்படும் புதிய அமரம்பலம் வனக்காப்பகம் தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளா மாநிலத்தின் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும்.. இது தெற்கே பாலக்காடு மாவட்டத்தின் அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா மற்றும் வடக்கே தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுகனி வரை நீண்டுள்ளது .
புதிய அமரம்பலம் காட்டுயிர்க் காப்பகம் | |
---|---|
அமைவிடம் | நிலம்பூர், மலப்புறம் மாவட்டம், கேரளா, இந்தியா |
அருகாமை நகரம் | நிலம்பூர், எடக்காரா, சங்கதாரா |
பரப்பளவு | 265.72 km2 (102.6 sq mi) |
நிறுவப்பட்டது | 2003[1] |
நிலவியல்
தொகுஅமரம்ப்பலம் காப்பகம் 265.72 சதுர கிலோமீட்டர்கள் (102.6 sq mi) பரப்பளவு கொண்டது. புதிய அமரம்பலம் வனவிலங்கு சரணாலயம் தென்னிந்தியாவில் கேரளாவின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமாகும். இது 40 மீட்டர்கள் (131 அடி) முதல் 2,554 மீட்டர்கள் (8,379 அடி) வரை மிக அதிகமான உயரத்தைக் கொண்டது, பாதுகாக்கப்பட்ட இதன் வனப்பகுதியானது, அதிக மழை மற்றும் அடர்த்தியான வனப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அமரம்பலம் காப்பகமானது அமைதிப்பள்ளத்தாக்கு தேசிய பூங்காவிடன் தொடந்து நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் ஆகியவற்றால் உருவான ஒரு பகுதியாகும்.
பறவைகள் சரணாலயம்
தொகுஇந்திய பறவை பாதுகாப்பு வலையமைப்பு (ஐபிசிஎன்) நிலம்பூர் மற்றும் அமரம்பலம் காடுகளில் இருந்து 212 வகையான பறவைகளை அடையாளம் கண்டுள்ளது. அமரம்பலம் காப்பகமானது மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியமான பறவை பகுதி (ஐபிஎஸ்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது, அங்கு 16 வரையறுக்கப்பட்ட இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன; அமரம்பலத்தில் எட்டு இனங்கள் காணப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட இனங்கள் தவிர ஒரு மிகவும் அழிவாய்ப்புள்ள இனமும் இரண்டு பாதிக்கப்படக்கூடிய இனங்களும் உள்ளன. 2001 ஆம் ஆண்டில் தேசியப் பறவைகள் கழகம் இந்தியாவின் அச்சுறுத்தப்பட்ட 52 இனங்களை (என்.டி.எஸ்) அடையாளம் கண்டுள்ளது. என்.டி.எஸ் பறவை இனங்கள் மூன்று முக்கியப் பறவைப் பகுதியில் காணப்படுகின்றன, ஆனால் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டால் இன்னும் அதிகமான இனங்கள் காணப்படலாம்.
தேசியப் பறவைகள் கழகம் வகைப்படுத்திய, அமரம்பலம் காப்பகம் இந்திய தீபகற்ப வெப்பமண்டல ஈரப்பதத்தில் உள்ளது (பயோம் -10): 15 பறவை இனங்கள் வழக்கமான உயிர்க்கூட்டமாக வாழும் சுற்றுச் சூழலில் வாழ்பவை என அடையாளம் காணப்பட்டுள்ளன, இந்த இனத்தில் 12 இனங்கள் அமரம்பலத்தில் காணப்படுகின்றன. 2003 ஆம் ஆண்டில், கேரள வேளாண் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பி.ஓ.நாமர்,[2] இங்கு 11 வகையான மரங்கொத்திகள், 11 வகையான ஈப்பிடிப்பான்கள் ஒன்பது வகையான காட்டுச் சிலம்பன், ஏழு வகையான செங்குதக் கொண்டைக்குருவி எனப்படும் கொண்டைக்குருவிகள் மற்றும் மூன்று வகையான குக்குறுவான் குருவிகள் ஆகியவற்றைக் கண்டதாகக் கூறப்படுகிறது. முக்கியப் பறவை வாழ்விடங்கள் அமைப்பு (IBA) 2004 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி 10 இனங்கள் மிகவும் அழிவாய்ப்புள்ள இனங்களின் பட்டியலில் இருந்து குறைந்த அழிவாய்ப்புள்ள இனங்களின் பட்டியலுக்கு மாறியுள்ளன. சிறுத்த பெருநாரை, வெண்முதுகுக் கழுகு, நீலகிரி கருப்புப் புறா, நீலப் பைங்கிளி, வெண்வயிற்று வால் காக்கை, மலபார் சாம்பல் இருவாச்சி, சாம்பல்தலைச் சின்னான், வெள்ளை வயிற்று நீல ஈப்பிடிப்பான், கருந்தலைச் சிலம்பன், கதிர்க்குருவி ஆகிய பறவைச் சமூகம் சமநிலையைக் காட்டியது. நவம்பர் மாதம் பெறப்பட்ட தரவுகளில் அதிகபட்ச இனங்கள் செழுமையாக இருந்தன. மற்றும் மிக உயர்ந்த பன்முகத்தன்மைக் குறியீடு ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளூர் விலங்கினங்கள்
தொகு2000 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமரம்பலம் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் கிட்டத்தட்ட அனைத்து பாலூட்டிகளையும் உள்ளடக்கியது: 25 பாலூட்டிகள், இதில் உள்ளூர் மற்றும் அழிவாய்ப்புள்ள சோலைமந்தி மற்றும் நீலகிரி வரையாடு ஆகியவையும் இதில் அடங்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "BirdLife International (2016) Important Bird and Biodiversity Area factsheet: Amarambalam Wildlife Sanctuary - Nilambur". பன்னாட்டு பறவை வாழ்க்கை. Archived from the original on 2015-11-25. பார்க்கப்பட்ட நாள் 2016-01-03.
- ↑ "Nameer PO, Associate Professor & Head". Kerala Agricultural University. பார்க்கப்பட்ட நாள் 2016-01-04.