புதிய உலக நோய்க்குறி

புதிய உலக நோய்க்குறி (New World syndrome) என்பது வெற்றுணவு உட்கொள்வதன் மூலமும், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை மேற்கொள்ளும் வாழ்க்கை முறையால் ஏற்படும் தொற்றா நோய்களின் தொகுப்பாகும். குறிப்பாக இது அமெரிக்கா, ஓசியானியா மற்றும் சர்க்கம்போலார் முதற்குடி மக்களிடம் பொதுவாகக் காணப்படுவதாகும்.[1] இது உடற் பருமன், இதய நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறுகிய ஆயுட்காலம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

காரணங்கள்

தொகு

புதிய உலக நோய்க்குறி ஒரு பாரம்பரிய உணவு மற்றும் உடற்பயிற்சி மேற்கத்திய உணவு மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறைக்கான மாற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. முதற்குடி மக்களின் பாரம்பரியத் தொழில்களான மீன்பிடித்தல், விவசாயம், வேட்டையாடுதல் ஆகியவற்றில் உள்ள செயல்பாடுகள் நிலையாக அமர்ந்து செய்யும் நவீன அலுவலக வேலைகளில் இல்லை. மேலும் போக்குவரத்தின் நவீன அறிமுகம் மற்றும் பயன்பாடு காரணமாக உடல் உழைப்பின் அளவு குறைதல்.[2] இதற்கிடையில், கொழுப்பு, உப்பு, சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து நிறைந்த மேற்கத்திய உணவுகள் பெருமளவில் பிற நாடுகளால் இறக்குமதி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுதல். உணவில் மாவுச்சத்து பொருட்களின் அளவு அதிகரித்தல்.

நோய் கண்டறிதல்

தொகு

நோயறிதலுக்குக் குறிப்பிட்ட அளவுகோல்கள் தேவையில்லை. உடல் பருமனைத் தொடர்ந்து குருதிக் கொழுப்பு மிகை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • Ellen Ruppel Shell (2001-06-01). "New World Syndrome". The Atlantic.
  • Ken Weiss (2014-01-08). "The 'New World Syndrome' genetic basis: has it been found?". The Mermaid's Tale.
  • Ken Weiss (1984). "A new world syndrome of metabolic diseases with a genetic and evolutionary basis". American Journal of Physical Anthropology 27: 153–178. doi:10.1002/ajpa.1330270508. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_உலக_நோய்க்குறி&oldid=4076152" இலிருந்து மீள்விக்கப்பட்டது