புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோயில்

வரதராஜ பெருமாள் கோயில் என்பது இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். மூலவர் வரதராஜ பெருமாள் நின்ற கோலத்தில் சுமார் ஐந்தடி உயரத்தில் காட்சியளிக்கிறார். தாயார் பெருந்தேவி ஆவார். தல விருட்சம் இலுப்பை மரம் ஆகும். விமானம் சிறீ வரதராஜ விமானம் என்று அழைக்கப்படுகிறது.

வரதராஜ பெருமாள் கோயில்
வரதராஜ பெருமாள் கோயில், புதுச்சேரி
வரதராஜ பெருமாள் கோயில் is located in புதுச்சேரி
வரதராஜ பெருமாள் கோயில்
வரதராஜ பெருமாள் கோயில்
வரதராஜ பெருமாள் கோயில், புதுச்சேரி
ஆள்கூறுகள்:11°56′27″N 79°49′48″E / 11.9409°N 79.8299°E / 11.9409; 79.8299
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:புதுச்சேரி யூனியன் பிரதேசம்
மாவட்டம்:புதுச்சேரி
அமைவிடம்:மகாத்மா காந்தி சாலை, பாரம்பரிய நகரம், புதுச்சேரி[1]
மக்களவைத் தொகுதி:புதுச்சேரி
ஏற்றம்:31.57 m (104 அடி)
கோயில் தகவல்
மூலவர்:வரதராஜ பெருமாள்
தாயார்:பெருந்தேவி
குளம்:சந்திரபுஷ்கரிணி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி, பவித்திர உற்சவம், இராம நவமி, கோதண்டராமர் தெப்போற்சவம், நவராத்திரி, மாசி மகம், பங்குனி உத்திரம்
உற்சவர்:தேவாதிராஜன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 31.57 மீட்டர் உயரத்தில், (11°56′27″N 79°49′48″E / 11.9409°N 79.8299°E / 11.9409; 79.8299) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு புதுச்சேரியில் இக்கோயில் அமைந்துள்ளது.

 
 
வரதராஜ பெருமாள் கோயில்
புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோயில் (புதுச்சேரி)

பிற சன்னதிகள்

தொகு

வரதராஜ பெருமாள் சன்னதியுடன் பெருந்தேவி தாயார், ஆதிமூர்த்தி நரசிம்மர் (மரத்தால் ஆனவர்), இராமர், சீதை, இலட்சுமணன், அனுமன், நவநீத கிருஷ்ணர், சந்தான கோபாலர், வேணுகோபாலர், சுந்தர ஆஞ்சநேயர் ஆகியோரது சன்னதிகளும் இக்கோயிலில் காணப்படுகின்றன.

சிறப்பம்சங்கள்

தொகு

திருமால் தெய்வத்தின் 108 திருவுருவங்களைக் காட்டும் கண்ணாடி அறை ஒன்று இக்கோயிலில் அமைக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.[2]

இக்கோயிலில் உள்ள சந்திரபுஷ்கரிணி தீர்த்தத்தில் 82 ஊற்றுக் கண்களும், 12 கிணறுகளும் உள்ளன. இங்கு ஆறு கலப்பதால், நீர் தானாகவே ஊறிக் கொள்ளும். மேலும், அப்ரகம் என்ற கந்தக அமிலம் இங்குள்ள தீர்த்தத் தண்ணீரில் காணப்படுவதால், அது பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இது விஞ்ஞான ரீதியாக மருத்துவக் குணம் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.[3]

சிறப்புத்_திருவிழாக்கள்

தொகு

வைகுண்ட ஏகாதசி, பவித்திர உற்சவம், இராம நவமி, கோதண்டராமர் தெப்போற்சவம், நவராத்திரி, மாசி மகம், பங்குனி உத்திரம் மற்றும் புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளும் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Varadharaja Perumal Temple Puducherry (Timings, History, Entry Fee, Images, Pooja, Location & Phone) - Puducherry Tourism". pondicherrytourism.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.
  2. "Experience the Sacred Majesty of Pondicherry's Varadaraja Perumal Temple". www.southtourism.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.
  3. "Varadaraja Perumal Temple : Varadaraja Perumal Varadaraja Perumal Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-14.