புதுச்சேரி வேதபுரீசுவரர் கோயில்

வேதபுரீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். புதுச்சேரியிலுள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் பக்கத்தில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.[1]

வேதபுரீசுவரர் கோயில்
புதுச்சேரி வேதபுரீசுவரர் கோயில்
வேதபுரீசுவரர் கோயில் is located in புதுச்சேரி
வேதபுரீசுவரர் கோயில்
வேதபுரீசுவரர் கோயில்
வேதபுரீசுவரர் கோயில், புதுச்சேரி
ஆள்கூறுகள்:11°56′24″N 79°49′47″E / 11.9399°N 79.8296°E / 11.9399; 79.8296
பெயர்
வேறு பெயர்(கள்):திரிபுரசுந்தரி உடனுறை வேதபுரீசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:புதுச்சேரி யூனியன் பிரதேசம்
மாவட்டம்:புதுச்சேரி
அமைவிடம்:காந்தி சாலை, புதுச்சேரி
மக்களவைத் தொகுதி:புதுச்சேரி
கோயில் தகவல்
மூலவர்:வேதபுரீசுவரர்
தாயார்:திரிபுரசுந்தரி
குளம்:பிரம்ம தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி, பிரம்மோற்சவம், நவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று
வரலாறு
கட்டிய நாள்:கி. பி. 18ஆம் நூற்றாண்டு

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 34.22 மீட்டர் உயரத்தில், (11°56′24″N 79°49′47″E / 11.9399°N 79.8296°E / 11.9399; 79.8296) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு புதுச்சேரியில் இக்கோயில் அமைந்துள்ளது.

 
 
வேதபுரீசுவரர் கோயில்
புதுச்சேரி வேதபுரீசுவரர் கோயில் (புதுச்சேரி)

சிதைவு

தொகு

கி. பி. 1748 ஆம் ஆண்டில் அந்நிய ஆட்சியாளர்களால் முழுவதுமாக சிதைக்கப்பட்ட இதன் மூலகோயில் கி. பி. 1788 ஆம் ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டது.[2]

மறு உருவாக்கம்

தொகு

திவான் கந்தப்ப முதலியார் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் கி. பி. 1788 ஆம் ஆண்டு மறு உருவாக்கம் பெற்ற இக்கோயிலில் ஐந்து நிலைகள் கொண்ட இராஜ கோபுரம் நிர்மாணிக்கப்பட்டது.[3] இந்த இராஜ கோபுரம் 23 மீட்டர் உயரம் கொண்டது.[4]

பிற சன்னதிகள்

தொகு

மூலவர் வேதபுரீசுவரர் சன்னதியுடன் இறைவி திரிபுரசுந்தரி, அழகு விநாயகர், விஷ்ணு துர்க்கை, பைரவர் மற்றும் அறுபத்து மூவர் ஆகியோரது சன்னதிகளும் இக்கோயிலில் காணப்படுகின்றன.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sri Vedapureeswarar Temple, Pondicherry - Timings, History, Darshan, Pooja Timings". Trawell.in. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
  2. "Vedapureeswarar Temple Puducherry". www.tourmyindia.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
  3. "Vedapureeswarar Temple - Union territory of Puducherry". www.visitpondicherry.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
  4. "Vedapureeswarar Temple, Puducherry - Timings, History, Architecture & Benefits". Astroved Astropedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
  5. "Vedapureeswarar Temple : Vedapureeswarar Vedapureeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.