புதுவை முரசு (இதழ்)

புதுவை முரசு என்பது புதுவையில் இருந்து வெளிவந்த ஒரு இதழாகும். இவ்விதழ் 10.11.1930 இல் இருந்து சில ஆண்டுகள் வெளிவந்துள்ளது. சுயமரியாதையை பரப்புவதே நோக்கம் என முதல் இதழ் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இதழ் ஆசிரியர்கள் தொகு

இதழ் துவக்கியபோது தேங்காய்த்திட்டு க. இராமகிருட்டிணன் முதல் ஏழு இதழ்களுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். இதற்கு அடுத்து குத்தூசி குருசாமி 29.12.1930வரை ஆசிரியராக இருந்துள்ளார். அரசு பணிக்கு அவர் சென்றதால் 11.12.1931 முதல் 18.1.1932வரை ஆசிரியர் பெயர் இல்லாமல் இதழ் வெளிவந்துள்ளது. இடையில் நான்கு இதழ்கள் வெளிவராது போன நிலையில் மீண்டும் 29.12.1931 முதல் இதழ் வெளிவந்துள்ளது பின்னர் பூவாளூர் பொன்னம்பலம் ஆசிரியராக இருந்துள்ளார்.

இதழில் எழுதியோர் தொகு

இவ்விதழில் பாரதிதாசன், புதுவை சிவப்பிரகாசமும் பிழைதிருத்திக் கொடுத்தும், கட்டுரைகள், கவிதைகளைத் தொடர்ந்து எழுதியும் வந்துள்ளனர். மேலும் சாமி சிதம்பரனார், ம. சிங்காரவேலர், மாயவரம் சி. நடராசன், நாகை என். பி. காளியப்பன், செல்வி நீலாவதி, குஞ்சிதம், பூவாளூர் அ. பொன்னம்பலனார், எஸ். இராமநாதன், சித்தர்காடு இராமையா, சாத்தான்குளம் அ. இராகவன், நாகர்கோயில் பி. சிதம்பரம் பிள்ளை, காரைக்குடி சொ. முருகப்பா, ஊ. பு. அ. சௌந்தரபாண்டியன் போன்ற பலரின் சொற்பொழிவுகள், எழுத்துகள் ஆகியவை இடம் பெற்றன.[1]

இதழ் தொகுப்பு வெளியீடு தொகு

இவ்விதழின் தொகுப்பு புதுவை முரசு இதழ் தொகுப்பு என்ற பெயரில் ஆறு தொகுதிகளாக வாலாச வல்லவன் என்பவரை தொக்குப்பாசிரியராக கொண்டு தமிழ்க் குடியரசு பதிப்பகம், சி.என்.கே. சந்து, சேப்பாக்கம், சென்னை. என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. ஆ. சிவசுப்ரமணியன் (மார்ச்சு 2016). "படித்துப் பாருங்களேன்...". சிந்தனையாளன்: 33. 
  2. தமிழேந்தி (ஜூன் 2013). "புதுவை முரசு - இதழ்கள் தொகுப்பு". கீற்று. பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுவை_முரசு_(இதழ்)&oldid=2038926" இலிருந்து மீள்விக்கப்பட்டது