புது காத்ரஜ் சரங்கச் சாலை
(புது காத்ரஜ் சாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புது காத்ரஜ் சுரங்கச் சாலை (New Katraj Tunnel) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாநகரத்தில் அமைந்த காத்ரஜ் மலைக் கணவாயை குடைந்து அமைக்கப்பட்ட 1,223 நீளம் கொண்ட இரு வழி மலைச் சாலை ஆகும். புது காத்ரஜ் சாலை வழியாக புனே - சாத்தாரா நகரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 48 செல்கிறது. இம்மலைக் கணவாய்ச் சாலை 15 டிசம்பர் 2006 அன்று திறக்கப்பட்டது.
தற்போது இச்சுரங்கச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற இந்திய அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அடிக்கல் நாட்டினார்.[1]