புதூர் (விளாத்திகுளம்)
வி. புதூர் (ஆங்கிலம்:V. Pudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
தொகுமாவட்டத் தலைமையிடமான தூத்துக்குடியிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், 40 கிமீ தொலைவில் உள்ள கோவில்பட்டி ஆகும்.
அருகமைந்த ஊர்கள்
தொகுபுதூருக்கு கிழக்கே கமுதி 40 கிமீ; மேற்கே சாத்தூர் 30 கிமீ; வடக்கே அருப்புக்கோட்டை 21 கிமீ; தெற்கே விளாத்திகுளம் 20 கிமீ.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு23.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2369 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 8891 ஆகும்[2][3]
ஆதாரங்கள்
தொகு- ↑ "வி.புதூர் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
- ↑ "வி. புதூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2020-11-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
- ↑ V. Pudur Population Census 2011