புத்தூர், யாழ்ப்பாணம்

புத்தூர் என்ற பெயரில் உள்ள பிற ஊர்களைப் பற்றி அறிய, புத்தூர் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

புத்தூர், இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஒரு ஊராகும்.[1] யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டிக்கும், ஆவரங்காலுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளது. பருத்தித்துறை வீதி வழியாக யாழ்ப்பாணத்திலிருந்து ஏறத்தாழ 15 கிமீ தொலைவிலும், பருத்தித்துறையில் இருந்து 18.5 கிமீ தொலைவிலும் இது உள்ளது. சிறுப்பிட்டி, நவக்கிரி, ஆவரங்கால், வாதரவத்தை ஆகிய ஊர்கள் புத்தூரைச் சுற்றி அமைந்துள்ளன.

நிறுவனங்கள் தொகு

புத்தூரில் நான்கு பாடசாலைகள் உள்ளன. இவற்றுள் பெரியது புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி ஆகும். மற்றவை புத்தூர் இந்து ஆரம்பப் பாடசாலை, புத்தூர் மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, சிறீ பஞ்சசீல வித்தியாலயம் என்பன.

மேற்கோள்கள் தொகு

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 31.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தூர்,_யாழ்ப்பாணம்&oldid=2854175" இலிருந்து மீள்விக்கப்பட்டது