புத்ரா சதுக்கம்

புத்ராஜெயா மாநகரச் சதுக்கம்

புத்ரா சதுக்கம் அல்லது புத்ராஜெயா சதுக்கம் (மலாய்; Dataran Putra; ஆங்கிலம்: Putra Square) என்பது புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தின் வளாகம் 1-இல் (Precinct 1) அமைந்துள்ள மாநகரச் சதுக்கம் ஆகும். மலேசிய விடுதலை நாள் அணிவகுப்பு போன்ற விழாக்களுக்கு இந்தச் சதுக்கம் பயன்படுத்தப்படுகிறது.

புத்ரா சதுக்கம்
Putra Square
Dataran Putra
Map
பொதுவான தகவல்கள்
நகரம் புத்ராஜெயா
நாடுமலேசியா
ஆள்கூற்று2°56′6.8″N 101°41′27.9″E / 2.935222°N 101.691083°E / 2.935222; 101.691083
பரிமாணங்கள்
விட்டம்300 மீட்டர்

300 மீட்டர் வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்ட புத்ரா சதுக்கம் பெர்தானா புத்ரா (Perdana Putra), புத்ரா பள்ளிவாசல் (Putra Mosque), புத்ரா பாலம் (Putra Bridge) மற்றும் புரோமனேட் பல்கடை அங்காடி (Promenade Shopping Mall) ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

பொது

தொகு

புத்ரா சதுக்கத்தின் மையத்தில் உள்ள உயரமான கொடிக் கம்பத்தில் மலேசியாவின் தேசியக் கொடி; மற்றும் மலேசிய மாநிலங்களின் கொடிகளால் சூழப்பட்டுள்ளது. மேலும், மையத்தில் ஓர் அழகிய நீரூற்று உள்ளது.[1]

புத்ரா சதுக்கத்தின் வடக்கில், பெர்தானா புத்ரா, மலேசியப் பிரதமர் துறைக் கட்டிடம்; மற்றும் கிழக்கில் புத்ரா பள்ளிவாசல் ஆகியவற்றின் அழகிய காட்சிகளைக் காணலாம்.

அமைப்பு

தொகு

இந்தச் சதுக்கத்தின் வெளிப் பகுதிகள் பாரசீகப் பூங்காக்களால் (Charbagh) சூழப்பட்டுள்ளன. பாரசீகப் பூங்காக்களின் உள்ளே பாதைகள், நீர் வழித்தடங்கள், மலர்ப் படுகைகள் மற்றும் சிறுசிறு மரங்களின் அணிவகுப்புகள் உள்ளன.

சதுக்கத்தின் வடிவமைப்பு 11 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 11 புள்ளிகள் கொண்ட நட்சத்திரங்களின் வடிவம்; ஆகத்து 1957-இல் நாடு விடுதலை பெற்றபோது இருந்த மலாயாவின் 11 மாநிலங்களைக் குறிக்கிறது.

13 புள்ளிகள்

தொகு

அதே வேளையில் உள்பகுதியில் 13 புள்ளிகள் கொண்ட நட்சத்திர வடிவங்கள் உள்ளன. அவை மலேசியாவின் 13 மாநிலங்களைக் குறிக்கின்றன. 14-ஆவது புள்ளி புதிதாக சேர்க்கப்பட்ட கூட்டரசு பிரதேசத்தைக் குறிக்கின்றது.

இந்தச் சதுக்கம் புத்ராஜெயாவிற்கு வருபவர்களின் பிரபலமான பகுதியாக விளங்குகிறது. மேலும், வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் இடையே ஒரு சுற்றுலா ஈர்ப்பிடமாகவும் பெயர் பெற்றுள்ளது.[2]

காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. JomTour!, Mybarter. "DThe design of Dataran Putra incorporates an 11-point outer star which represents the 11 states of Malaysia during Independence". www.mybarter.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 September 2024.
  2. "Putrajaya Corporation - Dataran Putra in Precinct 1 is the city's main square. The 300 metres circular Putra Square is designed in Persian or Iranian Charbagh style". www.ppj.gov.my. பார்க்கப்பட்ட நாள் 27 September 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்ரா_சதுக்கம்&oldid=4097540" இலிருந்து மீள்விக்கப்பட்டது