புனாகா சோங்
புனாகா சோங் (Punakha Dzong), அல்லது புங்டங் டேசென் ஃபோட்ரங் சோங் (Pungtang Dechen Photrang Dzong) (பொருள்: “பெரும் மகிழ்ச்சி அல்லது இன்பம் நிறைந்த அரண்மனை”[1][2]) பூட்டானின் புனாகாவில் அமைந்துள்ள புனாகா மாவட்ட நிர்வாக மையமாகும். 1637-38ஆம் ஆண்டுகளில் சப்ரதுங் கவங் நம்கியாலால் கட்டப்பட்ட[1][3] இந்தக் கோட்டை மிக அழகானதும் பூட்டானின் இரண்டாவது மிகப்பழமையானதும் மிகப்பெரியதுமானதாகும். [1][4] இந்தக் கோட்டையில் தென் ட்ருக்பா கக்யூ பள்ளியின் புனித எச்சங்களும் ரங்ஜுங் கசர்பானி , சப்ரதுங் கவங் நம்கியால் மற்றும் பேமா லிங்பாவின் புனித எச்சங்களும் அடங்கியுள்ளன. 1955ஆம் ஆண்டில் தலைநகர் திம்புவிற்கு மாறும்வரை புனாகா சோங் நிர்வாக மையமாகவும் பூட்டான் அரசின் இருப்பிடமாகவும் விளங்கியது. [2][4][5]
புனாகா சோங் புங்டங் டேசென் ஃபோட்ரங் சோங் | |
---|---|
புனாகா சோங் | |
புனாகாவில் ஜாகரன்டா மரங்கள் சூழ உள்ள புங்டங் டேசென் ஃபோட்ரங் சோங் | |
மாற்றுப் பெயர்கள் | புங்டங் டேசென் ஃபோட்ரங் சோங் |
பொதுவான தகவல்கள் | |
வகை | சமய மற்றும் குடிசார் நிர்வாகம் |
கட்டிடக்கலை பாணி | சோங் |
இடம் | புனாகா, பூட்டான் |
உயரம் | 1,200 |
கட்டுமான ஆரம்பம் | 1637 |
நிறைவுற்றது | 1638 |
புதுப்பித்தல் | 2004 |
உரிமையாளர் | பூட்டான் அரசு |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அமைப்பு முறை | கோட்டை |
தள எண்ணிக்கை | ஆறு |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | சோவே பாலெப் மற்றும் சப்ரதுங் கவங் நம்கியால் |
அரச திருமணம்
தொகுஅக்டோபர் 13, 2011 அன்று பூட்டான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் மற்றும் ஜெட்சுன் பெமாவின் திருமணம் இந்தக் கோட்டையில் நடந்தது. [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Dzong at Punakha". பார்க்கப்பட்ட நாள் 2010-04-01.
பூட்டானின் இரண்டாவது மிகப்பழம் கோட்டையின் கட்டுமானம் 1637ஆம் ஆண்டு சப்ரதுங் கவங் நம்கியால் ஆணைப்படி துவங்கப்பட்டது. இது 1744-1763 ஆண்டுகளில் சமயசார்பற்ற ஆட்சியர் 13வது தேசி (சரிசமமான அதிகாரம் கொண்ட பூட்டானின் முதன்மை மடாதிபதி ஜெ கெங்போவிற்கு எதிராக) செரப் வாங்சுக்கால் விரிவாக்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 Wangchuck, Ashi Dorji Wangmo (2006). Treasures of the thunder dragon: a portrait of Bhutan. Penguin, Viking. pp. 40–41, 102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0670999016. பார்க்கப்பட்ட நாள் 2010-04-01.
- ↑ Pommaret, Francoise (2006). Bhutan Himlayan Mountains Kingdom (5th edition). Odyssey Books and Guides. p. 192.
- ↑ 4.0 4.1 "Punakha Dzong". Tourism:Government of Bhutan. Archived from the original on 2017-09-07. பார்க்கப்பட்ட நாள் 2010-04-01.
- ↑ Brown, Lindsay (2007). Bhutan. Lonely Planet. pp. 146–147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1740595297. பார்க்கப்பட்ட நாள் 2010-04-01.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Plowright, Adam (2011-09-06). "Bhutan gets royal wedding fever". Agence France Presse இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103085904/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hMKyDxXdoyKYTWJfEXCNlZA_gVeg?docId=CNG.3a1c782b809d44f77168bf5469b0df07.251. பார்த்த நாள்: 2011-10-02.
வெளியிணைப்புகள்
தொகு- Inside information about Punakha Dzong
- Pictures of Punakha Dzong on Flickr
- Photo gallery of Punakha Dzong (Nov 2005)
- Photos of Punakha Dzong பரணிடப்பட்டது 2009-06-05 at the வந்தவழி இயந்திரம்
- Shabdrung Ngawang Namgyal at the Dharma Dictionary
- Dzong architecture
- Driglam Namzha
- Zhabdrung Ngawang Namgyal