அல்ஃ‌போன்சா

சிரிய-மலபார் கத்தோலிக்க பிரான்சிஸ்கனிய மத சகோதரி
(புனித அல்ஃபோன்சா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புனித அல்போன்சா (ஆங்கிலம்Saint Alphonsa Muttathupadathu, மலையாளம்: അല്‍ഫോണ്‍സാ മുട്ടത്തുപാടത്ത്; 19 ஆகஸ்ட் 1910 – 28 ஜூலை 1946) என்பவர் இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார்.

புனித அல்போன்சா முட்டத்துபடத்து
இந்தியாவின் முதல் கத்தோலிக்க புனிதை
பிறப்பு(1910-08-19)19 ஆகத்து 1910
குடமளூர், பாளை, கேரளம், இந்தியா
இறப்பு28 சூலை 1946(1946-07-28) (அகவை 35)
பரனங்கரம், பளை, கேரளம்
ஏற்கும் சபை/சமயங்கள்ரோமன் கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம்8 பெப்ரவரி 1986, கோட்டயம் by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
புனிதர் பட்டம்12 அக்டோபர் 2008, வத்திக்கான் நகர் by பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட்
முக்கிய திருத்தலங்கள்புனித அல்போன்சமா தேவாலயம், கேரளம்
திருவிழா28 ஜூலை
பாதுகாவல்உடல் நோய்

பிறப்பும் வளர்ப்பும்

தொகு

அக்கால திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்த குடமலூர் எனும் ஊரில் (தற்போதைய கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில்) 1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் நாள் ஜோசஃப் மற்றும் மேரி இணையருக்கு மகளாய்ப் பிறந்தார். பெற்றோர் இவருக்குப் புனித அன்னாவின் நினைவாக அன்னக்குட்டி என்றுப் பெயரிட்டனர்.

அன்னாவின் இளம் வயதி‌லேயே அவரின் தாயார் இறந்து விட்டார். அன்னாவை அவரின் அத்தை வளர்த்தெடுத்தார். பாதிரியாரான அவரது பெரியப்பா ஜோசப் என்பவர் அவரை படிக்க வைத்தார்.

வாழ்வைப் பாதித்த விபத்து

தொகு

1923 ஆம் ஆண்டு எரியும் நெருப்புக் குழிக்குள் தவறி விழுந்த அன்னாவின் பாதங்கள் கருகின. இவ்விபத்து வாழ்நாள் முழுமைக்கும் இவரை இயலாமையில் ஆழ்த்தியது. இளமையில் தாயின் மரணம், தோல் நோய் பாதிப்பு, கால் ஊனம், வளர்ப்பு தாயின் மரணம் என அடுத்தடுத்து அவரது வாழ்வில் சோதனைகள் நேரிட்டன.

அன்னா அல்ஃபோன்சாவாக மாறியது

தொகு

தன் வாழ்வை கிறித்துவுக்காக அர்ப்பணிக்க விரும்பிய அவர் 1928 ஆம் ஆண்டில் அல்ஃபோன்சா எனும் பெயரைத் தாங்கி கன்னியாஸ்திரீயாக மாறினார். ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி போதித்தார். எனினும் உடல்நலக்குறைவால் இவரால் ஆசிரியர் பணியைச் செவ்வனே செய்ய முடியவில்லை.

இயற்கை எய்தல்

தொகு

கடும் நிமோனியா காய்ச்சல் தாக்கி மேலும் பலவீனமடைந்து படுத்த படுக்கையானார். இதற்கிடையில் `அம்னீசியா' என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டு ஞாபக சக்தியை இழந்தார். பின்னர் தீவிர சிகிச்சையின் காரணமாக அவர் ஓரளவு குணமடைந்தார். இருந்தாலும் முழுமையாக குணமடையவில்லை. இந்த நிலையில், உடல்நலக்குறைவு மேலும் அதிகமாகி 35-வதில் 1946 ம் ஆண்டு சூலை 28ம் நாள் கன்னியாத்திரி அல்போன்சா காலமானார்.

நல்அடக்கம்

தொகு

இவரது உடல் பரனாங்கானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றளவும் இந்த இடம் நம்பிக்கை உள்ளம் கொண்ட பக்தர்கள் பலர் வந்து செல்லும் புனிதத் தலமாக விளங்குகிறது. இங்கு வரும் பலர் அன்னை அல்ஃ‌போன்சா தங்கள் வாழ்வில் அதிசயங்களை ஏற்படுத்திய விதத்தைக் கூறுகின்றனர். இவ்வாறாக 1999 இல் ஒரு பச்சிளங்குழந்தையின் வளைந்த பாதங்கள் (club foot) குணப்படுத்தப்பட்டதாய்க் கூறப்படும் நிகழ்வே அல்ஃபோன்சா அன்னைக்குப் புனிதர் பட்டம் வழங்குதற்கு காரணமாய் அமைந்தது.

புனிதர் பட்டம் வழங்கப்படல்

தொகு

புனிதர் பட்டத்திற்கு முன்பாக தரப்படும் அருளாளர் பட்டத்தை 1985-ம் ஆண்டு அப்போதையை போப் ஆண்டவர் 2-ம் ஜான்பால் அல்போன்சாவுக்கு வழங்கினார். அருளாளர் பட்டத்தைத் தொடர்ந்து அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று தற்போதைய போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட் அறிவித்தார். இதன்படி அக்டோபர் மாதம் 12ஆம் தியதி 2008ஆம் வருடம் அருளாளர் அல்போன்சாவிர்க்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். புனிதர் பட்டத்திற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்பட்டு கால் நூற்றாண்டு (25 ஆண்டுகள்) கழிந்த பின்னர் அன்னைக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது குறிக்கத்தக்கது.

அரசாங்க கவுரவம்

தொகு
  1. கேரள அரசு அல்போன்சாவின் சமாதி இருக்கும் பரணஞானத்திற்குச் செல்லும் சாலையை 3 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்தது.
  2. புனித அல்போன்சாவை கௌரவிக்கும் படியாக இந்திய அரசு 19 ஜூலை 1996ஆம் ஆண்டு அவருடைய தபால் தலையை வெளியிட்டது.

விருந்து

தொகு
 
புனித அல்ஃபோன்சாவின் நல்லடக்கத்தலம்

ஒவ்வோராண்டும் சூலை 19 முதல் 28 தேதிகளில் அன்னை நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடக்கும் விருந்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்ஃ‌போன்சா&oldid=3363299" இலிருந்து மீள்விக்கப்பட்டது