புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம், கண்டன்விளை
உலகிலேயே புனித குழந்தை இயேசுவின் திரேசாளுக்கு கட்டபட்ட முதல் ஆலயம் என்னும் பெருமையுடன் திகழும் ஆலயம் கண்டன்விளையில் அமைந்துள்ள புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம்.இவ்வாலயம் 1929-ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டு அதே ஆண்டு திருவிழாவும் கொண்டாடப்பட்டது. இந்த ஆலயம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்-திங்கள்நகர் நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் ஒலிக்கும் மணிகள் திரேசாளின் சொந்த சகோதரிகளால் வாங்கி அனுப்பப் பட்டவை. புனிதையின் பேரொளிக்கம் மக்களின் வணக்கத்திற்காக இவ்வாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழா செப்டம்பர் மாதம் கடைசி வெள்ளி கொடியேற்றத்துடன் 10 நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.[1][2]
புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம், கண்டன்விளை | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கண்டன்விளை |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
வழிபாட்டு முறை | இலத்தீன் ரீதி |
மண்டலம் | குழித்துறை மறைமாவட்டம் |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | ஏப்ரல் 7,1924 |
செயற்பாட்டு நிலை | நடப்பில் உள்ளது |
இணையத் தளம் | www.thereseofkandanvilai.info |
புனித குழந்தை இயேசுவின் திரேசாள்
தொகுதெரசா பிரான்ஸ் நாட்டில் அலேசான் என்னும் இடத்தில் கி.பி. 1873-ம் ஆண்டு சனவரி திங்கள் 2-ம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் மரி ஃப்ரான்சுவா தெரேஸ் மார்த்தின்.15 வயதே நிரம்பிய தெரேசா தம் இறை ஆர்வத்தால் திருதந்தையின் சிறப்பு அனுமதி பெற்று , 1888-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9-ம் நாள், கார்மேல் சபையில் சேர்ந்தார். கார்மேல் மடத்தில் பெரும்பான்மையான துன்பங்களை பிற சகோதரிகளாலும் நோயினாலும் அனுபவித்தார். அவர் காச நோயால் பாதிக்கப்பட்டு,1897-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30-ம் நாள் தம் 24ஆம் அகவையில் இறையடி எய்தினார். இவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் 1923-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29-ம் நாள் வழங்கப்பட்டது.புனிதர் பட்டம் 1925-ம் ஆண்டு மே திங்கள் 17-ம் நாள் திருதந்தை பதினொன்றாம் பயஸால் வழங்கப்பட்டது.
ஆலயத்தில் திருப்பலி
தொகுவார நாட்களில் (ஞாயிறு,வியாழன் தவிர)- காலை 6.15 மணி. ஞாயிறு- காலை 7.00 மணி. வியாழன்- மாலை 6.45 மணி( நவநாள் திருப்பலி).
வெளி இணைப்புகள்
தொகுகோட்டாறு மறைமாவட்ட அலுவல் இணையதளம் பரணிடப்பட்டது 2015-02-16 at the வந்தவழி இயந்திரம்
ஆலய அலுவல் இணையதளம் பரணிடப்பட்டது 2015-02-21 at the வந்தவழி இயந்திரம்