புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, ஆலப்புழா

புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி,ஆலப்புழா அல்லது புனித வளனார் மகளிர் கல்லூரி,ஆலப்புழா (St. Joseph's College, Alappuzha) என்பது, இந்தியாவின் கேரளா மாநிலத்தின், ஆலப்புழாவில் உள்ள ஒரு கத்தோலிக்க மகளிர் கல்லூரி ஆகும், கேரளா பல்கலைக்கழகத்துடன்[1] இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியானது [2] தேசிய நெடுஞ்சாலை 47, கான்வென்ட் சதுக்கத்தில் அமைந்துள்ளது.

புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, ஆலப்புழா
வகைஅரசு உதவி பெறும் சிறுபான்மை மகளிர் கல்லூரி
உருவாக்கம்1954; 70 ஆண்டுகளுக்கு முன்னர் (1954)
சார்புகேரளப் பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
தலைவர்அருட்திரு.பிலோமினா புத்தன்புறா
முதல்வர்முனைவர் உஷா ஆண்டனி
அமைவிடம்,
[[கேரளா]
,
688001
,
9°29′54″N 76°19′43″E / 9.4983484°N 76.3286493°E / 9.4983484; 76.3286493
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, ஆலப்புழா is located in கேரளம்
புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, ஆலப்புழா
Location in கேரளம்
புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, ஆலப்புழா is located in இந்தியா
புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, ஆலப்புழா
புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, ஆலப்புழா (இந்தியா)

1954 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி 142 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்களுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரியே, ஆலப்புழா மாவட்டத்தில் துவங்கப்பட்ட முதல் கல்லூரியாகும்.

இக்கல்லூரியில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வீட்டு அறிவியல், ஆங்கில இலக்கியம், ஆங்கிலத் தொடர்பாடல் , வணிகம் மற்றும் வரலாறு ஆகியவற்றில் இளங்கலைப் பட்டங்களையும், ஆங்கில மொழி மற்றும் இலக்கியம், இயற்பியல் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்களையும் பயிற்றுவித்து வருகிறது.

வரலாறு தொகு

கனோசியர்கள் எனப்படும் இத்தாலியின் வெரோனாவில் உள்ள கனோசியாவின் புனித மக்தலீனாவால் நிறுவப்பட்ட ஒரு உலகளாவிய கிறித்தவ தொண்டு அமைப்பாகும், இந்த கானோசிய சகோதரிகளின் சர்வதேச சபையான கனோசியன் தன்னார்வ மகள்கள் என்பதன் மூலம் 1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இக்கல்லுரியே, இந்தியாவில் இத்தொண்டு நிறுவனத்தின் மூலம் நிர்வகிக்கப்படும் ஒரே கல்லூரியாகும்.

திருவிதாங்கூரின் மன்னரான சித்திர திருநாள் பலராம வர்மா 1953 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி இக்கல்லூரிக்கு சட்டகக் கல்லை நிறுயுள்ளார். முதலில் பள்ளியாக அதிகாரப்பூர்வமாக ஜூலை, 1954 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. எம்.பெர்னாண்ட ரிவா என்பவர் இதன் முதல் முதல்வராவார்.

எம். பெர்னாண்டா ரிவாவின் அதிகாரத்தின் கீழ் இடைநிலைப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, 2004-05 காலத்தில் 50 ஆண்டுகள் என்பதைக்கடந்து, மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் குறிப்பிடத்தக்க கல்லூரியாக உருவாகியுள்ளது. [3]

படிப்புகள் தொகு

இளங்கலை படிப்புகள் தொகு

இளங்கலை அறிவியல் தொகு

  • கணிதம்
  • இயற்பியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • வேதியியல்
  • வீட்டு அறிவியல்

கலைப்பிரிவு தொகு

  • வரலாறு
  • ஆங்கில மொழி மற்றும் இலக்கியம்
  • ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத் தொடர்பாடல்

வணிகப்பிரிவு தொகு

  • நிதி & வரி

முதுகலை படிப்புகள் [4] தொகு

  • ஆங்கில மொழி மற்றும் இலக்கியம்
  • இயற்பியல்
  • ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரிக்கு 2018 ஆம் ஆண்டு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் மூன்றாவது சுழற்சியில் நான்கு அளவுகளில் 2.87 CGPA மதிப்பெண்ணுடன் பி+ தரம் வழங்கப்பட்டுள்ளது. [5]

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் தொகு

  • தேவி சந்தனா, நடனக் கலைஞர் மற்றும் சினிமா கலைஞர் [6]
  • ஜலஜா, மலையாள நடிகை
  • சரண்யா மோகன், நடிகை [7]
  • மினி ஆண்டனி, ஐஏஎஸ் அதிகாரி. [8]
  • எம்.மார்கிரெட் பீற்றர் கனோசிய சபையின் முன்னாள் தாய் ஜெனரல்
  • டெஸ்ஸி தாமஸ், வானூர்தி விஞ்ஞானி, 'இந்தியாவின் ஏவுகணைப் பெண்' [9]

மேற்கோள்கள் தொகு

  1. "பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரிகளின் பட்டியல்".
  2. "Official website".
  3. "St. Joseph's College". www.stjosephscollegeforwomen.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. James, Manju; Nisha, J.S.; Anoop, B.N.; Sebastian, R. Sanju (2014-10-15). "A Review on Automotive RADAR". i-manager's Journal on Instrumentation and Control Engineering 2 (4): 1–5. doi:10.26634/jic.2.4.3244. பன்னாட்டுத் தர தொடர் எண்:2321-113X. http://dx.doi.org/10.26634/jic.2.4.3244. 
  5. "Best Colleges in Kerala | Top Colleges & Universities in Kerala | ccedufinder.com". பார்க்கப்பட்ட நாள் 2023-12-31.
  6. "Remember Shalini's friend from Kannukkul Nilavu? Here's what Devi Chandana is up to". பார்க்கப்பட்ட நாள் 2023-12-31.
  7. "Saranya Mohan". https://timesofindia.indiatimes.com/topic/Saranya-Mohan. 
  8. "Smt. Mini Antony IAS | Kottayam District, Government of Kerala | India". பார்க்கப்பட்ட நாள் 2023-12-31.
  9. "Who was the Missile Women of India? Learn Here". பார்க்கப்பட்ட நாள் 2023-12-31.