புன்னையாபுரம் கற்பக நாச்சியார் அம்மன் கோயில்
புன்னையாபுரம் கற்பக நாச்சியார் அம்மன் கோயில் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம் , புன்னையாபுரம் என்னும் ஊரின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள முந்தல் மலையில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
அருள்மிகு கற்பக நாச்சியார் அம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தென்காசி |
அமைவிடம்: | முந்தல் மலை,புன்னையாபுரம், தென்காசி மாவட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | கடையநல்லூர் |
மக்களவைத் தொகுதி: | தென்காசி |
கோயில் தகவல் | |
தாயார்: | கற்பக நாச்சியார் அம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை குருபூஜை |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் கற்பக நாச்சியார் அம்மன் சன்னதியும், விஸ்வநாதர், விநாயகர், கருப்பசாமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]மேலும் இக்கோவிலில் வற்றாத முந்தல் மலை சுனை தீர்த்தமும்,முந்தல் அருவியும் உள்ளது.இந்த புனித தீர்த்தம் கொண்டு தான் தாயாரான கற்பக நாச்சியார் அம்மனுக்கும் மற்ற தெய்வங்களுக்கும் தினந்தோறும் அபிஷேகம் செய்யப்படுகிறது.மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சிறப்பு திருவிழாக்களையொட்டி இங்கிருந்து தான் தீர்த்தம் எடுத்து செல்லப்படுகிறது.[3]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடைபெறுகிறது.ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மூன்றாம் வார சனிக்கிழமை அன்று கோவிலில் அம்மனுக்கு நடைபெறக்கூடிய சிறப்பு குருபூஜை முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ கோவில் தீர்த்தம்