புபொப 55
புபொப 55 ( NGC 55)என்பது மெகல்லன் வகை தண்டு கருச்சுருள் அண்டம் ஆகும். இது சிற்ப விண்மீன் குழாமுக்கு வெளியே 70 இலட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. புபொப 300 என்று பட்டியலிடப்பட்டுள்ள வானுறுப்பும் இதுவும் உட் குழுவிற்கு உள்ள விண்மீன் பேரடைகளாக உள்ளன. ஏறக்குறைய இவை உட் குழுவிற்கும் சிற்ப விண்மீன் குழாமுக்கும் இடையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
புபொப 55 | |
---|---|
சமச்சீரற்ற விண்மீன் பேரடை புபொப 55, 3.6 மீட்டர் தொலைநோக்கியால் படம் பிடிக்கப்பட்டது. | |
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி) | |
விண்மீன் குழு | சிற்பம்[1] |
வல எழுச்சிக்கோணம் | 00h 14m 53.6s[2] |
பக்கச்சாய்வு | -39° 11′ 48″[2] |
செந்நகர்ச்சி | 129 ± 2 km/s[2] |
தூரம் | 7.2 ± 0.7 Mly (2.21 ± 0.21 Mpc)[3][4] [a] |
வகை | SB(s)m[2] |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 32′.4 × 5′.6[2] |
தோற்றப் பருமன் (V) | 7.87[5][6] |
ஏனைய பெயர்கள் | |
PGC 1014,[2] Caldwell 72 | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
அருகிலுள்ள பேரடைகள் மற்றும் குழு தொடர்பான தகவல்கள்
தொகுபுபொப 55 மற்றும் சுருள் வின்மீன் பேரடையான புபொப 300 ஆகியன அருகருகே ஒரே பெயரிலுள்ள விண்மீன் பேரடைகள் என்றும் இவை சிற்ப விண்மீன் குழாமின் உறுப்புகள் என்றும் பாரம்பரிய வழிமுறையிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் அண்மையில் நடபெற்ற தொலைவு கணக்கீடுகள் உண்மையில் இவ்விரண்டும் முன்புலத்திலேயே அமைந்துள்ளன என்று தெரிவிக்கின்றன.[7] அநேகமாக புபொப 55 மற்றும் புபொப 300 ஆகிய விண்மீன் பேரடைகள் இரண்டும் ஈர்ப்புவிசையால் பிணைக்கப்பட்ட பேரடைகள் எனக் கருதப்படுகிறது[4]
காட்சித் தோற்றம்
தொகுபுபொப 55 என்னும் பேரடை சமச்சீரற்று விளிம்புக்கு அருகில் தோன்றுகிறது என்றும் அகன்ற பரப்பு அதன் கூர்மையான தெற்கு முனையில் ஒருவிதமாக வளர்ந்து மூலையோடியும் காணப்படுவதாக வலைப்பின்னல் சமூகத்தின் உள்வான உற்றுநோக்கர்கள் கையேட்டில்[8] எழுதப்பட்டுள்ளது. மேலும் மூலையோடிய பகுதியின் தென்கிழக்கு நன்கு வளைந்தும் 4 அல்லது 5 மங்கலான முடிச்சுகளின் வரிசையுடனும், இவ்வளைவின் வடக்கு முனை கூர்மையாகவும் காணப்படுகிறது. ” தெற்கு வானின் தலைசிறந்த வான்கோள்களில் இதுவும் ஒன்று என்றும் கிட்டத்தட்ட பெரிய மெகல்லன் முகிலின் ஒரு சிறிய வடிவமிது ” என்றும் பர்னாம் குறிப்பிடுகிறார்[9]
குறிப்புரைகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑
R. W. Sinnott, editor (1988). The Complete New General Catalogue and Index Catalogue of Nebulae and Star Clusters by J. L. E. Dreyer. Sky Publishing Corporation and Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-933346-51-4.
{{cite book}}
:|author=
has generic name (help) - ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 55. பார்க்கப்பட்ட நாள் 2006-10-17.
- ↑ 3.0 3.1 Karachentsev, I. D.; Kashibadze, O. G. (2006). "Masses of the local group and of the M81 group estimated from distortions in the local velocity field". Astrophysics 49 (1): 3–18. doi:10.1007/s10511-006-0002-6. Bibcode: 2006Ap.....49....3K.
- ↑ 4.0 4.1 4.2 van de Steene, G. C.; et al. (2006). "Distance determination to NGC 55 from the planetary nebula luminosity function". Astronomy and Astrophysics 455 (3): 891–896. doi:10.1051/0004-6361:20053475. Bibcode: 2006A&A...455..891V.
- ↑ "SIMBAD-NGC55". SIMBAD Astronomical Database. பார்க்கப்பட்ட நாள் 2009-11-29.
- ↑ Armando, Gil de Paz; et al. (2007). "The GALEX Ultraviolet Atlas of Nearby Galaxies". Astrophysical Journal Supplement Series 173 (2): 185–255. doi:10.1086/516636. Bibcode: 2007ApJS..173..185G.
- ↑ I. D. Karachentsev et al. (2003). "Distances to nearby galaxies in Sculptor". Astronomy and Astrophysics 404 (1): 93–111. doi:10.1051/0004-6361:20030170. Bibcode: 2003A&A...404...93K.
- ↑ Jones, K. G. (1981). Webb Society Deep-Sky Observer's Handbook. Enslow Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89490-134-6. திற நூலக எண் 8249797M.
- ↑ Robert Burnham, Jr. (1978). Burnham's Celestial Handbook. Vol. III. New York: Dover. p. 1733. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-24065-7.
இவற்றையும் காண்க
தொகு- புபொப 4236 – விளிம்பிலுள்ள சுருள்விண்மீன் பேரடை
- புபொப 4631 – விளிம்பிலுள்ள சுருள்விண்மீன் பேரடை
வெளிப்புற இணைப்புகள்
தொகு- NGC 55 in Sculptor
- SEDS: Spiral Galaxy NGC 55 பரணிடப்பட்டது 2006-02-20 at the வந்தவழி இயந்திரம்
- புபொப 55 WikiSky இல்: DSS2, SDSS, GALEX, IRAS, Hydrogen α, X-Ray, Astrophoto, Sky Map, Articles and images