புரூசு சி. கீசன்

புவியியலாளர்

புரூசு சார்லசு கீசன் ( Bruce C. Heezen ; ஏப்ரல் 11, 1924 - சூன் 21, 1977) ஒரு அமெரிக்க புவியியலாளர் ஆவார்.[1] இவர் 1950 களில் மத்திய-அட்லாண்டிக் வரம்பை வரைபடமாக்க கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கடல்சார் வரைபடவியலாளரான மேரி தார்ப்புடன் பணியாற்றினார்.

புரூசு சார்லசு கீசன்
பிறப்பு(1924-04-11)ஏப்ரல் 11, 1924
விண்டன், அயோவா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புசூன் 21, 1977(1977-06-21) (அகவை 53)
துறைநிலவியல், கடலியல்
பணியிடங்கள்இலாமண்ட்-தோரதி புவியியல் ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள்அயோவா பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகடலடி நிலத்தோற்றம் இட அமைப்பியல்
விருதுகள்குல்லம் புவியியல் பதக்கம்(1973)

சுயசரிதை தொகு

கீசன் அயோவாவின் விண்டனில் பிறந்தார். தனது பெற்றோருக்கு ஒரே குழந்தையான, இவர் ஆறு வயதில் தனது பெற்றோருடன் அயோவாவின் மஸ்கடினுக்கு குடிபெயர்ந்தார். அங்கு 1942 இல் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1947 இல் அயோவா பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலையை முடித்தார். 1952 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும், 1957 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.

நிலப்படவரைவியலாளர் மேரி தார்ப்புடன் இவர் இணைந்து விரிவாகப் பணியாற்றினார்.[2] இவர்களது பணியானது கடலின் அடிப்பகுதியின் விரிவான நிலப்பரப்பு மற்றும் பல பரிமாண புவியியல் நிலப்பரப்பை வெளிப்படுத்தியது. மத்திய-அட்லாண்டிக் வரம்பு மற்றும் அதன் அச்சில் பிளவு பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்தது..[3] பூமி அறிவியலில் ஒரு கருத்தோட்டப் பெயர்வை ஏற்படுத்தியது, இது தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு மற்றும் கண்டப்பெயர்ச்சி கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது.[4] Eventually they discovered that not only was there a North Atlantic rift valley, but a mountain range with a central valley that spanned the earth.[4][5]

இறப்பு தொகு

கீசன் 1977 இல் நீர்மூழ்கிக் கப்பலில் ஐசுலாந்து அருகிலுள்ள மத்திய-அட்லாண்டிக் மலைப்பகுதியை ஆய்வு செய்ய ஆராய்ச்சி பயணத்தில் இருந்தபோது மாரடைப்பால் இறந்தார்.[6]

சான்றுகள் தொகு

  1. "Bruce C. Heezen". Physics Today 30 (11): 77. November 1977. doi:10.1063/1.3037805. http://www.physicstoday.org/resource/1/phtoad/v30/i11/p77_s2?bypassSSO=1. 
  2. Oreskes, Naomi, 2003, Plate Tectonics: An Insider's History Of The Modern Theory Of The Earth, Westview Press, p. 23, ISBN 0813341329
  3. O'Connell, Suzanne (August 8, 2020). "Marie Tharp's maps revolutionized our knowledge of the seafloor". The Washington Post. https://www.washingtonpost.com/science/marie-tharps-maps-revolutionized-our-knowledge-of-the-seafloor/2020/08/07/d9d112bc-d767-11ea-9c3b-dfc394c03988_story.html?hpid=hp_national1-8-12_oceanfloor-725pm%3Ahomepage%2Fstory-ans. 
  4. 4.0 4.1 Tharp, Marie (April 1, 1999). "Connect the Dots: Mapping the Seafloor and Discovering the Mid-ocean Ridge". Woods Hole Oceanographic Institute. பார்க்கப்பட்ட நாள் August 8, 2020.
  5. "Harry Hammond Hess | Encyclopedia.com". www.encyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  6. "Marie Tharp Bio". Woods Hole Oceanographic Institution. 2006-12-12. Archived from the original on 2007-01-08. பார்க்கப்பட்ட நாள் 2008-06-02.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூசு_சி._கீசன்&oldid=3722143" இலிருந்து மீள்விக்கப்பட்டது